இந்தியாவில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான என்.ஆர்.ஐ. கோட்டாவில் மோசடி நடப்பது புதுச்சேரி மாநிலத்தில் கண்டறியப்பட்டு 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் மீது புகார் தரப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களிலும் இதுபோல் மோசடி நடந்திருக்குமென்பதால், இதனை சி.பி.ஐ. தீவிரமாக விசாரிக்க வேண்டுமென்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/NRIcertificate-medicalstude.jpg)
தற்போது அது உண்மையென்று நிரூபிப்பதுபோல் தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலிங்கில் தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. 22 சுயநிதி மருத்துவக் கல்லூரிகளும், 4 தனியார் மருத்துவக் கல்லூரிகளும் உள்ளன. அரசு கல்லூரிகளில் 3,871 எம்.பி.பி.எஸ். இடங்களும், தனியார், சுயநிதிக் கல்லூரிகளில் 3,830 எம்.பி.பி.எஸ். இடங்களும் உள்ளன. இதில் மேனேஜ்மென்ட் கோட்டாவில் ஒதுக்கப்பட்ட இடங்களில் என்.ஆர்.ஐ. -பி.ஐ.ஓ. - ஓ.சி.ஐ. கோட்டாவிற்கான ஒதுக்கீடாக 593 இடங்கள் உள்ளன. இதற்கான கலந்தாய்வு ஆன்லைன் வழியாக 4 கட்டங்களாக நடந்து, மாணவர்கள் சேர்க்கையும் முடிந்தது. காலியாக இருந்த 7 எம்.பி.பி.எஸ் இடங்கள், கூடுதலாக ஒதுக்கப்பட்ட 100 இடங்கள் என 107 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கும், 28 பி.டி.எஸ். இடங்களுக்கும் சிறப்பு கலந்தாய்வு நவம்பர் 25 முதல் 28ஆம் தேதி வரை நடைபெற்று முடிந்தது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/NRIcertificate-medicalstud.jpg)
சிறப்பு கலந்தாய்வுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநரக தேர்வுக்குழுவின் செயலாளர் மருத்துவர் அருணாலதா, "இந்தாண்டு என்.ஆர்.ஐ. கோட்டாவில் விண்ணப்பித்திருந்தவர்களின் ஆவணங்களை வெளியுறவுத்துறைக்கு அனுப்பி வைத்திருந்தோம். அந்த ஆவணங்களை ஆய்வுசெய்த வெளியுறவுத்துறை, 6 மாணவர்கள் போலியான என்.ஆர்.ஐ. சான்றிதழ்கள் வழங்கியுள்ளார்கள் என கடிதம் அனுப்பியுள்ளனர். இதில் 3 மாணவர்களுக்கு கல்லூரிகள் ஒதுக்கப் பட்டு அட்மிஷன் கடிதம் தரப்பட்டிருந்தது. மற்ற 3 மாணவர்களுக்கு கல்லூரி ஒதுக்கப் படாமல் இருந்தது. போலி ஆவணங்கள் தந்தது கண்டறியப்பட்டதன் அடிப்படையில் 6 மாணவர்களின் சேர்க்கை ரத்து செய்யப்பட்டது. அதேபோல் முதுகலை மருத்துவப் படிப்பு களுக்கான எம்.டி., எம்.எஸ். போன்ற படிப்புகளுக்கு விண்ணப்பித்திருந்தவர்களின் ஆவணங்கள் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. அதில் என்.ஆர்.ஐ. கோட்டாவில் விண்ணப்பித்திருந்த மருத்துவர்களின் ஆவணங்கள் வெளியுறவுத் துறைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அதில் சிலர் தந்த தூதரகச் சான்றிதழ்கள் போலியானவை எனத் தெரியவந்துள்ளது. அதுகுறித்து சட்ட நடவடிக்கை எடுக்கக் கருத்து கேட்டுள்ளோம்'' என்றார்.
தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை 6 பேர் போலியாக என்.ஆர்.ஐ. சான்றிதழ்களைத் தந்து நடவடிக்கைக்கு ஆளாகியிருப்பது உறுதியாகியுள்ளது. தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் வட்டாரத்தில் விசாரித்ததில், "கனடா, துபாய், ரியாத், சௌதிஅரேபியா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் நாடுகளின் தூதரகங்கள் தந்ததுபோல் இந்த சான்றிதழ் கள் உருவாக்கப்பட்டுள்ளன என்கிறார்கள். அதேபோல் முதுகலை மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பித்த இளநிலை மருத்துவர்களில் 44 பேர் போலியான சான்றிதழ்கள் தந்துள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டில் என்.ஆர்.ஐ. சான்றிதழ் வழியாக மோசடி நடந்திருப்பது முதல்முறையாகக் கண்டறியப்பட்டுள்ளது. போலிச் சான்றிதழ்கள் தந்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுப்ப தெனத் தெரியாமல் மருத்துவக் கல்வி இயக்குந ரகம் குழப்பத்திலுள்ளது. காரணம், என்.ஆர்.ஐ. கோட்டாவில் இப்படி மோசடி செய்வார்கள் எனத் தெரியாததால் அதற்கான நடவடிக்கை, தண்டனை குறித்து விதிகள் வகுக்கப்படவில்லை. அடுத்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு முன்பாக என்.ஆர்.ஐ. கோட்டாவில் தவறு செய்தால் அவர்கள்மீது என்ன நடவடிக்கை எடுப்பதென்ற நெறிமுறைகளை உருவாக்க முடிவு செய் துள்ளனர். போலிச் சான்றிதழ்கள் தந்தவர்கள் மீதான நடவடிக்கை தொடர்பாக கருத்துக் கேட்டு சட்டத்துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது'' என்கிறார்கள்.
புதுச்சேரியில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த விவகாரம், தமிழ்நாட்டிலும் வெளி வந்துள்ளது. இந்த விவகாரத்தை தனியாக கமிட்டி அமைத்து தீவிரமாக விசாரித்தால் இன்னும் பலரும் சிக்குவார்கள் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
-கிங்
________________
மருத்துவர்கள் அதிருப்தி!
தமிழ்நாட்டில் பிரசவத்தின்போது ஒரு லட்சத்துக்கு 54 இறப்பு நடக்கிறது. இந்த இறப்பையும் குறைக்க அவசரகாலக் கட்டுப் பாட்டு அறையை (வார் ரூம்) புதியதாகத் தொடங்கியுள்ளது தமிழ்நாடு சுகாதாரத் துறை. இதில் 7 மருத்துவர்கள் மற்றும் வல்லுநர்களைக் கொண்ட குழு 24 மணி நேரமும் செயல்படும். செங்கல்பட்டு, திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், மயிலாடுதுறை, திண்டுக்கல், தேனி, நாமக்கல் மாவட்டங்களில் பிரசவத்தின்போது இறப்பு அதிகமாக இருக்கிறது எனக் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. இதுகுறித்த ஆய்வுக்கூட்டத்தை தேசிய நலவாழ்வுத் திட்ட இயக்குநர் அருண்தம்புராஜ் ஐ.ஏ.எஸ்., கடந்த வாரம் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலமாக நடத்தியுள்ளார். இதில் மருத்துவக் கல்லூரி களின் முதல்வர்கள், மகப்பேறு துறைத்தலை வர்கள் மற்றும் பேராசிரியர்கள், மாவட்ட அளவிலான ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர்கள், மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர்கள் கலந்துகொண்டனர். மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை உள்ளதாக அதிகாரிகள் சொன்னபோது, "அதெல்லாம் சொல்லாதிங்க, உங்களால வேலை செய்யமுடியலன்னா வேலையை விட்டுப் போய்டுங்க, நீங்க என்ன கூலிக்கா வேலை செய்றீங்க, அரசு சம்பளம் வாங்கிக்கிட்டு தானே வேலை செய்யறிங்க'' எனக் கடுமையாக அருண்தம்புராஜ் பேசியதாகக் குற்றம்சாட்டுகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-12/nricertificate-medicalstud-.jpg)