tt

2024 ஜூன் 05-07 நக்கீரன் இதழில், “"மாயமான மீனாட்சி அம்மனின் நகைகள்! ஆர்.டி.ஐ.யில் பகீர் தகவல்கள்!'’’ எனற தலைப்பில் சமூக ஆர்வலர் டில்லிபாபு கொடுத்த ஆதாரங்களின் அடிப்படையில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இதனை மறுத்து மதுரை மீனாட்சியம்மன் கோயில் இணை ஆணையர் கிருஷ்ணன் கடிதம் அனுப்பியுள்ளார். அதில்:

Advertisment

""டில்லிபாபு, அம்மனின் வைரக் கிரீடம் திருடப்பட்டுவிட்டதாக தெரிவித்துள்ளது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானதாகும். அம்மனின் வைரக் கிரீடங்கள் இரட்டைப் பூட்டு முறையிலுள்ள கருவூலத்தில் வைத்து பாதுகாக்கப்படுகின்றன. 2008-ஆம் ஆண்டில் இத் திருக்கோவிலுக்கு காணிக்கையாக வரப்பெற்ற நகைகள் உருக்கி சுத்த தங்கமாக மாற்றப்பட்டது. இத்தத் தரவுகளனைத்தும் திருக்கோயில் நகைகள், விலை உயர்ந்த வகைகள் மதிப்பீடு பதிவேடு எண் 4, பக்கம் எண் 2-ல் உரிய வகையில் பதிவுசெய்யப்பட்டு அப்போதைய ஆணையர், செயல் அலுவலர், துணை ஆணையர், நகை சரிபார்ப்பு அலுவலர், நகை மதிப்பீட்டு வல்லுநர் ஆகியோரால் சரி பார்க்கப்பட்டு கையொப்பமிடப்பட்டுள்ளது. 2022-ஆம் ஆண்டின் ஜூன் மாதத்துடன் முடிவடைந்த பசலி ஆண்டு 1631 முடிய திருக்கோவில் கணக்குகள் மீதான தணிக்கைகள் முழுமையாக முடிவடைந்துவிட்டன. இத்தணிக்கை அறிக்கையில் இடம்பெற்றிருந்த பத்திகள் தொடர்பான விளக்கங்கள் அடங்கிய ஆவணங்களை தணிக்கை கூட்ட அமர்வில் தாக்கல் செய்யப்பட்டதன் அடிப்படையில், பட்டியலில் இடம்பெற்றிருந்த தணிக்கை தடைகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன. தணிக்கை தடைநீக்கம் செய்யப்பட்ட பின், அதற்கு முன்பு தணிக்கை அருகில் இடம்பெற்றிருந்த பத்திகளைக் குறிப்பிட்டு செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

Advertisment

கோவிலுக்குச் சொந்தமான இடங்கள் சிலவற்றில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு உரிய சட்டபூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2018-ஆம் ஆண்டில் இத்திருக்கோயிலில் செல்லத்துரை இணை ஆணையராக பணியாற்றியபோது பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது முற்றிலும் தவறானது''’என குறிப்பிட்டுள்ளார்.