பொங்கல் பரிசுத் தொகுப்பில் இந்தாண்டு 2,000 ரூபாய் கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பில் இருந்த நிலையில், ரொக்கப்பணம் இல்லாமல் பரிசுத் தொகுப்பு வெளியாகியிருப்பது இல்லத்தரசிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து அரசின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டிருப்பதால், நிதி நிலைமையை மீண்டும் ஆராய்கிறது அரசு மேலிடம்.
வரலாறு காணாத அளவுக்கு நிதி நெருக்கடிகள் தி.மு.க. அரசை மிரட்டுவதும், நிதித்துறை அதிகாரிகளின் அனுபவமின்மையும்தான் இதற்கு காரணம் என்கிற குற்றச்சாட்டுகள் கோட்டையில் எதிரொலிக்கின்றன.
அரசின் கஜானா எப்படி இருக்கிறது என கோட்டையில் விசாரித்தோம்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/hemachandran.jpg)
நம்மிடம் பேசிய நிதித்துறையினர், "அ.தி.மு.க. அரசு ஆட்சியை விட்டு இறங்கியபோது தமிழகத்தின் கடன் சுமை மட்டும் 5.70 லட்சம் கோடி. இந்த நெருக்கடியான சூழலில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த தி.மு.க. அரசு, கடன் சுமையை குறைப்பதற்காக, பஸ் கட்டணம், பால் கட்டணம், மின் கட்டணம், பத்திரப்பதிவு கட்டணம், மதுபானங்கள் விலை, சொத்து வரி என பலவற்றையும் உயர்த்தியது. ஆனாலும், அரசு கஜானா நிரம்பவில்லை. கடன் வாங்குவதிலேயே குறியாக இருந்தது அரசு.
இதனால் கடந்த நிதியாண்டில் கடன் சுமை 6.53 லட்சம் கோடியாக அதிகரித்தது. அந்த கடன், நடப்பு நிதியாண்டில் (ஏப்ரல் 2023, மார்ச் 2024 வரை) 7.26 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என எங்கள் உயரதிகாரிகள் மதிப் பிட்டிருந்தனர். ஆனால், நடக்கும் சூழல்களைக் கணக்கிடும் போது, இப்போதே 7.53 லட்சம் கோடியாக உயர்ந் திருக்கிறது. அதாவது ஒரே வருடத்தில் 1 லட்சம் கோடி ரூபாய் கடன் சுமை அதிகரித்துள்ளது. இதனால் இந்தியாவிலேயே கடன் வாங்கிய மாநிலங்களில் தமிழகம்தான் முதலிடம்’என்று விவரிக்கின்றனர்.
நிதித்துறையில் அனுபவம் வாய்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சிலரிடம் நாம் விவாதித்தபோது, ‘’"மாநில அரசுகளுக்கு இப்படி கடன் சுமை அதிகரிப்பது குறித்து கவலை தெரிவித்திருந்த இந்திய ரிசர்வ் வங்கி, அண்மையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், கடன் பத்திரங்கள் மூலம் 37,000 கோடி ரூபாய் கடன் பெற தங்களிடம் தமிழக அரசு அனுமதி பெற்றிருப்பதாகச் சொல்லியிருக்கிறது ரிசர்வ் வங்கி.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/hemachandran1.jpg)
மார்ச் மாதத்திற்குள் இந்தக் கடனை தமிழக அரசு வாங்கும். ஏற்கனவே நடப்பு நிதியாண்டில் மட்டும் 53,000 கோடி ரூபாய் கடன் பத்திரங்கள் மூலம் கடன் வாங்கியிருக்கும் தமிழக அரசு, இன் னும் 37,000 கோடி கடன் வாங்குவது அரசின் கஜானாவை கேள்விக்குறியாக்கும். ஆனால், கடன் வாங்காமல் இன்னும் இரண்டரை ஆண்டுகளுக்கு தி.மு.க. அரசு ஆட்சியை நடத்துவது கடினம். அந்தளவுக்கு நிதிச்சுமையை உயர்த்தி வைத்துள்ளனர் நிதித்துறை அதிகாரிகள்.
தற்போதைய தமிழக அரசின் நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரனின் அனுபவமின்மை யால் அரசின் நிதி நிர்வாகம் மோசமடைந்து வருகிறது. இதுதவிர, அவர் எடுத்துள்ள சில முடிவுகள், அரசுக்கு மிகப்பெரிய நிதி ஆபத்தை விளைவிக்கப் போகிறது.
குறிப்பாக, 1 கோடி மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்துக்காக, நடப்பு நிதியாண்டில் செப்டம்பர் முதல் மார்ச் வரையிலான 7 மாதங்களுக்கு மட்டும் மாதம் 1000 கோடி ரூபாய் என 7,000 கோடி ரூபாய் ஒதுக்க பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்திற்கான செலவினங்கள் குறித்து ஆழமான சிந்தனை உதயச்சந்திரன், முருகானந்தம் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு இல்லாததால், 1 கோடி மகளிர் எண்ணிக்கை ஒன்றரைக் கோடியாக உயர்ந்தது. அதிகரித்துள்ள அந்த எண்ணிக்கையை குறைக்க ஏகப்பட்ட தவறுகள் செய்தனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/hemachandran2.jpg)
7,000 கோடி தேவைப்படும் என பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிலையில் அதற்கான வருவாயை எங்கிருந்து பெறுவது? வழி தெரியவில்லை. இந்த சூழலில், மிக்ஜாம் புயல் மற்றும் தென்மாவட்டங்களில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகளைச் சமாளிக்க மக்களுக்கு 6,000 ரூபாய் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்பட்டது. இதற்கெல்லாம் நிதியை எங்கே பெறுவது? மத்திய அரசும் போதிய நிதி உதவியை செய்யவில்லை.
அதனால், பொதுத்துறை நிறுவனங்களான கார்ப்பரேசன்கள், போர்டுகள் மற்றும் மாநகராட்சி கள் ஆகியவற்றில் செலவிடப்படாமல் இருக்கும் 6 லட்சத்து 900 கோடி நிதியை அரசிடம் உடனடி யாக ஒப்படைக்கச் சொல்லி ஆணை பிறப்பித் துள்ளார் உதயச்சந்திரன். மேலும், கார்ப்பரேசன் களும் போர்டுகளும் தங்களுக்கான செலவுகளை இனி அவர்களே செலவு செய்யக்கூடாது என்றும், அவர்களுக்கு பணம் தேவை எனில், அரசின் கருவூலத்தில் செக் (காசோலை) ப்ரசண்ட் பண்ணி, அரசு அதிகாரிகள் டிக் அடித்தால் மட்டுமே பணம் கிடைக்கும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் கார்ப்பரேசன்கள் துவக்கப்பட்ட அடிப்படைக் கொள்கையே தகர்ந்துபோயுள்ளது.
இதுதவிர, பொதுத்துறை நிறுவனங்களில் அரசின் பங்குகளுக்கு கிடைக்கும் டிவிடெண்ட் (ஈவுத் தொகை) தொகையில் 90 சதவீதத்தை முன்னதாகக் கணக்கிட்டு உடனடியாக நிதித்துறை யிடம் ஒப்படைக்க வேண்டுமென்றும், பொதுத் துறை நிறுவனங்களின் அவசரத் தேவைக்காக வைத்திருக்கும் ரிசர்வ் தொகையையும், மத்திய அரசால் ஒவ்வொரு துறையிலும் உருவாக்கப்பட்ட சமூகப் பொறுப்பு திட்டங்களுக்கான நிதியையும் அரசிடம் ஒப்படைக்க வலியுறுத்தியுள்ளார் உதயச்சந்திரன்.
இவைகளெல்லாம், அரசின் நிதி நெருக் கடியை சமாளிக்க ஆரோக்கியமான வழிகள் கிடையாது. உதயச்சந்திரனின் இத்தகைய முடிவுகளால் மிக விரைவில் மிக மோசமான நிதி நெருக்கடியை இந்த பொதுத்துறை நிறுவனங்கள் சந்திக்கப் போகின்றன.
இதுமட்டுமல்லாமல், தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை தூக்கி நிறுத்து கிறோம்; உள்கட்டமைப்பில் 1 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைவதே நம் இலக்கு என்றெல்லாம் முதல்வர் ஸ்டாலினை நம்ப வைத்திருக்கும் உதயச்சந்திரன், தமிழக அரசின் வங்கி சாரா நிதி நிறுவனங்களை ஒன்றிணைத் திருக்கிறார் (மெர்ஜர்). இது மோசமான விளைவுகளைத் தரப்போகிறது.
அதாவது, தமிழ்நாடு பவர் ஃபைனான்ஸ் அண்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் டெவலப்மெண்ட் கார்ப்பரேசன், தமிழ்நாடு போக்குவரத்து டெவலப்மெண்ட் ஃபைனான்ஸ் கார்ப்பரேசன், தமிழ்நாடு நகர்ப்புற நிதி உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் (டுஃபிட்கோ), தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக்கழகம் (டிட்கோ) ஆகிய 4-ம் அரசுக்கு சொந்தமான வங்கி சாரா நிதி நிறுவனங்கள். இவை பொது மக்களிடமிருந்து நிதி வசூலித்து வருகின்றன.
குறிப்பாக, ஓய்வுபெற்ற மத்திய -மாநில அரசு ஊழியர்கள், தங்கள் பிள்ளைகளின் திருமணச் செலவு, உயர்கல்வி செலவு, எதிர்கால தேவை ஆகியவற்றிற்காக இந்த நிறுவனங்களில் தங்கள் பணத்தை டெபாசிட் செய்து சேமித்து வைத்துள்ளனர். இந்த டெபா சிட்டுகளை குறிவைத்தே அரசின் நிதிநெருக்கடியை சமாளிக்க இந்த நிறுவனங்களை நிதித்துறையின் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இணைக் கும் முடிவை எடுத்துள்ளார் உதயச்சந்திரன்.
முதல்கட்டமாக, தமிழ்நாடு பவர் ஃபைனான்ஸ் டெவலப்மெண்ட் கார்ப்பரேச னையும், தமிழ்நாடு போக்குவரத்து டெவலப் மென்ட் ஃபைனான்ஸ் கார்ப்பரேசனையும் ஒன்றிணைத்திருக்கிறார்.
இதன்மூலம், இந்த நிறுவனங்கள் கையாளும் பொது நிதியை, இனி அரசின் நிதித்துறை கையாளும். அப்போது, நிதி நெருக்கடியை சமாளிக்க பொது நிதியை கபளீகரம் செய்துகொள்ளும். இந்த பொது நிதி என்பது ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் மற்றும் மக்களின் பணம். அந்த வகையில், இந்த பணத்தை அரசு எடுத்துக்கொண்டால், தங்களுக்குத் தேவையான நேரத்தில் தங்களின் பணத்தை எடுத்துக்கொள்ள முடியாது; வட்டி பணமும் சரியாக வரவு வைக்க மாட்டார்கள் என்கிற சந்தேகம் அரசு ஊழியர்களுக்கு வந்திருக்கிறது.
அரசு ஊழியர்களின் புதிய ஓய்வூதிய திட்டத்திற்காக பிடிக்கப்படும் தொகைக்கு இப்போது வரைமுறையான கணக்கு வழக்குகளை அரசு காட்ட மறுப்பதே அவர்களின் சந்தேகத் துக்கு ஒரு சான்று. இந்த சந்தேகத்தால் தங்களின் டெபாசிட் தொகையை இப்போதே எடுத்துக் கொள்ள முயற்சித்து வருகிறார்கள் அரசு ஊழியர்கள்.
இந்த நிலையில், பொது நிதியை கையாளும் மேற்கண்ட நிறுவனங்களை ஒன்றிணைத்து அதன் அதிகாரத்தை நிதித்துறை எடுத்துக்கொள்வது ஆபத்தான போக்கு. இதன் விளைவுகள் இப்போது தெரியாது; அடுத்த 6 மாதத்தில் மெல்ல மெல்ல தலைதூக்கும். அப்போது நிதித் துறை செயலாளர் உதயச்சந்திரனும், முதல்வரின் செயலாளர் முருகானந் தமும் தப்பித்துக் கொள்வார்கள். ஆனால், நிதிச்சுமையில் மாட்டிக் கொண்டு முழிக்கப்போவதும் கெட்டபெயரை எதிர்கொள்ளப் போவதும் தி.மு.க. அரசும் முதல்வர் ஸ்டாலினும்தான்''‘என்று சுட்டிக்காட்டுகிறார்கள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்.
இப்படிப்பட்ட சூழலில்தான் பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரொக்கப்பணம் கொடுக்காமல் தவிர்க்க நினைத்துள்ளது நிதித்துறை. உதயச்சந்திர னுக்கு நெருக்கமான ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உட்பட பலரும் தங்களின் அறையை கோடிக்கணக்கில் செலவிட்டு புதுப்பித்துக்கொள்கிறார்கள். ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தங்களின் அறைகளுக்காக செலவிடப்படும் கோடிகளைத் தடுத்திருந்தாலே பொங்கல் பரிசில் 2,000 ரூபாய் ரொக்கப்பணம் கொடுத்திருக்க முடியும்.
ஐ.ஏ.எஸ்.களின் ஆடம்பரங்களைக் குறைக்க நடவடிக்கை எடுக்காத உதயச்சந்திரன் போன்ற அதிகாரிகள், மக்கள் பணத்தை சூறையாட மட்டும் மறப்பதில்லை!
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-01/hemachandran-t.jpg)