கோலிவுட், டோலிவுட், மல்லு வுட், பாலிவுட் என இந்திய சினிமா உலகை ஏகத்துக்கும் அதிர்ச்சியடைய வைத்திருக் கிறது நடிகை நயன்தாரா -நடிகர் தனுஷ் மோதல்! இதனை விசாரித்தபோது மோதலின் பின்னணிகள் பகீரூட்டுகின்றன.
இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து கடந்த 2022, ஜூனில் திருமணம் செய்து கொண்டார் நயன்தாரா. தனது இளமைக் காலம், சினிமா, காதல், திருமணம், குடும்பம் ஆகியவற்றை நயன்தாரா பகிர்ந்துகொள்ளும் ஆவணப் படத்தை, "நயன்தாரா: தேவதையின் கதைக்கு அப்பால்' எனும் தலைப்பில் சர்வதேச பிரபல ஓ.டி.டி. தளமான நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம், அதனை வெளியிடுவதற்கு நயன் மற்றும் விக்னேஷ் சிவனிடம் ஒப்பந்தம் போட்டுக்கொள்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே போட்டுக் கொள்ளப்பட்ட ஒப்பந்தம் இது.
அந்தவகையில், 2022, நவம்பர் 18-ந் தேதி (நயன்தாராவின் பிறந்தநாள்) இந்த ஆவணப்படம் ரிலீஸ் ஆகியிருக்க வேண்டும். ஆனால், ரிலீஸாகவில்லை. இரண்டு ஆண்டு களாக இழுபறி யில் இருந்த இந்த ஆவணப்படம் 2024, நவம்பர் 18-ல் ரிலீஸாகும் என அறிவித்திருந்தார் நயன். அதற்கு முன் னோட்டமாக ஆவணப்படத்தின் ட்ரைலரை சமீபத்தில் ரிலீஸ் செய்திருந்தது நெட்ஃப்ளிக்ஸ்.
அதில், நயன்தாரா நடித்து விக்னேஷ்சிவன் இயக்கிய "நானும் ரவுடிதான்' பட ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்டிருந்த 3 செகண்ட் காட்சிகள் இடம்பிடித்திருந்தன. அதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த "நானும் ரவுடிதான்' படத்தின் தயாரிப்பாளரான நடிகர் தனுஷ், 10 கோடி ரூபாய் கேட்டு நயன்தாராவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
இந்த நிலையில்தான், தனுஷ் மீது பல குற்றச்சாட்டுகளை அடுக்கி நயன்தாரா எழுதிய 3 பக்க கடிதம், இருவருக்குமான மோதலை அம்பலப்படுத்தியது. நயனின் குற்றச்சாட்டுகளுக்கு நேரடியாக இதுவரை தனுஷ் பதிலளிக்கவில்லை.
தனுஷை கடுமையாக அட்டாக் செய்த இந்த கடிதத்தை தனுஷுடன் நடித்த நடிகைகள் ஸ்ருதிஹாசன், பார்வதி, நஸ்ரியா மற்றும் "யாரடி நீ மோகினி' நடிகர் கார்த்திக்குமார் உள்ளிட்ட பலரும் ஆதரித்துவருகிறார்கள். அதேபோல, தனுஷ் எடுத்த நடவடிக்கைக்கும் ஆதரவு கிடைத்து வருகிறது. இருவருக்குமான மோதலை வைத்து இரு தரப்பு ரசிகர்களும் சோசியல் மீடியாக்களில் மோதி வருகிறார்கள். இதனால் சோசியல் மீடியாக்கள் 24 மணி நேரமும் ஹாட்டாக இருந்து வருகிறது.
நயன்தாராவுக்கு தனுஷ் அனுப்பிய நோட்டீ ஸில் என்ன இருக்கிறது என்பதை ஆராய்ந்தபோது, படப்பிடிப்பில் எங்கள் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் பணியமர்த்தப்பட்ட ஒருவரால்தான் அனைத்து வீடியோக்களும் எடுக்கப்பட்டுள்ளன. அந்த காட்சிகள் வொண்டர்பார் யூ டியூப் சேன லில் அதிகாரப்பூர்வமாக ரிலீஸ் செய்யப்பட்டிருக் கிறது. அதன்படி, படத்துடன் தொடர்புடைய அனைத்திற்கும் தனுஷ்தான் பிரத்யேகமான உரிமை பெற்றவர். ஆனால், இதனை மறைத்து நெட் ஃப்ளிக்சை தவறாக வழிநடத்தியிருக்கிறீர்கள். எங்களின் அனுமதி பெறாமல் ட்ரைலரில் வெளியிடப்பட்ட அந்த காட்சிகளை 24 மணி நேரத்திற்குள் நீக்க வேண்டும். இல்லையெனில் 10 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்'’என்று தனுஷ் தரப்பில் அவரது வழக்கறிஞர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
நயனும் தனுசும் நல்ல நண்பர்கள் எனும் நிலையில் இருவருக்குமான மோதலுக்கு என்ன காரணம் என்று கோலிவுட்டின் தயாரிப்பாளர்கள், பி.ஆர்.ஓ.க்கள், வினியோகஸ்தர்கள், "நானும் ரவுடிதான்' படத்தில் சம்பந்தப்பட்ட டெக்னிஷியன் கள் என பல தரப்பிலும் விசாரித்தோம்.
அப்போது நம்மிடம் பேசிய அவர்கள், ’"நயன்தாராவுக்காகத்தான் "நானும் ரவுடிதான்' படத்தை தயாரித்தார் தனுஷ். ஆனால் அவரது நண்பரான விக்னேஷ்சிவனுக்கு வாய்ப்புத் தருவதற் காகத்தான் படத்தை தயாரிக்க முன்வந்ததாக சொல்லிக்கொண்டார் தனுஷ். பொதுவாக, புகழ்பெறுகிற அல்லது தன்னுடன் நெருக்கமான நட்பில் இருந்த பிரபல நடிகைகள் தன்னை அலட்சியப்படுத்தினால், அவர்களை பழிவாங்குகிற நரித்தனம் தனுஷிடம் இருக்கிறது.
ஃபீல்டில் தனக்குப் போட்டியாளராக கருதும் நடிகர்களை பழிவாங்க அவர்களுக்கு நெருக்கமான நடிகைகளைக் கவர்வது, தன்னுடன் அவர்கள் நெருக்கமானதும், அவர்களை வெவ்வேறு வழிகளில் பயன்படுத்த நினைப்பது, அதற்காக மோசமாக நடந்துகொள்வது ப்ளேபாய் தனுஷின் அடிப்படைக் குணம். சினிமா உலகில் பெரும்பாலானோருக்கு இது தெரியும்.
"நானும் ரவுடிதான்' படத்தில் நயன்தாரா புக் செய்யப்பட்டதற்குப் பிறகு நயன் மீது ஆதிக்கம் செலுத்தியிருக்கிறார் தனுஷ். அதற்கு பல காரணங் கள் இருக்கின்றன. அவை மிக மோசமானவை. அதில் சிக்கிக்கொண்டார் நயன். "யாரடி நீ மோகினி' படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்தபோதே அவர்மீது ஏகத்துக்கும் தனுஷ் உரிமை கொண்டாடியதை நட்பாக நினைத்தார் நயன்தாரா. ஆனால், "நானும் ரவுடிதான்' படத்தில் புக் ஆனதற்குப்பிறகுதான் தனுஷின் உண்மை முகம் அவருக்குத் தெரிந்தது. அதிலிருந்து விடுபட, குறிப் பாக தனுஷின் டார்ச்சரிலிருந்து தப்பிக்க, படத்தின் இயக்குநர் விக்னேஷ்சிவனிடம் புலம்பினார்; அதன்மூலம் பாதுகாப்பு தேடினார். நயனுக்கு ஆறுதலாக இருந்த சிவன், நயனுக்காக தனுஷிடம் குரலை உயர்த்தியிருக்கிறார். இதனால் சிவனுக் கும் தனுஷுக்கும் மோதல் வெடித்த சம்பவங்கள் உண்டு.
ஒரு கட்டத்தில் சிவன் மீது இதுவே காதலாக மலர்ந் தது. சூட்டிங் ஸ்பாட்டில் மட்டு மல்லாமல் தனிப் பட்ட முறை யிலும் நயனும் சிவனும் நேரம் கழித்தார்கள். இது தனுஷுக்கு பிடிக்கவில்லை. தனக்கு அடங்காமல் இருக்கிறாரே என நயன்தாரா மீது கோபம் காட்டினார். பல நேரங்களில் அருவருக்கத்தக்க வார்த்தைகளையும் தனுஷ் வெளிப்படுத்தியிருக்கிறார்.
நயன்தாராவை வைத்து எதற்காக படத்தை தயாரிக்க நினைத்தோமோ அது நடக்காமல், நயனின் பாதை வேறு ரூட்டில் செல்வதை ரசிக்கவில்லை தனுஷ். சுருக்கமாக நயன்தாராவின் காதலை தனுஷ் வெறுத்தார். அந்த வெறுப்பு, நயன்-சிவன் மீது தனுஷுக்கு பகையாக உருவானது. அந்த பகைதான் தற்போது நயன்தாரா கேட்ட அனுமதியை தராமல் பழி வாங்கியிருக்கிறது''” என்று சுட்டிக்காட்டுகிறார்கள்.
மேலும் இதுகுறித்து நாம் விசா ரித்தபோது, தங்களின் காதல் வாழ்க்கை யையும் திருமணத்தையும் டாகுமெண்ட் ரியாக எடுத்தபோது அதில் "நானும் ரவுடிதான்' படத்தில் எடுக்கப்பட்ட தனிப்பட்ட ஷூட்டிங் வீடியோக்கள், ஸ்பாட்டில் சிவனும் நயனும் இருக்கும் வீடியோக்கள் பலவற்றையும் தங்களின் ஆவணப்படத்தில் பயன்படுத்தியிருந்த னர். தனுஷின் சொந்த நிறுவனத்திலிருந்த அவருக்கும் நயனுக்கும் நெருக்கமான நண்பர் ஒருவரின் உதவியின் மூலம் அந்த பிரத்யேகக் காட்சிகளை வாங்கி யிருந்தார் நயன்தாரா.
தனுஷுக்கும் நயன்தாராவுக்கும் இருக்கும் மோதலும் பகையும் அந்த நண்பருக்குத் தெரியும் என்பதால், இந்த விசயத்தில் தனுஷ் பிரச்சனை செய்தால், இந்த வீடியோக்கள் எல்லாம் விக்னேஷ் சிவனின் செல்ஃபோனில் எடுக்கப்பட்டது என சொல்லிக்கொள்ளுங்கள் என நயன்தாராவிடம் ஐடியா சொல்லியிருக்கிறார் தனுஷின் நண்பர்.
இந்த சூழலில்தான், டாகுமெண்ட் ரியில் பயன்படுத்தப்பட்ட வீடியோ காட்சிகள், வொண்டர்பார் நிறுவனம் வெளியிட்டவை என்பதையறிந்து கொண்ட நெட்ஃபிளிக்ஸ், இதற்கான அனுமதியை தயாரிப்பாளர் தனுஷிட மிருந்து பெற்றுவாருங்கள் என நயன்தாராவுக்கு மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறது. பயன்படுத்தப்பட்ட காட்சிகள் எதுவும் படத்தில் இடம்பெற்றவை அல்ல; ஸ்பாட்டில் நடந்த தனிப்பட்ட காட்சிகள். அதற்கும் தயாரிப்பாளருக்கும் சம்பந்தமில்லை. அதுமட்டுமல்லாமல், இது தங்களின் செல்ஃபோன்களில் எடுக்கப்பட்டவை என நயன்தாரா தரப்பிலிருந்து விளக்கம் தரப்பட்டபோதும், அதனை நெட்ஃபிளிக்ஸ் ஏற்கவில்லை.
இதனால் அனுமதி கேட்டு தனுஷுக்கு கடிதம் அனுப்பி னார் நயன்தாரா. ஏற்கனவே இருந்த பகை, அந்த அனுமதியை தராமல் கடந்த 2 ஆண்டுகளாக இழுத்தடித்தார் தனுஷ். இந்த நிலை யில், ஆவணப்படத் தினை சுமார் 25 கோடி கொடுத்து நெட்ஃபிளிக்ஸ் வாங்கி யிருப்பதால், வருகிற நவம்பர் 18-ந்தேதி உங்கள் பிறந்த நாளில் டாகுமெண்ட்ரியை ரிலீஸ் செய்தாக வேண் டும். அதற்குள் எந்த வித சட்டச் சிக்கலும் இல்லாமல் இருக்க தயாரிப்பாளரின் அனு மதியைப் பெறுங்கள். குறிப்பிட்ட தினத்தில் ரிலீஸ் செய்ய முடி யாது போனால், எங்க ளிடம் பெறப்பட்ட தொகையை வட்டி யுடன் திருப்பிச் செலுத்தும் சூழலுக்கு நீங்கள் தள்ளப்படுவீர்கள் என நயன்தாராவை ஒருவிதமாக மிரட்டியது நெட்ஃபிளிக்ஸ்.
இதனையடுத்தே, அனுமதிக்காக சில நண்பர்களை வைத்து தனுஷிடம் நயனும் சிவனும் பேசியிருக்கிறார்கள். அனுமதி தர தனுஷ் மறுத்து விட்டார். டாகுமெண்ட்ரி வராமல் தடுக்கப்பட்டு நயனுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துவதே தனுஷின் நோக்கமாக இருந்திருக்கிறது. மேலும், அனுமதி தர வேண்டுமானால் நெட்ஃபிளிக்ஸிடம் பேசப்பட்ட வியாபாரத்தில் 50 சதவீத தொகை தங்களுக்கு வேண்டும் எனவும் தனுஷ் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட் டது. இதனால் வெறுத்துப்போன நயன்தாராவும் சிவனும், டாகுமெண்ட்ரியில் பயன்படுத்தப்பட்ட நானும் ரவுடி தான் படம் தொடர்பான காட்சிகள் அனைத்தையும் வெட்டிவிட்டு, அனுமதி தேவைப்படாத சில நொடிகள் கொண்ட காட்சிகளை மட்டும் பயன்படுத்தி ஆவணப்படத்தை கொடுத்துவிட்டனர். அதன் ட்ரைலரைத்தான் ரிலீஸ் செய்தது நெட் ஃபிளிக்ஸ்’என்கிற தகவல்களும் கிடைக்கின்றன.
தனுஷுக்கு நெருக்கமான வட்டாரங்களில் விசாரித்தபோது, ‘நயன்-சிவன் மீது எந்த தனிப்பட்ட பகையும் தனுஷுக்கு இல்லை. நானும் ரவுடிதான் படத்தை குறிப்பிட்ட தொகையில் எடுத்துத் தருவதாக விக்னேஷ் தெரிவித்திருந்தார். ஆனால், குறிப்பிட்ட நாட்களில் ஷூட்டிங் நடக்காமல் தடை ஏற்பட்டது. இதற்கு காரணம் நயன்தாரா மீது சிவன் கொண்ட மோகம்தான். இதனால் திட்டமிட்டதற்கும் அதிகமாக தயாரிப்பு செலவு அதிகரித்திருந்தது. தனுஷுக்கு பெருத்த நட்டத்தையும் ஏற்படுத்தியது.
வியாபாரரீதியாக வெற்றியடைந்து வினியோகஸ் தர்களுக்கு படம் லாபத்தைக் கொடுத்தாலும், தயாரிப் பாளரான தனுஷுக்கு லாபம் கிடைக்கவில்லை. இத னால் நயனும் சிவனும் இந்த நட்டத்தை ஈடுசெய்ய அவர்களிடம் பேசினார் தனுஷ். ஏனெனில், அவர்கள் இருவரும் காதல் வயப்பட்டதால்தான் திட்டமிடப் பட்ட நாளில் ஷூட்டிங்கை முடிக்காமல் காலதாமதம் ஆனதில் படத்தின் தயாரிப்பு செலவு எகிறியது. அதனால் நட்டத்தை ஈடுகட்ட முன்வர வேண்டும் என தனுஷ் தரப்பில் சொல்லப்பட்டதை ஏற்க மறுத்து விட்டனர். அதனால் கோபமடைந்த தனுஷுக்கு, அந்த கோபம் இப்போதுவரை இருப்பது இயல்பானதுதான்.
இந்த ஆவணப்படத்தை நெட்ஃபிளிக்ஸுக்கு நயன்தாரா இலவசமாகக் கொடுக்கவில்லை. பெரிய தொகைக்கு விற்றிருக்கிறார். அப்படியிருக்கையில், வொண்டர்பார் நிறுவனத்துக்கு உரிமையுள்ள காட்சிகளையும், வீடியோக்களையும் பயன்படுத்த தனுஷ் தரப்பில் பண பேரம் பேசுவது எப்படி தவறா கும்? வியாபாரரீதியாக நயன் இருக்கும்போது அதே வியாபாரத்தனத்தை தனுஷ் கையாள்வது சரிதானே?
ஆக, 3 நொடிகள் கொண்ட காட்சிகளாக இருந் தாலும், 30 நிமிட காட்சிகளாக இருந்தாலும் அனுமதி பெறாமல் பயன்படுத்துகிறபோது சட்டரீதியாக நஷ்டஈடு கேட்பது தவறில்லை. அதைத்தான் தனுஷ் செய்திருக்கிறார்''’என்று விரிவாகச் சொல்கின்றனர்.
சினிமா உலகில் வேறு ஒரு அக்கப்போர் வரும்வரை நயன்-தனுஷ் மோதல் வெவ்வேறு வடிவங்களில் வெடித்தபடிதான் இருக்கும்!