ந்தியாவையே ஆட்டிப் படைத்த பிரச்சினைகளுள் ஒன்று பாபர் மஸ்ஜித்- ராமர் கோவில் விவகாரம். பாபர் மஸ்ஜித் இருந்த இடத்தில்தான் ராமர் கோவில் இருந்ததாக இந்தியாவெங்கும் ஆறு ரத யாத்திரைகளை நடத்தி பிரச்சாரத்தை மேற்கொண்டார் அத்வானி. இந்துத்துவ அமைப்புகளும் அணிதிரண்டு இதை தேசியப் பிரச்சனையாக்கின.

rar

2019-ல் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, சர்ச்சைக்குரிய இடம் இந்துக்களுக்கே சொந்தம் என தீர்ப்பளித்தது. இதனையடுத்து அயோத்தி கோவில் கட்டுவதற்கான வேலைகள் வேகமெடுத்தன. கொரோனா முதல் அலைக்கு நடுவிலும் பிரதமர் மோடி, அயோத்தி கோவில் கட்டுவதற்கான பூமி பூஜையில் கலந்துகொண்டார்.

இந்நிலையில்தான் சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த பவான் பாண்டே, ராமர் கோவிலைச் சேர்ந்த ட்ரஸ்ட் இந்நிலத்தை பத்து மடங்கு அதிக விலை கொடுத்து வாங்கியுள்ளதாகவும், பத்து நிமிடத்துக்கு முன்பு 2 கோடிக்கு வாங்கப்பட்ட நிலம், பத்து நிமிடங்களுக்குப் பின்பு 18 கோடிக்கும் கூடுதலாக ட்ரஸ்டுக்கு விற்கப்பட்டு ராமபக்தர்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் விமர்சனம் செய்தார்.

Advertisment

ஹரிஷ் பதக், குசும் பதக்கிடமிருந்து மார்ச் 18-ஆம் தேதி சுல்தான் அன்சாரி, ரவி மோகன் திவாரி என்பவர்கள் 2 கோடிக்கு நிலத்தை வாங்குகின்றனர். அதே நிலம் பத்து நிமிட இடைவெளியில் ராமர் கோவில் ட்ரஸ்ட்டிடம் 18.5 கோடிக்கு விற்கப்படுகிறது. கிட்டத்தட்ட நிலத்தின் மதிப்பு ஒரு நொடிக்கு 5.50 லட்சம் ரூபாய் அதிகரித்திருக்கிறது என பவான் பாண்டே குற்றம்சாட்டியுள்ளார்.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக 15 உறுப்பினர்களைக் கொண்ட அறங்காவலர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன் பொதுச்செயலாளர் சம்பத் ராய். இவர் வேறு யாருமல்ல, பாபரி மஸ்ஜித் இடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட விஸ்வ இந்து பரிசத் அமைப்பைச் சேர்ந்தவர்களில் ஒருவர். பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தபின், சி.பி.ஐ. சிறப்பு விசாரணை நீதிமன்ற நீதிபதியால் சம்பத் ராயும் மற்றவர்களும் பாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கில் குற்றவாளிகள் அல்ல என்று விடுவிக்கப்பட்டனர்.

பக்தர்களிடமிருந்து ராமர் கோவில் கட்டுவதற்காக குறைந்த காலத்தில் 3,200 கோடிக்கும் அதிகமாக நிதி குவிந்துள்ளது.

Advertisment

rar

கோவில் கட்டுவதற்காக வாங்கப்பட்ட நிலம், அயோத்திக்கு அருகிலுள்ள கிராமத்தில் அமைந்துள்ளது. 12,080 ச.மீ அளவுடைய இந்நிலம் இரண்டு கோடிக்கு வாங்கப்பட்டுள்ளது. ஆனால் பத்து நிமிட இடைவெளியில் அந்த நிலத்தை விற்பவருக்கும் ராமர் கோவில் ட்ரஸ்டுக்கும் இடையிலான அக்ரிமெண்டில் அந்த நிலத்தின் மதிப்பு 18 கோடியாக அதிகரித்துள்ளது.

ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த சஞ்சய் சிங்கும் இதே குற்றச்சாட்டை முன்வைத் துள்ளதோடு, இது சம்பந்தமான ஆவணங் களையும் வெளியிட்டுள்ளார். ட்ரஸ்டின் பணம் தவறாக கையாளப்பட்டுள்ளது. அத்துடன், பல லட்சக்கணக்கான ராமபக்தர்களின் நம்பிக்கையை பொய்யாக்கியுள்ளனர் என விமர்சித்துள்ளார்.

விவகாரம் வெட்டவெளிச்சமானதும், பாபர் மஸ்ஜித் விவகாரத்துக்குப் பின் அயோத்தியில் நிலங்களின் விலை மிக அதிகமாக உயர்ந்துள்ளது. 2 கோடி என்பது பல வருடங்களுக்கு முன் நிலத்துக்கு சொந்தக் காரர்களிடமிருந்து இப்போது ராமர் கோவி லுக்கு நிலத்தை விற்றவர் வாங்கிய விலை. நூறு வருடமாக விஸ்வ இந்து பரிஷத் மீது எதிரிகள் குற்றம் சாட்டிக்கொண்டுதான் இருக் கிறார்கள் என சமாளிக்கிறார் சம்பத் ராய்.

"ராமருக்கே நாமமா?'…இந்த விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை வேண்டுமென உரத்துக் குரல்கொடுக்கத் தொடங்கியுள்ளன எதிர்க்கட்சிகள்.