போலீசுக்கே சவாலாக அமைந்து விட்டது நாகர்கோவில் திட்டுவிளையில் நடந்த 12 வயது சிறுவன் ஆதில் முகம்மதுவின் கொடூர கொலை. கிட்டத்தட்ட ஒரு மாதத்தை நெருங்கும் இந்த கொலைச் சம்பவத்தில், இன்னும் குற்றவாளி யைக் கைதுசெய்யாததால் போலீசார்மீது அதிருப்தி எழுந்துள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் வெங்கா னூர் பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் நஜீம்-சுஜிதா தம்பதியினரின் மகனான ஆதில் முகம்மது அங்குள்ள தனியார் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்துவந்தான். ஆதில் முகம்மதுவுக்கு செல்போனில் கேம் விளையாடுவதில் ஆர்வம் அதிகம். ஒவ்வொரு ஆண்டு விடுமுறையின் போதும் திட்டுவிளையிலிருக்கும் பாட்டி வீட்டுக்கு வருவது வழக்கம். இந்த ஆண்டும் அதேபோல் கடந்த ஏப்ரல் மாதம் வந்தான். மே 6-ஆம் தேதி அதே தெருவிலுள்ள நண்பன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அஸீஸ் (14) என்பவனுடன் விளையாடச் சென்றவன் திரும்ப வரவில்லை. ஆதில் முகம்மது முதுகில் வெட்டுக் காயத்துடன் மணதிட்டை பாறை குளத்தில் அரை நிர்வாணத்துடன் பிணமாகக் கிடந்ததை ஒருநாள் இடைவெளியில் கண்டறிந்தது போலீஸ்.
பெற்றோருக்கும் ஊராருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த கொலைச் சம்பவம் குறித்து பூதப்பாண்டி போலீசார் வழக்குப் பதிவுசெய்துள் ளனர். எதற்காக இந்த கொலை நடந்தது? கொலையாளிகள் யார்? என்று விசாரணை நடத்தி வரும் நிலையில் விசாரணையில் பெரிய முன்னேற் றம் எதுவும் ஏற்படவில்லை.
இதுகுறித்து நம்மிடம் பேசிய ஆதில் முகம்மதுவின் தந்தை நஜீம், "மகன் திட்டு விளைக்கு வரும்போதெல்லாம் அவன் வெளியில் விளையாடுவதும் செல்போனில் சேர்ந்து கேம் விளையாடுவதும் அஸீஸுடன் தான். ச்ழ்ங்ங் ச்ண்ழ்ங்ம்ஹஷ் கேம் விளையாடும்போது ரெண்டு பேரும் அடிக்கடி கோபப்படுவதும் சண்டை போடுவதும் உண்டு. ஆதில் முகம்மதின் செல்போனில் அஸீஸின் ஐடியை லாகின் செய்து ஆதில் முகம்மது விளையாடிக் கொண்டிருந்தான். அவன் சாப்பிடாமல் விளையாடிக்கொண்டிருந்த கோபத்தில் அவனின் சகோதரி அந்த கேம் ஐ டெலிட் செய்துவிட்டார். இதனால் கோபத்திலிருந்த அஸீஸ் தனது நண்பர்கள் சிலரிடம் அந்த கேம் மூலம் 80 ஆயிரம் மதிப்புடைய பாயின்ட்ஸ் வச்சிருந்தேன் என சொல்லி ஆதில் முகம்மதுமீது கோபத்தில் இருந்துள்ளான்.
மே 6-ஆம் தேதி மதியம் 1.30 மணிக்கு வீட்டுக்கு வந்த அஸீஸ் சாப்பிட்டுக்கொண்டிருந்த ஆதில் முகம்மதுக்கு நீ ஊருக்கு போறயில்லையா எனக் கூறி தன்னுடைய கையால் இரண்டு பிடி சோறெடுத்து ஊட்டினான். பிறகு திரும்ப 3.30 மணிக்கு வீட்டுக்கு வந்த அஸீஸ், முகம்மதுவை அழைச்சிட்டு விளையாடலாம்னு கூப்பிட்டுட்டுப் போனான்.
வீட்டுல இருந்த அவனுடைய அம்மாவும் பாட்டியும் வழக்கம்போல தெருவுல எங்கேயாவது விளையாடுவாங்கனு இருந்திட்டாங்க. மாலை 5.30 மணிக்கு அஸீஸ் மட்டும் நடந்து அவன் வீட்டுக்கு வந்தான். அவன்கிட்ட ஆதில் முகம்மதுவைப் பற்றிக் கேட்டதுக்கு முன்னுக்குப்பின் முரணா மாற்றி, மாற்றி பேசிக்கொண்டிருந்தான். அவனின் பேச்சை நம்பி ஊரு முழுக்க தேடினோம். கடைசியில் 8-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வீட்டிலிருந்து சுமார் 1 கி.மீ தூரத்திலுள்ள குளத்தில் கொலைசெய்யப்பட்டுக் கிடந்தான். அப்போது முதல் என் மனைவியும் மகளும் இன்னும் நடைபிணமாகத்தான் இருக்கி றார்கள்''’என தேம்பி அழுதவர், “"என் மகனின் கொலை தொடர்பா நாங்க சந்தேகப்படுற நபர் அஸீஸ்தான். அவனை விசாரிக்கவேண்டிய ரீதியில் விசாரித்தால் ஒரே நாளில் உண்மை தெரிந்துவிடும்''’என்றார்.
ஆதில் முகம்மதுவின் தாய்மாமன் சுனில், "எங்களுக்கு அஸீஸ் மீதுதான் முமுக்க முமுக்க சந்தேகம் இருக்கிறது. ஆதில் முகம்மதுவை தெரு வின் ஒரு வழியாக அழைத்துச்செல்கிறான். இன் னொரு தெரு வழியாக அஸீஸ் மட்டும் வருகிறான். இது சி.சி.டி.வி. காமிராவில் பதிவாகியிருக்கிறது. ஆதில் முகம்மது கொலைசெய்யப்பட்டுக் கிடந்த குளம் எங்கிருக்கிறதென ஆதில் முகம்மதுவுக்குத் தெரியவே தெரியாது. ஆதில் முகம்மது பற்றி அஸீஸை தனியாக அழைத்து நாங்களும் போலீ சாரும் கேட்டபோது முதலில் கருப்பு பேன்ட்டும் வெள்ளை டி-சர்ட்டும் போட்ட மொபைல் கேம் ப்ரண்ட் ஒருத்தன் வந்தான் அவன்கூட போனான்னு சொன்னான். பிறகு பாறையில் உட்கார்ந்து மாங்காய் தின்னப் போனோம். அப்போது மிளகுப் பொடி ஆதிலின் டி சர்ட்டில் பட்டதால் அதை கழுவ குளத்துக்குப் போனான் என்றும் பிறகு மீன் வளர்க்க குளத்தில் முட்டை பாசி எடுக்கப் போனான் என்று தொடர்ந்து காரணங்களை அடுக்கிக்கொண்டே போனான். ஆதிலுக்கு இந்து கோவிலில் சாமி ஆடுவது பார்க்கப் பிடிக்கும். அத பார்க்கப் போயிருப்பானு சொன்னான். இதனால இறச்சகுளத்தில் நடந்த ஒரு கோவில் திருவிழாவில் சென்று பார்த்து அங்குள்ள சி.சி.டி.வி. காமிராவையெல் லாம் பார்த்தோம்.
போலீஸ்கிட்டயும் திரும்பத் திரும்ப பதட்ட மில்லாமல் சொல்லி எல்லாரையும் சுற்றவிடுறான். போலீசும் அவன் 14 வயசுப் பையன். நைசாதான் விசாரிக்க வேண்டும்னு சொல்லி ஒரு மாதமா விசாரிக்கிறாங்க. சம்பவம் நடந்த வெள்ளி மாலையில் அஸீஸ் தன்னுடைய வீட்டுக்கு போன கொஞ்ச நேரத்தில் அவனுடைய தாயும் சகோதரி யும் வீட்டுக்குள் சத்தம்போட்டு அழுதிருக்காங்க. அப்ப அஸீஸ் ஏதோ சம்பவத்தைச் சொல்லியிருக்கி றான்.
ஆதிலின் பாடி கிடச்ச அன்னைக்கு மதியம் அஸீஸின் தந்தை அக்பர் துபாயில் இருந்து திடீர்னு வந்தார். வந்ததும் அவர் திருவிதாங்கோட் டிலிருக்கும் அவரின் உறவினர் வீட்டுக்குதான் சென்றிருக்கிறார். அந்த உறவினர் சில போலீஸ் அதிகாரிகளுடன் நெருக்கமாக இருப்பவர். பிறகு அக்பர் இரண்டு நாட்கள் மட்டும் இங்கிருந்து விட்டு திரும்பவும் துபாய் சென்றுவிட்டார். அவர் எங்களிடம் ஆதில் முகம்மது பற்றி எதுவும் கேட்க வில்லை. ஆதிலின் பாடியைப் பார்த்ததும் அவனின் செருப்பை சற்று தூரத்திலிருந்து அஸீஸ்தான் எடுத்துவந்தான். செருப்பு அங்கு கிடந்தது உனக்கு எப்படி தெரியும்னு கேட்டதுக்கு அவன் கீழே கழற்றிப் போட்டதை நான்தான் எடுத்து அங்கு போட்டேன்னு சொன்னான். இதெல்லாம்தான் எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. என் மருமகன் இனி உயிரோடு வரப்போறதில்லை. ஆனால் அவனை எதற்காக கொலை செய்தாங் கன்னு தெரியணும். நீதி கிடைக்கணும். அதுக் காகத்தான் போராடுறோம்''’என்றார்.
அந்த பகுதி மக்களிடம் விசாரித்தபோது, "ஆதில் முகம்மதுவின் உறவினர்கள் சந்தேகப்படும் அந்த சிறுவனுக்கு ஊரில் நல்ல பெயர் கிடையாது. அவன் படித்த தனியார் பள்ளியில் சி.சி.டி.வி. காமிராவை அடித்து உடைத்ததால் பள்ளியிலிருந்து நீக்கினார்கள். இன்னொரு தனியார் பள்ளியில் சக மாணவன் ஒருவனை அடித்ததால் இப்ப அரசுப் பள்ளியில் படித்து வருகிறான். ஆதில் முகம்மது கொலைசெய்யப் பட்டுக் கிடந்த அந்த குளத்துப் பக்கம் யாரும் போகமாட்டார்கள். அங்கு கஞ்சா அடிப்பவர்கள்தான் சுற்றித் திரிந்துகொண்டிருப்பார்கள். அந்த இடத்துக்கு ஆதில் முகம்மதை இவன் என்ன காரணத்துக்கு அழைத்துச் சென்றான்? போலீசார் அதை விசாரித்து நடவடிக்கை எடுக்கவேண்டும். கேரளா சிறுவனுக்கு நடந்த சம்பவம்தானே என போலீசார் மெத்தனமாக இருப்பதாகத் தெரிகிறது''’என குற்றம்சாட்டினார்கள்.
இதுகுறித்து மாவட்ட எஸ்.பி. ஹரிகரன் பிரசாத்திடம் கேட்டபோது... "பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. கூடிய விரைவில் சிறுவனின் மரணம் குறித்தும் அனைத்தும் தெரிய வரும்''’ என முடித்துக் கொண்டார்.