"நான் நித்யானந்தா தலைமை தாங்கும் ஸ்ரீகைலாசா நாட்டின் அமைச்சராக உள்ளேன். ஸ்ரீகைலாசாவும் இலங்கையும் ஒரு நட்புறவு ஒப்பந் தத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டுமென நித்யானந்தா விரும்புகிறார். இந்த நட்புறவு ஒப்பந்தம் மூலம் இரு நாடுகளும் பலனடையும். கைலாசா சார்பில் பல மில்லியன் டாலர்கள் இலங்கையில் முதலீடு செய்யப்படும். அது தற்பொழுது பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு பெரும் உதவியாக இருக்கும்.

நித்யானந்தா, ஸ்ரீகைலாசா நாட்டின் தலைவர் என்ற முறையில், ஒரு வேண்டுகோள் வைக்கிறார். அவருக்கு உடல்நிலை சரியில்லை. அவரது உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டு வருகிறது. ஸ்ரீகைலாசா நாட்டில் உள்ள மருத்துவர்களால் அவருக்கு என்ன நோய் இருக்கிறது என கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் அவரை விமான ஆம்புலன்ஸ் மூலம் ஏர் லிப்ட் செய்து இலங்கைக்கு அழைத்துவர வேண்டுகிறோம்.

nithy

Advertisment

அவருக்கு ஒரு நாட்டின் தலைவர் என்ற அடிப்படையில் உரிய மரியாதை கொடுக்கப்பட வேண்டும். அத்துடன், அரசியல் ரீதியான புகலிடமும், மருத்துவ உதவியும் அவர் இலங்கையில் தங்கியிருக்கும்வரை கொடுக்கப் பட வேண்டும்' என்று சொல்லும் அந்த கடிதம் இலங்கை அரசின் பரிசீலனையில் இன்றுவரை இருக்கிறது.

இதுபற்றி இலங்கை அரசு இந்தியாவை கருத்து கேட்டுள்ளது.

"நித்யானந்தா யார்? அவர் ஏன் இந்தியாவை விட்டு வெளியேறினார்?' என இலங்கை அரசு கேட்டதற்கு, இந்தியாவின் வெளி விவகாரத்துறை நித்யானந்தா, "இந்தியாவில் வழக்குகளை சந்திக்கும் நபர். அவர் மீது குழந்தைகளை கொடுமைப் படுத்தியதற்காக 2018-இல் வழக்கு ஒன்று குஜராத்தில் பதியப்பட்டது. அதில் அவரது சீடர்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டார்கள். அத்துடன் இந்தியாவிலிருந்து அவர் தப்பி ஓடிவிட்டார். இப்பொழுது கைலாசா என்கிற நாட்டை உருவாக்கிவிட்டதாகவும், அதற்கு அவரே அதிபர் என்றும் கூறிக்கொள்கிறார். ஐ.நா. சபையிலும் இந்தியா விற்கு எதிராக அவரது பிரதிநிதிகள் பேசி உள்ளனர். நித்யானந்தா மீது கற்பழிப்பு வழக்கு, அமலாக்கத்துறை மூலம் தொடரப்பட்ட பணமோசடி வழக்கு உட்பட பல வழக்குகள் உள்ளன. இதுவரை இந்தியாவில் உள்ள பல நீதிமன்றங்கள் அவருக்கு எதிராக பிணையில் வெளிவர முடியாத வாரண்டுகள் பிறப் பித்துள்ளன. அவரை கைது செய்ய சர்வதேச போலீசான இன்டர்போல் உதவியை இந்தியா நாடியுள்ளது என இந்திய வெளி யுறவுத்துறை அறிவித்துள்ளது'' என இந்தியா கூறியுள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பல மாதங்கள் மிகவும் சைலண்ட்டாக இருந்த நித்யானந்தா, தான் சமாதி நிலையில் இருப்பதாக மெஸேஜ்களை பக்தர்களுக்கு அனுப்பி வந்தார். கடந்த மாதம் திடீரென லைவ் ஒளிபரப்புக்கு வந்த நித்யானந்தா, தான் நலமாக இருப்பதாக பதிவு செய்தார்.

தொடர்ந்து லைவ் ஒளிபரப்புகளில் அவ்வப்போது தலைகாட்டி வருகிறார். அவர் சமாதி நிலையில் இருந்தபோது அடைந்த அனுபவங்களைப் பற்றி பக்தர்களுக்கு தெளிவுபடுத்தும் விசேஷ ஆன்மிக வகுப்புகளை நடத்தப்போவதாகவும் நித்யானந்தா அறிவித்திருந்தார்.

ranjitha

Advertisment

இந்நிலையில், அவர் இலங்கை அரசுக்கு எழுதிய கடிதம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி நித்யானந்தாவுக்கு நெருக்கமானவர்களிடம் கேட்டபோது, நித்யானந்தாவுக்கு உடல்நிலை சரியில்லை என்பது மீண்டும் மீண்டும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு தினமும் 2 தடவை கிட்னியில் சுத்தப் படுத்தும் டயாலிசிஸ் என்கிற சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரது கிட்னி முழுவதுமாக பழுதடைந்து விட்டது. அதை மாற்ற வேண்டும் என்றால் இலங்கை போன்ற பெரிய நாட்டில்தான் சிகிச்சை எடுத்துக் கொள்ள முடியும். நித்யானந்தா, ஸ்ரீகைலாசா என்கிற நாட்டை உருவாக்கி விட்டதாக அறிவித்தாலும் அப்படி ஒரு நாடு எங்கும் இல்லை.

அங்கங்கே இருக் கக்கூடிய தீவுகளில் தங்கிக்கொண்டு இடத்தை மாற்றிக்கொண்டு சுற்றித் திரிகிறார். கப்பல் மூலம் பயணிக்கும் நித்யானந்தா விடம் பலகோடி ரூபாய் அமெரிக்க டாலர்களாக இருக்கிறது. அந்த பணத் தை வைத்துக் கொண்டு இந்தியாவுடன் குற்ற வாளிகளை பங்கிட்டுக் கொள்ளும் ஒப்பந்தம் செய்துகொள்ளாத மேற்கிந்திய தீவுகளில் மிகச்சிறிய நாடுகளில் சுற்றித் திரிகிறார்.

அவருடன் ரஞ்சிதா உட்பட மொத்தம் 10 பேர்தான் இருக்கிறார்கள். மலேசியாவைச் சேர்ந்த மூன்று பேர் நிரந்தரமாக அவருடன் இருக்கிறார்கள். அமெரிக்காவைச் சேர்ந்த சிலர் அடிக்கடி வந்து போய்க் கொண்டிருக்கிறார்கள். அவரது அம்மா பெங்களுரில் உள்ள பிடதி ஆசிரமத்தில் இருக்கிறார். அவரது அண்ணன் நித்யானந்தா வெளிநாட்டிற்கு கொண்டுபோன பணத்தை நிர்வாகம் செய்ய மலேசியாவில் இருக்கிறார். தம்பி திருவண்ணாமலையில் இருக்கிறார். இதுதான் நித்யானந்தாவின் உண்மை நிலை. வெறுமனே இன்டர்நெட்டில் வேடிக்கை காண்பித்துக் கொண்டிருக்கிறார் நித்யானந்தா'' என்கிறார்கள்.

இந்திய அரசைப் பொறுத்தவரை நித்யானந்தாவை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை. அதே நேரத்தில் அவர் ஒரு இந்து ஆன்மிக குரு என்பதை கொஞ்சம் கரிசனத்துடன் பார்க்கிறார்கள்.

gurumurthy

நித்திக்கு எதிராக ஆடிட்டர் குருமூர்த்தி காய் நகர்த்தி வருகிறார். ஆனால் ஆர்.எஸ்.எஸ்.ஸில் இருக்கும் ஒரு டீம் அவரை காப் பாற்றிவருகிறது. நித்தி, "என்னை இந்திய அரசு பழி வாங்குகிறது. இந்து குருவான என்னை வாழ விடவில்லை. அதற்காகத்தான் ஒரு இந்து ராஜ்ஜியத்தை ஸ்ரீகைலாசா என்கிற பெயரில் நான் உருவாக்குகிறேன்' என ஐ.நா. சபையில் பேசிய பேச்சு இந்திய அரசின் வெளியுறவுத்துறையை கோபமடையச் செய்துள்ளது.

நித்திக்கு எதிராக பிறப் பிக்கப்பட்ட வாரண்டுகளின் மீது, சர்வதேச போலீஸ் மூலம் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தயாராக இல்லை. ஆனால் நித்தி பயந்து ஓடிக்கொண்டி ருக்கிறார். அவரது உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டேயிருக்கிறது'' என்கிறார்கள் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர் கள்.

இந்நிலையில், இந்தியாவில் தனது நட வடிக்கைகளை முழுவதுமாக நிறுத்திவிட்டார். இந்தியாவிலுள்ள ஆசிரமங்கள் நித்தி விட்டுவிட்டுப் போன கொஞ்சம் பணத்தை வைத்துக் கொண்டு தள்ளாடி வருகின்றன. மீதமுள்ள மொத்த பணத்தையும் எடுத்துக் கொண்டு ஓடிய நித்திக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவு, அவரை பணத்தால்கூட காப்பாற்ற முடியாது என்கிற நிலையை உருவாக்கி விட்டது என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

நிலைமை இப்படியே போனால் நித்தி தேறுவது கடினம். ஆகவே ஏதாவது செய்து நித்தியை காப்பாற்றிவிட வேண்டும். அதற்காக உலகத்திலுள்ள அனைத்து நாடுகளுக்கும் நித்தி கடிதம் அனுப்பி வருகிறார். ஆனால் மருத்துவ வசதி கொண்ட எந்த நாடும் நித்தியின் கோரிக்கையை ஏற்கவில்லை. இதுபோன்ற கடிதத்தை பர்மா, வங்க தேசம், நேபாளம், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளுக்கும் நித்தியானந்தா அனுப்பி உள்ளார். இந்தியாவுடன் நல்ல உறவிலிருக்கும் அந்த நாடுகள் இவரது கோரிக்கையை ஏற்கவில்லை. நித்தி சிகிச்சை பெறுவதற்கு அவர் மீது இருக்கக்கூடிய வழக்குகளும் இன்டர்போல் வாரண்டும் தடையாக இருக்கிறது.

nithy

தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்படும் ஒருவருக்கு அடைக்கலம் கொடுத்தால் அது இந்தியாவுக்கு எதிரான செயலாகப் பார்க்கப்படும். நாளை எந்த நாடு அடைக்கலம் கொடுக்கிறதோ அந்த நாட்டுக்கு எதிராக, இந்தியா அரசியல் மற்றும் இராணுவ நடவடிக்கைகளை மேற் கொண்டால், அது அந்த நாட்டிற்கு ஆபத்தாக முடியும். எனவே பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையை குறி வைத்தி ருக்கிறார் நித்தி.

இலங்கை, இந்தியாவை பகைத்துக்கொண்டு நித்திக்கு ஆதரவளிக்கத் தயாராக இல்லை.

நித்திக்கு எப்படியாவது அடைக்கலம் கொடுங்கள் என ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சார்ந்த ஒரு கோஷ்டி, இலங்கை அரசிடம் பேச்சு வார்த்தை நடத்தி, தோல்வி யுடன் திரும்பியிருக்கிறது. அவர்கள் மூலமாகத்தான் நித்தி, இலங்கையில் அடைக்கலம் தேடிய விவகாரம் வெளியே வந்தி ருக்கிறது என்கிறார்கள் டெல்லி வட்டாரத்தைச் சார்ந்தவர்கள்.