ள்ளி வகுப்பறைக்குள் ஒரு சிறிய மாணவனை இரண்டு பெண்மணிகள் துரத்துவதும், அதில் ஒரு பெண்மணி, துடைப்பத்தால் அந்த சிறுவனை அடிப்பதுமான வீடியோவைப் பார்த்த ஒவ்வொருவரும் பதறிவிட்டார்கள். யார் இவர்கள்? எதற்காக அந்த மாணவனை அடிக்கிறார்கள் என்கிற கேள்வியெழுந்தது.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த செங்குணம் ஊராட்சிக்கு உட்பட்ட கொல்லமேடு கிராமத்தில் சுமார் 300 குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையில் 46 மாணவ- மாணவிகள் படிக்கின்றனர். அப்பள்ளியில் அதே ஊரைச்சேர்ந்த ராமசாமி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்கிற மாணவன் ஐந்தாம் வகுப்பு படித்துவருகிறான். அந்த சிறுவனைத்தான் அந்த பெண்மணிகள் துரத்தி துரத்தி கோபத்தில் அடித்துள்ளனர். நாம் அந்த கிராமத்துக்கு நேரிலேயே சென்று விசாரித்தோம். பள்ளியில் சமையலராக இருப்பவர் லட்சுமி, சமையல் உதவியாளராக இருப்பவர் முனியம்மாள். ஏப்ரல் 2-ஆம் தேதி மதியம் மாணவ- மாணவிகளுக்கு மதிய உணவோடு முட்டை வழங்கப்பட்டுள்ளது. சில மாணவ- மாணவிகளுக்கு முட்டை இல்லை எனச்சொல்லியுள்ளனர் சமையலர்கள். அப்போது மாணவன் ராமசாமி, "நீங்க எடுத்து வச்சிருப்பிங்களே அதைத் தாங்க ஆயா'' என்றுள்ளான். "முட்டை இல்ல போடா'' என கோபமாகச் சொல்லியுள்ளார்.

tm

அப்போது அங்கிருந்து வந்தவன், சில நிமிடங்களில் தன் நண்பனுடன் மீண்டும் சமைய லறைக்குச் சென்றுள்ளான், அங்கே ஒரு சிறிய குண்டானில் அவித்த முட்டை மறைத்து வைத் திருப்பதை தன்னுடன் வந்த நண்பனிடம் காட்டி யுள்ளான். அப்போது லட்சுமியும், முனியம்மாவும் அங்கு வந்துள்ளனர். "இதோ முட்டை இருக்கு, எதுக்கு முட்டை இல்லைன்னு சொல்றீங்க?'' எனக் கேட்டுள்ளான் ராமசாமி. இதை அங்கே சாப்பிட்டுக்கொண்டிருந்த சிறிய பிள்ளைகள் உட்பட ஆசிரியர்களும் வேடிக்கை பார்த்துள்ளனர். இதனால் அவமானமான லட்சுமி, "... குடிச்சவனே, உன்னை தொடப்பத்தால அடிக்கறேன்''” என அசிங்கமாகத் திட்டியபடி அங்கிருந்த துடைப் பத்தை எடுத்துக்கொண்டு அடிக்கப் பாய்ந்துள் ளார். அந்த சிறுவன் பயந்துபோய், அங்கிருந்து வகுப்பறைக்குள் ஓடி டீச்சரிடம் "காப்பாத்துங்க மேடம்'' என அழுதான். அந்த டீச்சர், சமையலர் இருவரையும் தடுக்க முயல, அவரையும் திட்டி விட்டு அந்த பெண்மணிகள் இருவரும் வகுப்பறைக் குள் வைத்தே அச்சிறுவனை துடைப்பத்தால் அடித்து அசிங்கமாகத் திட்டினர். இதனை ஆசிரியர் புளோராவின் செல்போனில் பிள்ளைகள் வீடியோ எடுத்து வாட்ஸ்அப் மூலம் பரப்பினர். "கீழ்சாதிக்காரி அவனை தூண்டிவிடறியா?' என அந்த ஆசிரியையும் திட்டினார் என்றார்கள்.

அதே பள்ளியில் படிக்கும் சில குழந்தைகளி டம் கேட்டபோது, "தினமும் அந்த ஆயா கொஞ்சம் பேருக்குதான் முட்டை தருவாங்க, முட்டை தாங்கன்னு கேட்டாலோ, இன்னும் கொஞ்சம் சோறு தாங்கன்னு கேட்டாலோ அசிங்கமா திட்டுவாங்க, இதுக்கு முன்னாடிகூட 4, 5 பசங்கள இப்படி அடிச்சிருக்காங்க''’என்றார்கள்.

Advertisment

பெற்றோர்கள் யாராவது வந்து, "என் புள்ளைய ஏன் திட்டுனீங்க?'' என கேள்வி கேட் டால், சமையலர்கள் அதே ஊரைச் சேர்ந்தவர்கள் என்பதால், "நீ பெரிய அவளா, இவளா?' என படுகொச்சையாகத் திட்டுவார்கள். அதோடு அக்கிராமத்தில் இருப்பவர்கள் பெரும்பான்மையாக ஒரே சமூகத்தினர் உள்ளடங்கிய கிராமம். ஒருவருக்கொருவர் விவசாயத்தில் உதவவேண்டும் போன்ற காரணங்களால் அந்த சமையல் பெண்மணிகளின் வசவை பெற்றோர் கண்டும் காணாமல் விட்டுள்ளனர்.

tm

ஏப்ரல் 2-ஆம் தேதி இந்த சம்பவம் பள்ளிக்குள் நடந்துள்ளது. பள்ளித் தலைமையாசிரியர் சரவணன் உட்பட யாருமே தங்களது உயரதிகாரி களுக்கு புகார் தரவில்லை. ஏப்ரல் 4-ஆம் தேதி வீடியோ வெளியாகி, உயரதிகாரிகள் கேள்வி எழுப் பிய பின்பு, மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள், சத்துணவு பிரிவு அதிகாரிகள், சமூகநலத் துறையின் குழந்தைகள் நல அலுவலர்கள், போளூர் பி.டி.ஓ. ஆகியோர் விசாரணை நடத்தினர். அதிகாரிகள் இவ்விவகாரத்தை முதலில் நீர்த்துப்போகச் செய்ய முயன்றனர். பிரச்சனை பெரிதானபின்பே, சமையலர் மற்றும் உதவியாளரை சஸ்பெண்ட் செய்தனர். பள்ளி ஆசிரியர் புளோராவிடம் புகார் வாங்கி, இருவரையும் கைதுசெய்து சிறையிலடைத்தது போளூர் காவல்துறை.

Advertisment

இதுகுறித்து நம்மிடம் பேசிய சமூக ஆர்வலர் கள், “"கல்வி உரிமைச் சட்டம் பிள்ளைகளை ஆசிரியர்களே அடிக்கக்கூடாது என்கிறது. பள்ளிக் குள் மாணவர்களுக்கு எந்த பாதிப்பு ஏற்பட்டாலும் தலைமை ஆசிரியரும், வகுப்பாசிரியரும்தான் பொறுப்பு. அந்த சிறுவனை சமையலர்கள் இருவரும், வகுப்பறைக்குள் துடைப்பத்தால் துரத்தி துரத்தி அடித்து அவமானப்படுத்தியதைப் பார்க்கும்போது உடம்பெல்லாம் பதறிவிட்டது. இதனால் உளவியலாக அப்பிள்ளைகள் பெரியளவு பாதிக்கப்பட்டிருப்பார்கள். வகுப்பில் கேள்வியே கேட்கக்கூடாது என்கிற எண்ணமே அவர்களுக்கு வந்திருக்கும். கிராமப்புற அரசுப் பள்ளிகளில் பிள்ளைகளை பாத்ரூம் கழுவ வைப்பது, வகுப்பறை களை பெருக்க வைப்பது, ஆசிரியர்களின் சாப்பாட்டு தட்டுகளை கழுவச் செய்வது போன்றவற்றை மக்கள் கண்டும் காணாமல் போவதாலே, ஏன் முட்டை தரவில்லை எனக் கேட்ட சிறுவனை, சமையலர்கள் வகுப்பறைக்குள் வந்து தாக்குமளவுக்கு வந்துள்ளது''’என கவலையை வெளிப்படுத்தினர்.

படங்கள்: எம்.ஆர்.விவேகானந்தன்