11ராட்சி வார்டில் போட்டியிட்டு இந்தியா முழுவதும் ட்ரெண்ட்டாகியிருக்கிறார் அந்த பா.ஜ.க. வேட்பாளர். கோவை பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட குருடம்பாளையம் ஊராட்சி 9வது வார்டு உறுப்பினருக்கான தேர்தலில் தி.மு.க.வைச் சேர்ந்த அருள்ராஜ் கட்டில் சின்னத்திலும், அ.தி.மு.க.வைச் சேர்ந்த வைத்தியலிங்கம் சங்கு சின்னத்திலும், பா.ஜ.கவைச் சேர்ந்த கார்த்திக் கார் சின்னத்திலும் போட்டியிட்டனர்.

மோடிஜி இந்தியாவை வளர்த்துக் கொண்டிருக்கிறார். நமது ஊரை விட்டுவிடுவாரா? தமிழகம் மோடியால் ஒளிரும். எனவே எனக்கு வாக்களியுங்கள் என கார் சின்னம் கார்த்திக் காரில் நின்றுதான் ஓட்டு கேட்டார்.

வாக்கு எண்ணிக்கை நாள் 12-ந் தேதி வந்து சேர்ந்தது. 1551 வாக்குகள் உள்ள அந்த ஊராட்சியில் 913 வாக்குகளே பதிவாகின.

கட்டில் அருள்ராஜ் 387 வாக்குகள் பெற்று வெற்றியடைய, 196 வாக்குகளில் சங்கு வைத்தியலிங்கம் தோல்வியடைந்தார். கார் கார்த்திக்கோ... ஒரே ஒரு ஓட்டு மட்டுமே பெற்று பா.ஜ.க.வின் தமிழக செல்வாக்கை எடுத்துக்காட்டினார். இது சமூக வலைத்தளங்களில் ஒத்த ஓட்டு பி.ஜே.பி. என வைரலாக, இந்தியா முழுக்க குருடம்பாளையம் ஊராட்சி ஃபேமஸாகிப் போனது.

Advertisment

dd

பி.ஜே.பி.யின் ஏழரை ஆண்டு கால சாதனை இந்த ஒத்தை ஓட்டில்தான் உள்ளது என பலரும் சொல்லிக்கொண்டிருந்தாலும்... சற்றும் சளைக்காத பி.ஜே.பி. வேட்பாளர் கார் கார்த்திக், 9-வது வார்டில் போட்டியிட்ட எனக்கு எனது குடும்பத்தார் கூட ஓட்டு போடவில்லை எனப் பிரச்சாரம் செய்கிறார்கள். எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் 4-வது வார்டில்தான் ஓட்டு உள்ளது. எனது குடும்ப சூழல் காரணமாக என்னால் சரிவர பிரச்சாரம் செய்ய முடியவில்லை. இருந்தாலும் எனக்கு ஒரு ஓட்டு கிடைத்திருக்கிறது, அதையே நான் வெற்றியாக எடுத்துக் கொள்ளுகிறேன். அடுத்த தேர்தலிலும் போட்டியிட்டு தாமரையை அமோகமாக வெற்றி பெற வைப்பேன் என பேட்டியளித்தார். அந்த ஒரு ஓட்டைப் போட்ட அந்த நபர் யார்? அவருக்கு சிலை வைக்கவேண்டும் எனத் தேடிக்கொண்டிருக்கிறார்கள் சக கட்சிக்காரர்கள்.

இதற்கிடையே, கொங்குநாடு -ஒத்த ஓட்டு என பா.ஜ.க.வை நெட்டிசன்கள் கிழித்தெறிய, இதுபற்றி கருத்து தெரிவித்த பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை, அடுத்தமுறை கார்த்திக்குக்கு தாமரை சின்னத்தில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படும் என்றார்.

Advertisment