தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் பக்கமுள்ள குறும்பலாப்பேரி கிராமத்தைச் சேர்ந்த கணேசன் (சுவாமி பவதுத்தா) என்பவர் ஈஷாவிலிருந்து காணாமல் போனது குறித்து, கடந்த நக்கீரன் இதழில், 'ஜக்கி ஆசிரம மர்ம மரணம்' என்ற தலைப்பில் எக்ஸ்க்ளூசிவ் செய்தியை வெளியிட்டிருந் தோம். கணேசன் காணாமல் போனதும் அவரைத் தேடி ஈஷாவுக்குச் சென்ற அவரது அண்ணன் திருமலைக்கு சரியான பதிலைத் தராத ஈஷா மையத்தினர், அவரிடம் காவல் நிலையத்தில் வைத்து கட்டாய வாக்குமூலமும் பெற்றிருக்கிறார்கள். கணேசனின் செல்போனையும் பதுக்கியிருக்கிறார்கள்.

esha

இதுகுறித்து விசாரிப்பதற்காக கணேசனின் குடும்பத்தினரைத் தேடி, குறும்பலாப்பேரி கிராமத்துக்கே சென்றோம். குறும்பலாப்பேரியைச் சேர்ந்த செல்லையா என்பவருக்கு மூன்று மகன்கள், ஒரு மகள். திருமலை, ராமசாமி, கணேசன் ஆகியோரில் மூன்றாவது மகன் கணேசன் தான் ஈஷாவில் காணாமல் போனவர். தனது தம்பியைத் தேடிச்சென்றது குறித்து, வெள்ளந்தியான மனதோடு திருமலை பேசத்தொடங்கினார். "விவசாயமும் கூலி வேலையும் தான் எங்களுக்கு. எங்களுக்கெல்லாம் எழுதப்படிக்கத் தெரியாததால கணேசனாவது படிக்கட்டும்னு, கடன்பட்டு அவன ஐ.டி.ஐ. மெக்கானிக்கல் இன்ஜினியரிங் வரை படிக்க வைச்சோம்யா.

அவன் நல்லா படிச்சதால அந்தக் கல்லூரியே அவன கோவைல உள்ள கம்பெனிக்கு 1994-ல் வேலைக்கு அனுப்பிச்சது. அவனுக்கு பொண்ணு பார்க்கலாம்னு முடிவு பண்ணுனப்ப, "எனக்கு கல்யாணம் வேண்டாம், அதுல விருப்பமில்லை, என்னால ஒரு பொண்ணோட வாழ்க்கை கெட வேண்டாம்'னு சொல்லிட்டான். "சரிப்பா உன் இஷ்டம்'னு நானும் விட்டுட்டேன்.

இதுக்கிடைல தான் திடீர்னு 2007-ல் கணேசன் ஈஷா யோகா மையத்திற்கு எனக்கே தெரியாம போயிட்டான். "நா ஈஷா யோகா மையத்துக்கு தன்னார்வச் சேவைக்காக வந்துட் டேன்'னு சொன்னதும் எனக்கு ஒரு மாதிரி யாயிடுச்சு. அங்க... "மின்சாரம் சம்பந்தமான வேலையப் பார்க்கிறேன். உங்க பாதை வேறயாயிடுச்சு. என்னை இப்டியே விட்டுடுங்க. நல்லா உழைங்க. குடும்பத் தைப் பார்த்துக்குங்க'ன்னு சாமியார் மாதிரியே பேசுனதோடு, "என் பேரு சுவாமி பவதுத்தா'ன்னும் சொன்னான். ஈஷாவுக்குள்ள போனதிலருந்து அவன் அடிக்கடி எங்கிட்ட பேசமாட்டான். நா பேசுனாலும் உடனே எடுக்கமாட்டான். கொஞ்சநேரம் கழிச்சி அவன் பேசுவான். ரெண்டு, மூணு வார்த்ததான் பேசுவான். நா அவனப் பத்தி கேட்டவுடனே போன கட் பண்ணிடுவான். எங்கயிருந்தாலும் அவன் நல்லாயிருக்கட்டும்னு விட்டுடுவேன். ஈஷாவுக்குள்ள போனதுலருந்து வீட்டுக்கு சம்பளம் அனுப்புறத விட்டுட்டான்.

அவனப்பத்தி விவரம் சரியா அடைபட லைன்றதால, அவன் ஈஷாவுக்கு போனதுக்கு சில வருஷம் கழிச்சி நான் அவனப் பார்க்கப் போனேன். அப்ப அவங்கூட இருந்தவங்கள முக்கியமான நிர்வாகிங்கன்னு சொன்னான். அப்ப அங்க வந்த ஈஷா சாமிகிட்ட "எங்கண்ணன்'னு என்னை அறி முகம் பண்ணிவச்சான். அவரும் வணக்கம் போட் டுட்டுப் போயிட்டாரு. அந்த நேரத்தில அவங்கூட இருந்தவங்க, கணேசன் (சுவாமி பவதுத்தா) உண்மையாவும், விசுவாசமாவும் தொண்டூழியப் பணிகளச் செய்றதால ஈஷாவுக்கு நெருக்கமாயிட் டார். நிர்வாகத்தில் மேல்மட்டம் வரை வந்தவரு, முக்கியமான மூணாவது இடத்திலயிருக்காருன்னு சொன்னாங்க. அப்ப ஈஷாவுல எனக்கு சாப்பாடு குடுத்தாங்க. எல்லாமே பச்சை பச்சையா இருந்திச்சி. எனக்கு அது புடிக்கல. இதையா சாப்புடுறாங்கன்னு எனக்கு ஒரு மாதிரியாயிருச்சி. நா வெளிய வந்திட்டேன்.

இந்த நெலமையில 02.03.2023 அன்னக்கி ஈஷாவுலருந்து எனக்கு போன் வந்துச்சி. "கணேசன் அங்க வந் தாரா?'ன்னு கேட்டாங்க. "வரலியே, ஏன், என்ன பிரச்சினை?'ன்னு கேட்டப்ப, அவங்க பதில் சொல்லல. எங்களுக்கு கெதக்குன்னு ஆயிருச்சி.

நான் உடனே என்னோட உறவுக்காரங்க, தெரிஞ்சவங்ககிட்ட விசாரிச்சுப் பார்த்தேன். எதுவுமே புரிபடாததால, ஆறாம் தேதி ஈஷாவுக்கு நேர்லயே போயிட்டேன். அங்கருக்க நிர்வாகிங்க கிட்ட விசாரிச்சப்ப, ஈஷா சாமி நேபாளம் போய்ட்டார்னு சொன்னாங்க. கணேசனப் பத்தி கேட்டப்ப 28ஆம் தேதி கணேசன் ஈஷா மையத்தில் யார்ட்டயும் சொல்லாம தன்னிச்சையா ஆட்டோவுல ஏறிப்போனவன் திரும்ப வரலைன்னு சொல்லி, ஒரு வீடியோவுல(சி.சி.டி.வி.) காட்டு னாங்க. நா ஒண்டியாப் போனதால என்னால வேறெதுவும் கேக்க முடியல. வேற வழி தெரியாம அங்கருக்க போலீஸ் ஸ்டேஷனுக்குப் போனேன் (ஆலாந்துறை காவல் நிலையம்). அப்ப, மையத்தில உள்ளவங்களும் எங்கூடவே வந்தாங்க, அவங்ககிட்ட நான் பேசல. போலீஸ் ஸ்டேஷன்ல புகார் குடுத்தப்ப அத அவங்க வாங்கல. ஈஷாவுல புகார் குடுத்திருக் காங்க, விசாரிக் கோம்னு சொன்ன இன்ஸ்பெக்டர், எங்கிட்ட வாக்கு மூலம் வாங்கு னாரு. அதை வீடி யோ பண்ணுனாங்க. எனக்கு எழுதத் தெரி யாததுனால, ஈஷா ஆட்களே ஒரு வாக்குமூலத்த எழுதி, காணாமல் போன தம்பியைக் கண்டுபிடிக்க ஈஷா மையம் வழக்குப் பதிவு செய்து துரிதமா செயல்பட்டு வருவதாக நான் ஒத்துக்கிட்ட மாதிரி கையெழுத்து வாங்கிட்டாங்க.

Advertisment

esha

"ஒரு வாரம் பொறுங்க. இதப்பத்தி யார்ட்டயும் பேசாதீங்க. போலீஸ் கண்டுபிடிச்சிடும்'னு கொஞ்சம் அழுத்த மாகவே சொன்னாங்க. தம்பியப் பத்தி வேற விவரமே சொல்லல. 15 வருஷம் என் தம்பி ஈஷாவுக்கு விசுவாசமா, உண் மையா உழைச்சிருக்கான். தொலைஞ்சு பத்து நாளாகுது... அவன் என்னானான்னு இதுவரைக்கும் தெரியல. நாங்க ஆதர வில்லாதவங்க. எந் தம்பி உசுருக்கு ஈஷா தான் பொறுப்பு'' என்றவர், தன் தம்பி காணாமல் போனது குறித்து, "முதல்வ ரய்யாவிடமும், எஸ்.பி., கலெக்டரிடமும் முறையிடப் போறேன்... அவுகளத்தான் நம்பியிருக்கேன்' என்று நா தழுதழுக்கக் கூறினார்.

காவல்நிலையத்தில் கணேசனின் அண்ணன் திருமலையிடம் வாக்குமூலத்தை வலுக்கட்டாயமாக வாங்கியது ஏன்? ஈஷா சி.சி.டி.வி. காட்சிகளை போலீசார் இது வரை வாங்கி விசாரிக்காதது ஏன்? கணே சன் வெள்ளியங்கிரி மலைக் கோவி லுக்குத்தான் சென்றார் என்பது ஈஷா மையத்திற்கு எப்படித் தெரிய வந்தது? 28.02.2023 அன்று கணேசன் காணாமல் போனது குறித்து 05.03.2023 அன்றுதான் ஆலாந்துறை காவல் நிலை யத்தில் எப்.ஐ.ஆர். ஆகியுள் ளது. ஏனிந்த தாமதம்? இப்படி பல்வேறு கேள்வி கள் விடை தெரியாமல் இருக்கின்றன. ஈஷாவில் தீவிர விசாரணை நடத்தி னால் இவ்விவகாரத்தில் ஜக்கி வாசுதேவ் கைதாகக் கூடும் என தெரிகிறது.