ந்தியா முழுவதும் ஜூலை 30ஆம் தேதி, என்.ஐ.ஏ, ஐ.பி., அமைப்பினர், மாநில உளவுத்துறையுடன் சேர்ந்து, 29 இடங்களில், மொத்தம் 28 பேரை விசாரணை வளை யத்துக்குள் கொண்டுவந்து விசாரணை நடத்தியதாகக் கூறப்படுகிறது. தமிழ்நாட் டில் இரண்டு இடங்களில் இருவரை கைது செய்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கம்பிக்கொல்லை பகுதியைச் சேர்ந்தவர் மீர் ஹிதாயத் அலி. தோல் வியாபாரத் தொழிலதிபரான இவரின் மகன் அனஸ் அலி. ராணிப் பேட்டை மாவட்டம் மேல்விஷாரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ. மெக்கானிக் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். ஜுன் 30ஆம் தேதி விடியற்காலை, ஒன்றிய அரசின் உள்நாட்டு உளவுப்பிரிவான ஐ.பி., மாநில உளவுத்துறையினருடன் இணைந்து அனஸ்அலியை விசாரணை எனச் சொல்லி, தங்களது காரில் ஏற்றிக்கொண்டு வேலூர் மாவட்டம் அணைக்கட்டு காவல்நிலையத்துக்கு அழைத்துவந்து விசாரணை நடத்தினர்.

dd

இதுகுறித்து உளவுத்துறை அதிகாரிகளிடம் விசாரித்தபோது, "தீவிரவாத அமைப்புகள், அதன் ஆதரவு அமைப்புகளின் செயல்பாடுகள் சர்வதேச அளவில் கண்காணிக்கப்படுகிறது. இந்த அமைப்பினர், தங்களது நாடுகளைத் தாண்டி, பிற நாடுகளின் இளைஞர்களை மூளைச்சலவை செய்து தங்களுக்கு ஆதரவாகவும், அமைப்பில் இணைக்கவும் சமூக ஊடகங்கள் வழியாகப் பிரச்சாரம் செய்கிறார்கள். இந்தியாவில் இவற்றைக் கண்காணிக்க, மத்திய உளவுத்துறை, மாநில உளவுத்துறையினர் தனி யூனிட்டே வைத்துள்ளனர். அந்த கண்காணிப்பில் தான் சிரியாவில் இயங்கும் இஸ்லாமிய அமைப்பு, ஐ.எஸ்.ஐ.எஸ்.ஐ. தீவிரவாத அமைப்பு, பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளின் ரகசிய சமூக வலைத்தளக் கணக்கில் அவர்களின் பதிவுக்கு ஃலைக், ஷேர் செய்பவர்களைக் கண்காணித்துவருகிறோம். அந்த கண்காணிப்பில் இந்தியாவில் இதுவரை நூற்றுக்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இந்த இளைஞனும் தனது முகநூல், இன்ஸ்ட்ரா ஐ.டி. மூலம், தீவிரவாத அமைப்பு களின் கருத்துக்களுக்கு லைக் செய்வது, ஷேர் செய்வதைத் தொடர்ச்சியாகக் கண்காணித்து வந்தோம். கடந்த 6 மாதமாகக் கண்காணித்ததில், தெரிந்தே ஷேர் செய்ததும், லைக் செய்ததும் தெரியவந்தது. அந்த இளைஞனின் மொபைல் எண்ணை வைத்து இன்கமிங், அவுட்கோயிங் கால்கள் ஆய்வு செய்யப்பட்டது. இதேபோல், சேலம் கோட்டை பகுதியைச் சேர்ந்த 12 வரை படித்துவிட்டு, வெள்ளி நகைப் பட்டறையில் வேலை செய்யும் 23 வயதான இளைஞரை கைது செய்து விசாரணை நடத்துகிறோம். இந்த இளைஞர் பாகிஸ்தான், வங்கதேசம், சிரியா, ஆப்கானிஸ்தானில் இயங்கும் தீவிரவாத அமைப்புகளின் சோசியல் மீடியா பக்கங் களில், அவர்களது பதிவுகளுக்கு லைக் செய்வது, கருத்திடுவது, ஷேர் செய்வதோடு, வெப் காலில் பேசியுள்ளான்" என்றார்.

ஆம்பூர் இளைஞரிடம் விசாரித்த அதிகாரியொருவர், "இந்து மத அமைப்புகள் தங்கள் மதத்தைத் தூக்கி பிடிக்கிறேன் என்கிற பெயரில் மற்ற மதத்தினரை தரம் தாழ்த்திப் பேசுவதும், விமர்சிப்பதுமான வீடியோக்களைப் பார்த்து அதிருப்தியாகி யுள்ளான். அதனாலயே தீவிரவாத இஸ்லாமிய அமைப்புகளின் வீடியோக்களை பார்த்துள்ளான். நீங்கள் ஒருமுறை ஏதேனும் வீடியோவைப் பார்த்துவிட்டால், அதன்பின் நீங்கள் கேட்காம லேயே அதுதொடர்பான வீடியோக்கள் உங்களின் முகநூல், இன்ஸ்டா, டெலிகிராம் பக்கங்களில் வரும். அப்படி வந்த வீடியோக்களை தொடர்ச்சியாகப் பார்த்துள்ளான். அந்த பக்கங்களுக்குச் சென்றுள்ளான். ஒவ்வொரு தனி மனிதனுக்கும் இருக்கும் சராசரி கோபம்தான் அவனிடம் உள்ளது. மற்றபடி விவரம் அறியாத, விபரீதம் புரியாத இளைஞன். வேறு எந்த தீவிரவாத நடவடிக்கையும் இல்லை. இதுக்கெல்லாம் எதுக்குடா லைக் போட்டன்னு கேட்டதற்கு, அதென்ன தப்பான்னு கேட்கிறான். அதற்காக அவனை விடமுடியாது என்பதால் ஆம்பூர் காவல் நிலையத்தில் அனஸ் அலி மீது 121, 122, 125, 18, 18ஏ, 20, 38, 39 என 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்'' என்றார்.

மத ரீதியிலான அமைப்புகளின் சமூக வலைத்தளப் பக்கங்களை சாதாரணமாகப் பார்ப்பதும், லைக் இடுவதுமான இணையவாசிகளை கண்காணிப்பு வளையத்தில் வைத்து, அவர் களின் சமூக ஊடகக் கணக்குகளைத் தொடர்ச்சியாக மூன்று மாதம் கண்காணிக்கின்றனர். மூன்று மாதத்துக்குப் பின்பு சம்பந்தப்பட்டவர்களின் வாழ்விடத்துக்கே நேரில் சென்று ரகசிய விசாரணை நடத்தி அவர்கள் குறித்த கூடுதல் தகவல் களைச் சேகரித்து, சாதாரணமானவர்கள் என்றால் எச்சரிக்கை யும், தீவிரமாக இயங்குபவர்கள் என்றால் கைதும் செய்கிறார்கள். அதனால் மதரீதியிலான ஆதரவு - எதிர்ப்பு வீடியோக்கள், பதிவுகளுக்கு ஃலைக், ஷேர் செய்யும் முன் ஒருமுறைக்கு 100 முறை யோசிக்கவும். இல்லையேல் 100க்கு டயல் செய்யாமலே உங்கள் வீட்டுக்கு போலீஸ் வரும்.

Advertisment