சென்னை மண்ணடியில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனையின் தவறான சிகிச்சையால் தங்களின் 15 வயது மகள் இறந்துவிட்டதாகக் கூறி பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியது தலைநகரத்தை திரும்பிப்பார்க்க வைத்திருக்கிறது..

தண்டையார்பேட்டையைச் சேர்ந்த 15 வயதான நந்தினி, பத்தாம் வகுப்பு மாணவி. ஆகஸ்ட் மாதம் நந்தினிக்கு வயிற்றுவலி என மண்ணடியி லுள்ள சென்னை நேஷனல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அல்சர் பிரச்சனை இருப்பது தெரியவந்ததால் வயிற்றுப் புண்ணை சரிசெய்ய தொடர்ச்சியாக சிகிச்சைக்கு வந்துள்ளனர்.

hh

Advertisment

அக்டோபர் மாதம் 27-ஆம் தேதி வியாழக் கிழமை தீவிர சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில், வயிற்று வலி குறைந்ததாக மாணவி கூறினார். இந் நிலையில், நவம்பர் 1-ஆம் தேதி மதியம் மருத்துவர் மூர்த்தி ஒரு ஊசியைச் செலுத்தியுள்ளார். அந்த ஊசி செலுத்தியபிறகு நந்தினியின் மார்புப் பகுதியில் வலி ஏற்பட்டுள்ளது. அந்த ஊசி செலுத்தப்பட்டபிறகு தங்கள் மகளின் உடலில் பலவிதமான பின்விளைவுகள் உடனடியாகத் தெரிந்ததாகவும் ஏதோ தவறான ஊசியை எந்தவிதமான அனுமதியும் இல்லாமல் தங்களுக்குத் தெரிவிக்காமலே செலுத்திவிட்டனர் என்றும், அந்த ஊசி செலுத்திய பிறகு தங்களுடைய மகள் வலியால் துடித்தாள் என்றும் கூறுகின்றனர் பெற்றோர்.

அடுத்து நவம்பர் 2-ஆம் தேதி காலை 6 மணிக்கு, “"நீங்க அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டுசெல்லுங்கள்'’என கூறியுள்ளார்கள். “இது நாள்வரையிலும் இங்கு சிகிச்சை கொடுத்துவிட்டு, எதற்காக அங்கு எடுத்துச் செல்லவேண்டும். எங்க குழந்தைக்கு என்ன ஆச்சு” என கேட்டு குடும்பத் தினர் கதறிக்கொண்டிருந்த நிலையில், 7.10 மணிக்கு நந்தினி இறந்துவிட்டதாகத் தகவல் சொல்லியுள்ளனர். இதனைத் தொடர்ந்து நந்தினியின் உடலை வாங்கமறுத்து அவர்கள் அந்த இடத்திலே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisment

நந்தினியின் தந்தை ரமேஷ் கூறுகையில், "2-ஆம் தேதி காலை எங்களை அழைத்து நந்தினி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். நல்லா இருந்த மகளை ஏதோ ஒரு ஊசியைப் போட்டு சாகடிச்சுட்டாங்க. இதனால் மருத்துவ மனை வளாகத்தை முற்றுகையிட்டோம். எங்க ளுடைய மகளின் சாவில் மர்மம் உள்ளது. அது என்ன ஊசி? எதற்காக எங்கள் அனுமதியில்லாமல் செலுத்தினார்கள்? அந்த ஊசியைச் செலுத்திய பிறகு எங்கள் மகள் வலியால் துடித்தாள். எங்க ளுடைய மகளின் சாவுக்கு இந்த மருத்துவமனை யும் மருத்துவர்களுமே முழுப் பொறுப்பு''’என்று கூறி கதறி அழுது துடித்தார்.

மாணவியின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகப் பெற்றோர் குற்றம்சாட்டி இருப்பதால் சந்தேக மரணம் என வழக்குப் பதிவுசெய்து, மாணவியின் உடல் அருகிலுள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக 1 மணிக்கு அனுப்பி வைக்கப்பட்டு, 3 மணிக்கு பெற் றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தச் சம்ப வம் தொடர்பாக சென்னை நேஷனல் மருத்துவ மனையின் மருத்துவர்களிடம் நாம் விளக்கம் கேட்டபோது, "நாங்கள் சரியான சிகிச்சைதான் கொடுத்தோம். எந்தவிதமான தவறான சிகிச்சையும் வழங்கவில்லை''’என்று விளக்கம் கொடுத்தனர்.

மாணவிக்குச் செலுத்தப்பட்ட ஊசியைப் பற்றிக் கேட்ட போது, அது என்ன மருந்தென்ற விவரத்தைத் தெரிவிக்கவில்லை.

நேஷனல் மருத்துமனையின் உரிமையாளர் மோகன்குமார் உத்தரகாண்ட், சிக்கிம் ஆகிய இடங் களில் "ஈஸ்ட்வெஸ்ட் பார்மா இந்தியன் பிரை வேட் லிமிடெட்' எனும் தனி மருந்து நிறுவனமே தொடங்கியுள்ளார். அதோடு, மருந்து மொத்த கொள்முதல், விற்பனையும் செய்துவருகிறார். பாண்டிச்சேரியில் இவருடைய நிறுவன மருந்துகளை தடைசெய்துள்ளனர். மருந்துகளை சிபாரிசு செய்ய மருத்துவர்களுக்கு சுற்றுலா, காஸ்ட்லி பரிசு அளிக்கும் நடைமுறையிலும் கைதேர்ந்தவர்கள் என சொல்லப்படுகிறது.

"நந்தினியின் இறப்புக்கு மருந்தே காரணம் என்று வந்தால், நிச்சயம் மோகன்குமாரின் நிறுவனம் மட்டுமில்லாமல் இந்த மருந்தை அங்கீகரித்த டி.எம்.எஸ். மருந்து இயக்குனர் தொடங்கி முக்கிய பிரமுகர்கள் வரை சிக்குவார்கள் என்பதாலும், மோகன்குமார் எடப்பாடியின் விசுவாசி என்பதாலும், ஸ்டான்லி மருத்துவமனை டீனாக இருப்பவர் இவர்களுக்கு பரிட்சயமானவர் என்பதாலும் நிச்சயம் விஷயம் மூடிமறைக்கப்படும்' என்ற குரல்களும் கேட்கின்றன.

இதுகுறித்து தமிழக மருந்து கட்டுப்பாட்டுத் துறையின் இயக்குனர் விஜயலட்சுமியிடம் கேட்ட போது, "ட்ரக் ஆக்ட் என்பது சென்ட்ரல் ஆக்ட். எந்த மாநிலத்தில் மருந்து தயார்செய்தாலும் அதனை இந்தியா முழுவதும் விற்பனை செய்யலாம். அப்படி மருந்து தமிழகம் வரும்போது அதனை சாம்பிள் எடுத்து சோதனைசெய்து அது தரமில்லை என தெரிந்தால் வழக்கு தொடுப்போம். அனுமதி மறுக்கப்படும். இந்த குழந்தைக்கு கொடுக் கப்பட்ட மருந்தும் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் முடிவு வந்தபிறகுதான் எதனையும் முடிவுசெய்ய முடியும்''’என்றார்.