""அ.தி.மு.க. நடத்திய பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சான்று'' என்று, தற்போது நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியிருக்கிறார். தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கு இறுதிக் கட்டத்தில், இறுதித் தீர்ப்பு மே 13ஆம் தேதி வரவுள்ளது.

இந்த சூழலில், பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தை இவ்வுலகின் பார்வைக்கு வெளிக் கொண்டுவந்த நக்கீரனின் புலனாய்வு மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. 2019ஆம் ஆண்டில், ""அண்ணா அடிக்காதீங்க.... அண்ணா அடிக்கா தீங்க..... கழட்டிடுறேன்.... அண்ணா... பெல்ட்டால அடிக்காதீங்கண்ணா'' என்ற இளம்பெண்ணின் கதறல் ஆடியோவை கேட்டு பதறிப்போய், அந்த கொடூரம் குறித்து புலனாய்வு செய்து, பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த இளம்பெண்கள் பலரையும் ஏமாற்றி, பலவந்தப்படுத்தி கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்த காமக்கொடூர மிருகங்களை சமூகத்தின்முன் அடையாளப்படுத் தியது நக்கீரன் மட்டும்தான்.

ss

பொள்ளாச்சி பகுதியில் கல்லூரி மாணவிகள், இளம் பெண்களைக் குறி வைத்து வேட்டையாடி யது ஒரு கொடூர காமவெறிக் கும்பல். அந்த காமக்கொடூரர்களிடம் சிக்கிய அப்பாவி இளம் பெண்கள் அலறிய அலறல்.... கதறல்.... கண்ணீர்... வேதனை... துடிதுடிப்பு... என அனைத்தையும் தாங்கமுடியாத மனத்துயரத்தோடு நக்கீரன் பதிவு செய்தது. மேலும், நக்கீரன் இணையக் காணொலிக்காட்சி வாயிலாக மக்களிடம் கொண்டு சேர்த்தார் நமது நக்கீரன் ஆசிரியர். நாடு முழுக்க மக்கள் அனைவரும் கொதித்தெழுந்தனர்.

Advertisment

அப்போது நடந்துகொண்டிருந்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியில், கட்சி செல்வாக்கு தங்களைக் காப்பாற்றுமென்ற தைரியத்தில், இளம்பெண்களைச் சூறையாடிய மனித மிருகங்களை கைது செய்து தண்டிக்க வேண்டுமென்று நக்கீரன் எழுப்பிய முதல் குரல், தமிழகம் மட்டுமல்லாது, உலகம் முழுவதும் எதிரொலித்ததால் அது மக்கள் போராட்டமாக மாறி, அ.தி.மு.க. ஆட்சியாளர்களையே அசைத்துப் பார்த்தது.

பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக நீதி வேண்டும் என்றும், குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்பட வேண்டும் என்றும் தி.மு.க. மகளிரணி சார்பில் கனிமொழி தலைமையில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் எல்லாம் பொள்ளாச்சியில் நடை பெற்றது. பொள்ளாச்சி கொடூரம் தொடர்பான ஒவ்வொரு அசைவையும் நக்கீரன் தொடர்ச்சியாகப் பதிவுசெய்து மக்களின் பார்வைக்கு கொண்டுசென் றது. தொடர்ச்சியான மக்கள் எழுச்சியின் அழுத்தம் காரணமாக, முதலில் அந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. ஆனால் ஆளுங்கட்சி முக்கிய பிர முகரின் வாரிசே இதில் சம்பந்தப்பட்டிருப்பதாகத் தெரியவந்ததால், சி.பி.சி.ஐ.டி. விசாரணை நம்பக மானதாக இருக்காது, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்கா தென்று போராட்டம் வலுத்தது.

மேலும், இவ்வழக்கு தொடர்பாக நமது நக்கீரன் ஆசிரியரையும் சி.பி.சி.ஐ.டி. அழைத்து விசாரணை செய்தது. விசாரணையின்போது கக்கன் பேத்தி எஸ்.பி. ராஜேஸ்வரி, ""யாரைக் கேட்டு இந்த வீடியோவை ரிலீஸ் செய்தாய்?'' என ஆசிரியரை மிரட்டினார். இதை எதிர்த்து நீதிமன்றம் சென்ற தும், வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றம். சி.பி.ஐ.யிலும் ஆசிரியர் நேரில் சென்று சாட்சியமளித்தார்.

Advertisment

நக்கீரன் வெளிக்கொண்டுவந்த சாட்சிகளை ஆதாரமாகக் கொண்டு, அ.தி.மு.க. கூடாரத்தில் ஒளிந்துகொண்டிருந்த பொள்ளாச்சியை சேர்ந்த திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன் ஆகிய ஐந்து பேர் முதலில் கைது செய்யப்பட்டார்கள். மீண்டும் விசாரணை வலுத்ததில், ஹேரேன்பால் பாபு என்கிற பைக் பாபு, அருளானந்தம், அருண்குமார் ஆகிய நான்கு பேர் 2021 ல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக் கப்பட்டார்கள். கைது செய்யப்பட்ட காமக்கொடூ ரன்கள் ஒன்பது பேர் மீதும் பாலியல் வன் கொடுமை, பாலியல் அத்துமீறல், சித்ரவதை, கூட்டுச் சதி, தடயங்கள் அழிப்பு உட்பட 13 பிரிவு களின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

கோவை சிறையிலிருந்து அவர்கள் அனைவரும் சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்கள். குற்றவாளிகள் தரப்பில் வழக்கு விசாரணையை தாமதப்படுத்த பலவிதமான அரசியல் குறுக்கீடுகள், முயற்சிகள் எடுக்கப்பட்டன, அவை அனைத்தையும் நக்கீரன் அம்பலப்படுத்தி முறியடித்துவந்தது.

இந்நிலையில், சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவர, தி.மு.க. ஆட்சிப் பொறுப்புக்கு வந்தால் பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கின் விசாரணையை விரைவுபடுத்தி, பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவருக்கும் நீதி பெற்றுத்தரப்படும் என்று மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தின் போது அறிவித்தார். அதற்கேற்ப, தி.மு.க. ஆட்சிப்பொறுப்பேற்றதும், பொள்ளாச்சி பாலியல் வழக்கு விசாரணையை விரைவில் நடத்திமுடிக்க ஏதுவாக சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது.

ss

கோவை மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி, இவ்வழக்கில் பாதிக்கப்பட்ட இளம்பெண்களின் பாதுகாப்பில் மிகுந்த கவனமெடுத்துக்கொண்டார். பாதிக்கப்பட்ட இளம்பெண்களிடம் ரகசிய வாக்குமூலம் பெறப்பட்டது. குற்றவாளிகள் 9 பேரும் ஒவ்வொரு வாய்தாவுக்கும் சேலம் சிறையிலிருந்து கோவை நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டார்கள். இப்படி நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டு, மீண்டும் சேலம் சிறைக்கு அழைத்துச்செல்லப்படும் போது, இடையில் ஓரிடத்தில் குற்றவாளிகளின் வேன் நிறுத்தப்பட்டு, உறவினர்கள் அவர்களை சந்தித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த சம்பவத்தை நக்கீரன் அம்பலப்படுத்தியது. அதையடுத்து, குற்றவாளிகளுக்கு சலுகை காட்டியதாக சேலம் ஆயுதப்படையைச் சேர்ந்த சிறப்பு எஸ்.ஐ. மற்றும் ஏழு போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

அந்த சம்பவத்திற்கு பிறகு ஒவ்வொரு வாய்தாவுக்கும் சேலம் சிறையிலிருந்தபடியே வீடியோ கான்பரன்ஸ் மூலமாக குற்றவாளிகள் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில் பங்கெடுத்தனர். வழக்கு விசாரணை ஒவ்வொரு நாளும் நடைபெறத் தொடங்கியது. பாதிக்கப்பட்டவர்கள் இளம்பெண்கள் என்பதால் இந்த வழக்கு விசாரணை குறித்த சிறு தகவல்கூட பொதுவெளியில் வந்துவிடக்கூடாது என்பதில் கோவை மகளிர் சிறப்பு நீதிமன்றம் உறுதியாக இருந்தது. குற்றவாளிகள் மற்றும் அரசுத் தரப்பு வழக்கறிஞர்களிடம் அபிடவிட் பெறப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டது. இவ்வழக்கில் 50க்கும் மேற்பட்ட அரசு தரப்பு சாட்சிகள் விசாரிக்கப்பட் டுள்ளார்கள். சுமார் 200 ஆவணங்கள், 40 மின்னணுத் தரவுகள் உட்பட பறிமுதல் செய்யப்பட்ட அனைத் துப் பொருட்களும் விசாரணைக்கு சேர்க் கப்பட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

வழக்கு விசா ரணையில் பாதிக்கப் பட்ட எட்டு பேர், குற்றம்சாட்டப் பட்டவர்களுக்கு எதிராக தங்களது சாட்சியத்தை அளித்துள்ளார்கள். அரசுத் தரப்பு சாட்சியங்கள் அனைத்தும் நிறைவுபெற்ற பிறகு குற்றவாளிகள் ஒன்பது பேரிடமும் சட்ட விதி 313-ன்படி கேள்விகள் கேட்பதற்கு, கடந்த ஐந்தாம் தேதி அவர்கள் அனைவரும் கோவை கோர்ட்டில் நீதிபதி நந்தினி தேவி முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டனர். குற்றவாளிகள் ஒவ்வொரு வரிடமும் 50 கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் எழுத்துப்பூர்வமாக பதில் கொடுத் தார்கள். தொடர்ந்து வழக்கு விசாரணை நடைபெற்று இருதரப்பு வாதங்களும் நிறைவு பெற்றது. சென்ற 28ஆம் தேதி நீதிபதி நந்தினி தேவி முன்னிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. சாட்சி விசாரணை, குறுக்கு விசாரணை, கோர்ட் டில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் சரிபார்ப்பு என அனைத்து நடவடிக்கைகளும் நிறைவுபெற்று விட்டதால் வருகிற மே 13ஆம் தேதி இந்த வழக்கின் தீர்ப்பு சொல்லப்படும் என்று நீதிபதி நந்தினி தேவி அறிவித்தார்.

பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நின்று... நீதியின் பக்கம் நின்று... அநியாயத்திற்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்துவரும் நக்கீரன் புலனாய்வின் மூலம் தோலுரித்த இந்த பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவத்திற்கு நீதி தேவதை தீர்ப்பு எழுதத் தொடங்கிவிட்டார்... நாடே எதிர்பார்க்கும் அந்தத் தீர்ப்பு, தமிழகத்திற்கு ஒரு முன்மாதிரியாக இருக்குமென்றும், பாதிப்புக்குள்ளான இளம்பெண்களுக்கான நீதியாக, காமக் கொடூரன்களுக்கு எதிராக சுழற்றிய சாட்டையாக இருக்குமென்று வழக்கறிஞர்கள் நம்பிக்கையோடு கூறுகிறார்கள்.

இந்த வழக்கை விசாரித்துவரும் கோவை மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவிக்கு கரூருக்கு பணியிட மாறுதல் வந்துள்ளது. ஆனால் இவ்வழக்கின் தீர்ப்பை மே 13-ல் அறிவித்துவிட்டுதான் இடமாறுதலில் செல்ல உள்ளார் நீதிபதி.

______________

வாக்குறுதியை நிறைவேற்றிய தி.மு.க!

அ.தி.மு.க. எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடந்த ஆட்சியில் நடந்த பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை தி.மு.க. அரசு அமைந்ததும் விரைந்து விசாரணை நடத்தி வழக்கை முடித்து குற்றவாளிகள் அனைவருக்கும் சட்டரீதியான தண்டனை வாங்கித் தரப்படும், பாதிக்கப்பட்டவர் களுக்கு நீதிவழங்கப்படும் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சொன்னதுபோலவே வழக்கு விசா ரணையை நடத்தி முடித்து தீர்ப்பு வழங்கப்படவுள்ளதால் தி.மு.க.வின் வாக்குறுதி நிறைவேறுகிறது!