கொரோனா முதல் அலையை எளிதில் சமாளித்து அனைத்து மாநிலத்துக்கும் முன்மாதிரியாக திகழ்ந்த கேரளா தற்போது இரண்டாம் அலையை சமாளிக்க முடியாமல் திணறிவருகிறது. இந்நிலையில் நிபா வைரஸ் தாக்குதலும் சேர்ந்துகொள்ள கேரள மக்கள் திகைத்து நிற்கின்றனர்.

nn

கோழிக்கோடு மாவட்டம் சாத்தமங்கலம் பாலூரில் 12 வயது சிறுவன் முகம்மது காஸி, நிபா வைரஸ் தாக்கி இறந்ததை உறுதிப்படுத்திய கேரளா சுகாதாரத்துறை, அந்தச் சிறுவனோடு நெருங்கிய தொடர்பிலிருந்த குடும்பத்தினர் 11 பேருக்கும் நிபா அறிகுறி இருப்பது தெரியவந்து அவர்களைத் தனிமைப்படுத்தியுள்ளது. மாவட்ட மருத்துவ அதிகாரி ஜெயஸ்ரீ கூறும்போது, “"சிறுவன் வவ்வால் கடித்த ரம்பூட்டான் பழத்தைச் சாப் பிட்டிருக்கிறான். வளர்ப்பு ஆடுகளிடமும் நெருங்கிப் பழகியிருக்கிறான். அந்த 7 ஆடுகளுக்கும் ஒரு மாதத்துக்கு முன் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அதற்குப்பின் இரண்டு வாரம் கழித்து அந்த சிறுவனுக்கு நிபா தாக்கியிருக்கிறது. இதனால் நிபா எதன்மூலம் பரவியதென உறுதிசெய்ய, ஆட்டின் மூக்குச் சளியை எடுத்து புனேயிலுள்ள என்.ஐ.வி.க்கு பரிசோதனைக்காக அனுப்பியுள்ளோம்.

nn

Advertisment

நிபா தாக்கம் இருக்கலாம் என சந்தேக மெழுந்த 251 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டதில் 31 பேருக்கு அறிகுறி இருப்பதாகத் தெரியவந்து, அவர்கள் தனிமைப்படுத்தப்பட் டுள்ளனர். சாத்தமங்கலம் பஞ்சாயத்து, கொடியத்தூர் பஞ்சாயத்து மற்றும் முக்கம் நகராட்சி சீல் வைக்கப் பட்டு தீவிர பரி சோதனைகள் முடுக்கிவிடப் பட்டுள்ளன''” என்றார்.

இந்த நிலையில் கோழிக்கோடு மாவட்டத் தில் நிபா வைரஸ் கண்டறி யப்பட்டுள்ளதுபோல், இந்தியாவில் முதல்முறை யாக கேரளாவின் திருச்சூரில்தான், வூகானில் இருந்துவந்த மருத்துவ மாணவியிடம் கொரோனாவும் கண்டுபிடிக்கப் பட்டது. கொரோனா நாடு முமுவதும் பரவிய நிலையில் கேரளாவில் முதல் அலையை சாமர்த்திய மாகத் தடுத்த பினராய் விஜயன் தலைமையிலான அரசு, தற்போது இரண்டாவது அலையில் தடுமாறுவதற்கு காரணம் என்ன என்று நம்மிடம் பேசிய திருவனந்தபுரம் மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர், “"முதல் அலை போன்று இரண்டாவது அலையிலும் மரணம் குறைவாக இருந்தாலும், பாதிப்பு அதிகரித்துக்கொண்டேதான் வருகிறது. தினமும் 1.50 லட்சத்திலிருந்து 1.70 லட்சம் பேரிடம் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. மற்ற மாநிலங்களைவிட துல்லியமாகத்தான் பரிசோதனை நடக்கிறது.

கேரளாவை பொறுத்தவரை கிராமத்திலும் நகரத்திலும் மக்கள் நெருக்கமாக வசிக்கின்றனர். முதல் அலையின்போது லாக்டவுன் மூலமும் நோய் அறிகுறி தென் பட்டவர்களை மருத்துவமனை கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தனிமைப்படுத்தி பரவலைக் கட்டுப்படுத்தினோம். முதல் அலையின் கடைசி நேரத்தில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களை முமுமையாகத் திறந்து மக்கள் வெளியில் நடமாடு வதில் அரசு தாராளம் காட்டியது. அதன் விளைவு தான் நோய்ப் பரவல் அதிகரிப்பு. வீட்டுக்குள் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தனிமையில் இருக்காமல் மாஸ்க் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை பின்பற்றாமல் வீட்டுக்குள்ளேயே மற்றவர்களிடமும் நோய்ப் பரவலை ஏற்படுத்தினார்கள்.

Advertisment

nn

வடக்கன் கேரளமான எர்ணாகுளம், மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு, வயநாடு மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் பெரும்பாலானோர் கூட்டுக் குடும்பமாகத்தான் வாழுகிறார்கள். ஒரு வீட்டுக்குள் 15-லிருந்து 20 பேர் இருப்பார்கள். இவர்களில் ஒருவருக்கு வந்தாலே மற்றவர்களுக்கும் எளிதில் தொற்றிவிடுகிறது. இந்த இரண்டாம் அலையில் அதிகம் பாதிக்கப்பட்டி ருப்பவர்கள் 40-லிருந்து 50 வயதுக்குள்ளான பெண்கள்தான். இரண்டாவது முறையாக பினராய் விஜயன் ஆட்சியைப் பிடித்துவிட்ட ஆத்திரத்தில் எதிர்க்கட்சிகளின் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், மக்கள் பிரதிநிதிகளின் ஒத்துழைப்பு கொஞ்சம்கூட இல்லை. முதல் அலையில் அவர்களின் பங்களிப்பு என்பது (தேர்தலை கருத்தில்கொண்டு) புயலைவிட வேகமாக இருந்தது''’என்றார்.

nn

இது ஒருபுறமிருக்க, கேரளா சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜுக்கு எதிராக அக்கட்சியின் ஒரு தரப்பினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். கொரோனா முதல் அலையை சிறப்பாகக் கட்டுப்படுத்திய அனுபவம் வாய்ந்த சைலஜா டீச்ச ருக்கு மீண்டும் சுகாதார மந்திரி பதவியைக் கொடுக் காமல், அனுபவமில்லாத கட்சியின் ஜூனியரான வீணா ஜார்ஜை மந்திரியாக்கியதால்தான் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியாமல் அரசு தட்டுத்தடுமாறி நிற்கிறது. எனவே உடனடியாக சைலஜா டீச்சரை சுகாதாரத்துறை மந்திரியாக்க வேண்டும் என்கின்றனர்.

சுகாதாரத்துறை மந்திரிதான் மாறியிருக்கிறாரே தவிர கொரோனா முதல் அலையில் சிறப் பாகப் பணியாற்றிய அத்தனை மூத்த அதிகாரிகளும் ஊழியர்களும் இரண்டாவது அலையைக் கட்டுப் படுத்த அதே உத்வேகத்துடன் செயல்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஆலோசனைகளையும் உத்தரவுகளையும் வழங்கி நடவடிக்கை எடுத்து வருவதால்தான் நோய்ப்பரவலின் வேகம் 26 ஆயிரத்துக்குள்ளே மட்டுப்பட்டிருக்கிறது. நிபா பரவாமல் இருப்பதற்கும் ஆரம்பத்திலே தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மந்திரி வீணா ஜார்ஜ் தரப்பினர் கூறுகின்றனர்.