புதுச்சேரியில் கடந்த 2021 சட்ட சபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட படுதோல்வியிலிருந்து மீளவும், 2024 மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ளவும், புதுச்சேரி காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் நியமனம் செய்யும் நடவடிக்கையில் கட்சித் தலைமை கடந்த சில மாதங்களாக ஈடுபட்டது. யார் தலைவராவார் என்பதில் கடும் போட்டி நிலவியது.
மாநில தலைவர் பதவிக்கான போட்டியில் முன்னாள் அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜஹான், கட்சியின் துணைத் தலைவர் அனந்தராமன், முன் னாள் துணை சபாநாயகர் எம்.என்.ஆர்.பாலன் ஆகி யோரின் பெயர்கள் அடிபட்டன. அவர்களும் தலைவர் பதவியை கைப்பற்றுவதற்கு பல்வேறு வகையில் முயன்றனர். இன்னொரு பக்கம் முன் னாள் முதலமைச்சர் நாராயணசாமியும் தலைவர் பதவியைக் கைப்பற்ற காய்களை நகர்த்தினார். இந் நிலையில் இருதரப்புப் போட்டியில் பொதுவானவ ரான எம்.பி. வைத்திலிங்கத்தை மாநில தலைவராக அறிவித்தது டெல்லி காங்கிரஸ் தலைமை.
புதிய தலைவராக வைத்திலிங்கம் எம்.பி., பதவியேற்பு நிகழ்ச்சி கடந்த ஜூன் 19ஆம் தேதி புதுச்சேரி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. புதுச் சேரி பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ், புதிய தலை வர் வைத்திலிங் கத்திற்கு பூங் கொத்து அளித்து வாழ்த்து தெரி வித்தார். அப்போது அவர் பேசுகையில், "நான் தற்போது கர்நாடக அமைச்சராக இருப்பதால் புதுச்சேரிக்கு மேலிடப் பொறுப்பாளராக வேறொருவர் நியமிக்கப்படுவார். மக்களவைத் தேர்தலுக்கு 8 மாதங்களே உள்ளன. அதற்கு தயாராகி அந்தத் தேர்தலில் வெல்ல வேண்டும். அதற்கான ஆயத்த பணியைத் தொடங்கியுள்ளோம். கர்நாடக காங்கிரஸில் வேறுபாடுகளை விட்டுவிட்டு வெல்வதை லட்சியமாக்கி வென்றதுபோல் புதுச்சேரியிலும் ஒற்றுமையாக வேலை செய்தால் மக்களவைத் தேர்தலில் வென்று மத்தியில் ஆட்சி அமைக்கலாம். 2026 சட்டப்பேரவைத் தேர்தலிலும் வென்று ஆட்சி அமைக்கலாம்'' என்றார்.
முன்னாள் முத லமைச்சர் நாராயணசாமி பேசும்போது, "கர்நாடகத் தில் காங்கிரஸ் வென்று புது ரத்தம் பாய்ச்சப்பட் டுள்ளது. புதுச்சேரியில் பலம் பொருந்திய கட்சி காங்கிரஸ்தான். இனி நாம் ஏமாறக்கூடாது. வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வெல்ல வேண் டும். சட்டப் பேரவை தேர்தலிலும் வென்று ஆட்சி அமைக்க வேண்டும். நடப்பு எம்.பி. யாக உள்ள வைத்திலிங்கம், தேர்தலில் நிற்க கட்சி முன்னுரி மை தரும். அவர் எம்.பி தொகுதி யை வென்று ராகுல் பிரதமராக வேண்டும்'' என்றார். ஏற்புரை நிகழ்த் திய மாநில தலைவர் வைத்திலிங்கம், "மதவாத சக்திகளை அடக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து ராகுல் காந்தியை பிரதமராக்க வேண்டும். நாம் அனைவரும் ஒற்றுமையாக மக்களவைத் தேர்தலை எதிர்கொண்டு பெருவெற்றி யைப் பெற வேண்டும்'' என்றார். இதில் நாராயணசாமி பேசும்போது குறிப்பிட்ட 2 செய்திகள் காங்கிரஸ், தி.மு.க. தலைவர் களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி அரசியல் பார்வையாளர்கள் நம்மிடம் பேசும்போது, "வைத்திலிங்கம் ஏற்கெனவே முதலமைச்சர், எம்.பி, மாநிலத் தலைவர் என மாநிலத்தின் முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். தற்போதும் எம்.பி.யாகவும், மாநில தலைவ ராகவும் உள்ளார். காங்கிரஸ் கட்சியின் விதிமுறைப்படி ஒருவர் ஒரு பொறுப்பில் தான் இருக்க வேண்டும். அப்படியிருக்க, மீண்டும் எம்.பி. தேர்தலில் வைத்தி லிங்கம் தான் நிற்பாரென்பது மற்றவர் களின் உணர்வுகளைப் புறக்கணிப்பது போன்றது. புதுச்சேரி காங்கிரஸில் தலைவர்களுக்கா பஞ்சம்? காங்கிரஸ் தலைவர் பதவியை எதிர்பார்த்த எவருக்கேனும் அந்த வாய்ப்பினை வழங்க லாம் என்றே பலரும் கருதுகிறார்கள். அதேபோல், எம்.பி. தேர் தலில் காங்கிரஸ் தான் நிற்குமென்றும், தி.மு.க. வெறும் கூட்டணிக்கட்சி தான் என்றும் கூறியுள்ளார். கடந்த தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியடைய, தி.மு.க.வோ 4 தொகுதிகளைக் கைப்பற்றியது. எனவே தி.மு.க.வும் எம்.பி. தேர்தலில் நிற்கத் திட்ட மிட்டுள்ளது. ஆனால், தற்போது நாராயணசாமி யின் பேச்சு, தி.மு.க.வுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி யுள்ளது. கூட்டணிக் கட்சியான தங்களைக் கலக்காமல் எப்படி அறிவிக்கலாம் என்று எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஆனால் நாராயணசாமியோ புதுச்சேரியில் எம்.பி. தேர்தலில் வெற்றிபெற்று, மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் பட்சத்தில் மீண்டும் புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்து முதலமைச்சர் ஆகிவிடலாம் என நினைக்கிறார். அதற்கேற்றாற்போல தனக்கு தோதான ஒருவரை தலைவராக்கி விட்டார். மேலும், புதுச்சேரியை ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் -பா.ஜ.க. கூட்டணி அரசின் செயல்பாடுகளை எதிர்த்து ஒவ்வொரு நாளும் அறிக்கைகள் விட்டபடியே இருக்கிறார். காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சிகள் நடத்தும் போராட்டங்களை தலைமை தாங்கி நடத்துகிறார். எதிர் வருகின்ற எம்.பி. தேர்தலை, புதுச்சேரியில் தனது அடுத்தகட்ட அரசியலுக்கான அஸ்திவார மாகப் பார்க்கிறார். காங்கிரஸ் அதிருப்தி தலைவர் களையும், கூட்டணிக் கட்சித் தலைவர்களையும் சரிக்கட்டி எப்படி அரசியல் செய்வார் எனப் போகப்போகத் தெரியும்'' என்கின்றனர்.
கட்சிக்குள் கோஷ்டி, கோஷ்டிக்குள் கோஷ்டி எனப் பல பிரிவுகளாக இயங்கும் காங்கிரஸ், ஒற்றுமையாக செயல்பட்டு பா.ஜ.க. கூட்டணியை வெல்லுமா? என்பது மக்களவைத் தேர்தலுக்குப் பின் தெரியும்.