நெல்லையின் கோபால சமுத்திரப் பகுதியின் சுப்பிரமணியனும், மாரியப்பனும் அடுத் தடுத்து படுகொலையானது சுற்றியுள்ள எட்டுக்கும் மேற்பட்ட கிராமங்களில் பதற்றத்தை விதைத்திருக்கிறது.

நெல்லை மாவட்டத்தின் கோபாலசமுத்திரம் கீழச்செவல், நயினார்குளம், மேலச்செவல், திடியூர் பகுதிக் கிராமங்களில் இரு பிரிவினருக்குள் ஏற்பட்ட மோதலின் விபரீத விளைவால், 2012 தொட்டு, 2021 கடந்த செப்-15 வரையில் இரண்டு தரப் பிலுமாக ஏழு உயிர்கள் பலியாகி யுள்ளன. இந்தப் படுகொலை களுக்கு அடித்தளமிட்டது 2012-ன் போது கோபால சமுத்திரம் பள்ளி ஒன்றில் இரு பிரிவு மாணவர்களுக்குள் ஏற்பட்ட மோதல்களே.

jj

Advertisment

செப்-13 அன்று கீழச்செவல் நயினார்குளத்தின் சுப்பிரமணியன், அடுத்த இரண்டு நாளில் கோபாலசமுத்திரத்தின் மாரியப்பன் இருவரும் இரண்டு பிரிவினரின் பழிக்குப்பழி பகை யால் வெட்டப்பட்டு அவர்களின் துண்டிக்கப்பட்ட தலைகள் ஒரு பிரிவினரின் சமாதியிலும், நடு ரோட்டிலும் வைக்கப்பட்ட படுபாதகச் செயல்கள், அண்மை யில் செப். 22 அன்று திண்டுக்கல் பசுபதி பாண்டியன் கொலையில் தொடர்புடைய 5-வது குற்றவாளி யான மாஜி பெண் கவுன்சிலர் நிர்மலாவின் தலையை வெட்டி எடுக்கிற அளவுக்கு டெவலப் பானது பதைபதைக்க வைத்தது.

இதனால் அந்தப் பகுதி பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையே பீதியோடு நகரத் தொடங்கியதால், அவர்களுக்குப் பாதுகாப்பளிக்கும் வகையிலும், சகஜமான வாழ்க்கையைத் தொடர்வதற்கும், மீண்டும் அசம்பாவிதம் ஏற்படாமலிருப்ப தற்காக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் உள் ளிட்ட வெளிமாவட்ட போலீ சார் அனைத்து கிராமங்களிலும் பாதுகாப்பின் பொருட்டு குவிக்கப்பட்டுள்ளனர். படு கொலை தொடர்பாக இரண்டு தரப்பிலும் 12 பேர் வீதம் 24 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

மாவட்டத்தில் முன்னெச் சரிக்கை நடவடிக்கையாக 200-க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைதுசெய்யப்பட்டு, அரிவாள், கத்தி, பாலா கம்பு தயாரிக்கும் பட்டறைகள் கண்காணிப்பிற்குள் கொண்டுவரப்பட்டதோடு அந்த ஆயுதங்கள் யாருக்கு சப்ளை செய்யப்படுகின்றன என்பதற்கான ஆவணம், ஆதார் எண் போன் றவை சமர்ப்பிக்கப்படுவதுடன் அரிவாள் உற்பத்திப் பட்டறை களில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்துவதையும் உறுதிசெய்ய வேண்டுமென்று எச்சரிக்கை விடுத் திருக்கிறார் நெல்லை மாவட்ட எஸ்.பி.யான மணிவண்ணன்.

Advertisment

இந்தச் சூழலில் எஸ்.பி. மணிவண்ணன், பொதுமக்களின் பீதி, பயத்தைப் போக்கும் வகையி லும், பாதுகாப்பு பற்றிய நம்பிக் கையை ஏற்படுத்தும் பொருட்டும் கடந்த ஒரு வாரமாக அன்றாடம் பகல், இரவுகளில் தனியாக முன் னீர்பள்ளம், திடியூர், கீழச்செவல், மேலச்செவல், நயினார்குளம், கோபாலசமுத்திரம் உள்ளிட்ட பதற்றமான கிராமங்களில் சைக்கிளிலேயே ரவுண்ட்ஸ் போயிருக்கிறார்.

எஸ்.பி. எந்த நேரமும் ஆய்வுக்கு ரவுண்ட்ஸ் வரலாம் என்பதால், கிராமங்களில் பாது காப்பிற்காக நிறுத்தப்பட்டிருந்த போலீசாரும் அலர்ட்டாக இருக் கின்றனராம். இரவு ரவுண்ட்ஸ் போகும் எஸ்.பி. மணிவண்ணன், பாதுகாப்புப் போலீசாரையும் வேலை வாங்குகிறார். அவர்களின் ஃபீட் டைரியை அவ்வப்போது செக்அப் செய்கிறார். கிராம மக்களின் வாழ்வாதாரம், மனதின் குறைகளை அறிய மக்களோடு மக்களாகப் பழகி தகவல் சேகரிக்க காவலர்கள் சிலரை மப்டியிலும் நடமாடவிட்டிருக்கிறார்.

உளவுக்காவலர்களின் மூலம் கிடைத்த தகவல்களைக் கொண்டு அன்றிரவே கீழச்செவல், நயினார் குளம், திடியூர் கிராமங்களுக்குச் சென்ற எஸ்.பி. மணிவண்ணன், இருதரப்பு மக்களையும் அழைத்துப் பேசி, விஞ்ஞானமும், தொழில் நுட்பங்களும் வளர்ந்து காலம் எவ்வளவோ முன்னேறிப்போன நிலையில்... இன்னமும், பகைவெறி, பழிவெறி மனதில் கூடாது, வீண் மோதல் போக்கை வைத்துக்கொண் டால் வம்பு, வழக்கு என்று சிக்கல் வரும், உங்கள் பிள்ளைகள் அதில் சிக்கிக்கொண்டால் அவர் களின் எதிர்கால வாழ்க்கையே பாழாகிவிடும். எந்த வேலைக்கும் போகமுடியாது என்று மக்கள் மனதில் எட்டுகிற மாதிரி பாந்தமாகப் பேசுகிறார்.

எஸ்.பி.யின் இந்தக் கூலான அணுகுமுறை கிராம மக்களிடம் நம்பிக்கையை விதைத்திருக்கிற தாம். ஒருசில கிராமங்களில் மக் கள் தங்களுக்குள்ளேயே கூட்டம் போட்டு, இனி ஒருபோதும் மோதலுக்கு இடமளிக்கக்கூடாது, நமது வாழ்க்கையின் முன்னேற் றமே முக்கியம் என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாம்.

இரவு 10 மணிக்கும் மேல் கோபாலசமுத்திரம் ரோட்டில் சைக்கிளில் ரவுண்ட்ஸ் வந்த எஸ்.பி. மணிவண்ணனிடம், பீதி யோடு வந்த அந்தப் பகுதியின் மூதாட்டி ஒருவர், பக்கத்து வீட்டுக்காரர் இந்த ராவுல வம்பு வாக்குவாதம் செய்து சண்டை யிடுவதாகச் சொல்ல, அவரோடு வீட்டுக்குச் சென்ற எஸ்.பி., பக் கத்து வீட்டுக்காரரை அழைத்து சண்டை மோதல் போக்கு கூடாது என்று சொல்லி, இரண்டு தரப்பையும் சமாதானம் செய்து விவகாரத்தை முடித்துவைத்த பிறகே ஆறுதலடைந்திருக்கிறார் அந்த மூதாட்டி.

எஸ்.பி.யின் நேரம் காலம் பாராத நேரடி ஆய்வு, மக்கள் பாதுகாப்பு, அவரின் அணுகுமுறை போன்றவை கிராம மக்களி டையே நம்பிக்கையைக் கொடுத் திருக்கின்றன. அடுத்ததாக அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் அனைத்துக் கிராமங்களிலும் சி.சி.டி.வி. கேமரா பொருத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.