கனகராஜின் சகோதரர்களான தனபால் மற்றும் ரமேஷின் கைது பல அதிர்ச்சிகரமான உண்மைகளை வெளிக்கொண்டு வந்திருக்கிறது. கொடநாடு கொலை வழக்கு பல அதிர்ச்சிகரமான உண்மைகளை வெளிக்கொண்டுவரும். அதைக் கேட்டு ஒட்டுமொத்த தமிழகமே ஆச்சரியப்படும் என்கிறார்கள் வழக்கை விசாரிக்கும் மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் தலைமையிலான விசாரணை டீம்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kanagaraj_1.jpg)
நாங்கள், எங்களுக்குக் கிடைக்கும் ஒவ்வொரு தகவலையும் ஆராய்ந்து வருகிறோம். அலியார் என்கிற ஹவாலா ஆபரேட்டரும் மணப்புறம் ஷாஜி என்கிற கூடலூரைச் சேர்ந்த மலையாளிகளான இருவரும் சேர்ந்து சஜீவன் என்கிற எடப்பாடிக்கு நெருக்கமான மலையாளி பிரமுகர் மூலம், கொடநாட்டில் கொள்ளை யடிக்க முயற்சி நடந்தது. இதில் மணப்புரம் ஷாஜி என்பவன் மிகப்பெரிய ரவுடி. இந்த கோணத்தில்தான் போலீசார் விசாரணை செய்தார்கள். அடுத்தது கொடநாடு கம்ப்யூட்டர் ஆபரேட்டர் தினேஷின் தற்கொலைக்கும் கொடநாடு கொள்ளைக்கும் தொடர்பு இருக்கிறது என்கிற கோணம். இதை தெளிவாக ஆராய்ந்தார்கள் போலீஸார்.
இந்த கோணங்களை ஆராய்ந்தார்களே தவிர, கொடநாட்டிற்குள் முதலில் கொள்ளையடிக்க முயன்றதாக சொல்லப் படும் சஜீவனை கைது செய்ய வில்லை. கம்ப்யூட் டர் ஆபரேட்டர் தினேஷின் தற்கொலைக்கு காரணமானவர். அதேபோல் கனகராஜின் சகோதரர்களான ரமேஷுக்கும் தனபாலுக்கும் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொடர்பு இருக்கிறது என போலீசார் விசாரித்தனர். அதற்காக இரண்டு மாதங்கள் நேரம் எடுத்துக் கொண்டனர்.
ரமேஷ், தனபால் ஆகிய இருவரின் தொடர்புகள் விசாரிக்கப் பட்டன. அவர்களது எலக்ட்ரானிக் தொடர்புகள் தொடர்பான விபரங்கள் திரட்டப்பட்டன. அதில் போலீசார் முதலில் கண்டுபிடித்தது விபத்தில் இறந்ததாக சொல்லப்படும் கனகராஜின் செல்போனை, ரமேஷும் தனபாலும் பயன்படுத்தி யிருக்கிறார்கள் என்பதைத்தான்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kanagaraj1_1.jpg)
தனபால் அவரது மனைவி, அவரது தம்பி பழனிவேல், அவரது மனைவி, அவர்களது உறவினரும் எடப்பாடிக்கு நெருக்கமான பணிக்கனூர் முன்னாள் கவுன்சிலர் பன்னீர்செல்வம் என அனைவரின் பேச்சுக்களும் தொகுக்கப்பட்டன. இந்த எலக்ட்ரானிக் டேட்டா சேகரிப்பில் உபயோகத்தில் இருந்த கனகராஜின் செல்போனை, தனபால் அழித்ததை கண்டுபிடித்தனர்.
கனகராஜின் மனைவி கலைவாணியிடம் ரமேஷ், கனகராஜும் இவரும் ஒன்றாக அமர்ந்து காட்டுக்கொட்டாய் என்கிற ஊரில் உட்கார்ந்து ஒரு பாரில் சாராயம் சாப்பிட்டுக் கொண்டி ருப்பதாக செல்போனில் கூறினார். அதை ரமேஷ் ஒத்துக்கொண்டிருக்கிறார். கனகராஜ் இறப் பதற்கு முன்பு ரமேஷூடன் ஒன்றாக இருந்துள்ளார். காட்டுக்கொட்டாய்க்குப் பக்கத்தில் உள்ள ரமேஷின் மாமியார் வீடு அமைந்துள்ள பெரிய ஏரி என்கிற ஊரிலிருந்து ரமேஷ் காட்டுக்கொட்டாய் பகுதியில் உள்ள மதுபான பாருக்கு காரில் வர... ஆத்தூரில் ரமேஷின் வீட்டிலிருந்து புறப்பட்ட கனகராஜுக்கு பைக் கொடுத்ததும் ரமேஷ்தான். காட்டுக்கொட்டாயிலிருந்து கனகராஜ் உயிரிழக்கும் வரை ஒன்றாக பயணித்த நபர் ரமேஷ்தான். அதுவரை ரமேஷ் ஒத்துக் கொள்கிறான்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kanagaraj2_0.jpg)
இதெல்லாம் போலீஸ் தங்களது புலனாய்வில் உறுதிசெய்த தகவல்கள். அதற்குப் பிறகு கனகராஜ் எப்படி இறந்தார் என்பதைத் தான் போலீசார், புலனாய்வு செய்து கொண்டிருக்கிறார்கள். கனகராஜின் இறப்பு குறித்து அனைத்தும் அறிந்த நபர் ரமேஷ்தான். ஆக... கனகராஜ், மல்லிகா நல்லுசாமியின் காரில் எப்படி மோதினார் என்பது கேள்விக்குறியாகவே நீடிக்கிறது.
தனபாலை பொறுத்தவரை கனகராஜ் மரணம் மட்டுமல்ல, கனகராஜ் கொடநாட்டில் கொள்ளையடிக்கப் போகிறான் என்கிற தகவலை தெரிந்த நபராகவே இருந்தார். அவர் கனகராஜுடன் சேர்ந்து கொடநாட்டில் கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய முக்கிய நபர்களுள் ஒருவர். அதனால்தான் கொள்ளை யடித்தவுடன் கனகராஜ், தனபாலை சந்திக்கிறார். கொடநாட்டில் கொள்ளையடிக்கப்பட்ட டாகுமெண்டுகள் யாரிடம் ஒப்படைக்கப்பட்டன என்பது தனபாலுக்குத் தெரியும். கனகராஜை கொல்லுங்கள் என வந்த கட்டளையும் தனபாலுக்கு தெரியவருகிறது. அந்த கொலையை விபத்தாக மாற்றுவதிலும், அதைத் தொடர்ந்து கனகராஜின் செல்போனை அழிப்பதிலும் தனபால் உதவியாக செயல்பட்டிருக்கிறார்.
தனபாலுக்கு மட்டுமல்ல... கனகராஜின் மனைவி கலைவாணியைத் தவிர தனபாலின் உறவினர்கள் அனை வருக்கும் கனகராஜ் கொடநாட்டில் கொள்ளையடிக்கப்போவது தெரியும். தனபால் கொடநாடு கொள்ளைக்கு உடந்தையாக, கொள்ளைக்கு முன்பும், கனகராஜின் மறைவுக்குப் பின்பும் செயல்பட்டி ருக்கிறார். எனவே கொட நாடு கொள்ளைக்கு சதித்திட்டம் தீட்டியவர் கனகராஜ் மட்டுமல்ல... தனபாலும் ரமேஷும் என இருவரையும் கொடநாடு கொள்ளை வழக்கில், சதித்திட்டம் தீட்டும் பிரிவான "120 பி'லியில் போலீசார் சேர்த் திருக்கிறார்கள். இந்த சதித் திட்டத்தை முழுமையாக ஆராய்ந்த போலீசார், கனகராஜ் எட்டு வருடம் டிரை வராக வேலை பார்த்த ஜெ.வின் வீட்டில், அந்த ஒரு அனுபவத்தை மூலதனமாக்கி பணம் பார்க்க கனகராஜ் குடும்பம் திட்ட மிட்டதை ஆவணமாக்கியிருக் கிறார்கள். கொடநாட்டில் கொள்ளையடித்தது மட்டுமல்ல, அடுத்த கட்டமாக சொந்த சகோதரனை கொலை செய்து, கொடநாட்டிலும் சேலம் ஆத்தூரிலும் இந்த இரு மரணங்களுக்கான சதித் திட்டங்களுக்கு மூலகாரணமாக இருந்த தரப்பிடம் பணம் பறித்திருக்கிறார்கள் தனபாலும் ரமேஷும், என பிணம் தின்னிக் கழுகுகளாக மாறிய கதைகளைச் சொல்கிறது காவல்துறை வட்டாரங்கள். போலீஸ் கஸ்டடியில் இந்தக் கதைகளைச் சொல்லிக் கதறி அழுதிருக்கிறான் தனபால்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kanagaraj3.jpg)
ஆனால் இதைப்பற்றி பெரிதாக ரமேஷும் தனபாலும் வாய் திறக்கவில்லை. போலீசார் புலனாய்வு செய்து மறுக்க முடியாத ஆதாரங்களுடன் முன்வைக்கும் கேள்விகளுக்கு மட்டும் ஆமாம் என பதில் சொல்கிறார்கள். இந்த நடவடிக்கைகளின் பின்னணி பற்றி வாய் திறக்க முன்வருவதற்குள் இவர்களைப் பாதுகாக்க ஒரு பெரிய வழக்கறிஞர் படையை அனுப்பி வைத்துள்ளார் எடப் பாடி. அவர்களை எதிர்கொள்ள சென்னை உயர்நீதிமன்றத்தின் கிரிமினல் வழக்குகளின் நிபுணரான ஷாஜகான் என்கிற சீனியர் வழக்கறிஞரை கனகராஜ் என்கிற மற்றொரு வழக்கறிஞருடன் தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.
"தனபாலை போலீஸ் கஸ்டடிக்கு அனுப்பக்கூடாது' என தனபாலின் வழக்கறிஞர்கள் பெரிதாக வாதிட்டனர். "அனுப்பலாம் எந்தத் தடையுமில்லை' என ஷாஜகான் சுப்ரீம் கோர்ட்டின் இரண்டு தீர்ப்புகளை சுட்டிக்காட்டி வலுவாக வாதிட... தனபாலை போலீஸ் கஸ்டடிக்கு அனுப்பி வைத்தது நீதிமன்றம்.
அடுத்தகட்டமாக கனகராஜின் கொலைவழக்கை சீரியஸாக எடுத்துக் கொண்டுள்ள போலீஸ், இதில் இளங்கோவன் எந்த அளவிற்கு சம்பந்தப்பட்டுள்ளார் என ஆராயத் தொடங்கியுள்ளது. கொடநாட்டில் ஜெ. பூஜை செய்த நூறு கிலோ எடையுள்ள வெள்ளி சிலை, இளங்கோவனின் கல்லூரியில் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைப்பற்றப் பட்டுள்ளது. அதன் விபரங்களை போலீசார் தேடிவருகிறார்கள். இளங்கோவனின் தொடர்பு இல்லாமல் சேலம் ஆத்தூரில் இவ்வளவு விவகாரம் நடந்திருக்காது என்பது சாதாரண அ.தி.மு.க. தொண்டனுக்குக்கூட தெரிந்த விஷயம். அதை விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்க போலீசார் முயன்று வருகின்றனர்.
கொடநாட்டில் கொள்ளையடிக்கப்பட்ட டாகுமெண்டுகளை பத்திரப்பதிவு அதிகாரியாக இருந்த செல்வகுமார், சேலத்தில் இருந்துதான் வேறு பெயர்களுக்கு மாற்றி யுள்ளார் என்பது தெரியவந்திருக்கிறது. "சேலம் என்றால் இளங்கோவனா? எடப்பாடியா? இளங்கோவன் மூலம் எடப்பாடியா?' என ஏகப்பட்ட கேள்விகள் எழுந்துள்ளன.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kanagaraj4.jpg)
இனி ஒன்றுமட்டும் நிச்சயம். எடப்பாடியால் சாட்சியங்களை மிரட்ட முடியாது. மறைத்து வைக்க மட்டுமே முடியும். போலீசார் தனபால், ரமேஷ் கைதுக்குப் பிறகு பல குற்றவாளிகளை கொடநாடு வழக்கில் தங்களது புலனாய்வு மூலம் கண்டுபிடிக்கவுள்ளார்கள். அவர்களுக்காக கோர்ட்டில் வாதாட முடியும்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kanagaraj5.jpg)
கனகராஜ் விபத்து வழக்கைத் தான் எடுத்துக் கொடுத்த மனு மூலம் தனபால் முடித்து வைத்துள்ளார். விபத்தென்று தனபால் முடிவு செய்த வழக்கு, வேறொரு திசையில் கொலை வழக்காக போலீசாரால் மாற்றி எழுதப்படவிருக்கிறது. இதில் தினம் ஒரு புதிய தகவல் கிடைத்துக்கொண்டிருப்பதுதான், போலீசாரை உற்சாகமடைய வைத்திருக்கிறது. இதில் இன்னமும் போலீசார் வெளியிடாத கதைகள் நிறைய இருக்கிறது. கனகராஜின் ஒட்டுமொத்த குடும்பமும் சேர்ந்து கொடநாட்டில் கொள்ளையடிக்க திட்டம் தீட்டினார்கள் என்பது போன்ற அதிர்ச்சித் தகவல்கள் ஏராளம் இருக்கிறது என சஸ்பென்ஸுடன் புன்னகைக்கிறார்கள் வழக்கை விசாரிக்கும் போலீசார்.
-தாமோதரன் பிரகாஷ்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-11/kanagaraj-t.jpg)