மதுரையில் வருகிற ஜூன் 22-ல் பா.ஜ.க. நடத்தவிருக்கும் ”முருகபக்தர்கள் மாநாட்டிற்கான” கால்கோள்விழாவில், இந்துமுன்னணியின் தலைவர் கடேஸ்வரா சுப்பிரமணியன், பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன், விஷ்வ இந்து பரிசத், மற்றும் இந்துத்துவா அமைப்புகள் கலந்துகொண்டன. இது தென்மாவட்டங்களில் பா.ஜ.க.வை வளர்த்தெடுக்கும் என்று நம்புகிறது பா.ஜ.க. இதற்குப் போட்டியாக, "தமிழ்க் கடவுள் தமிழருக்கே!' என்று ”முருகன் மீட்பு மாநாட்டை” ஜூன் 29 அன்று நடத்த மற்றொரு அமைப்பு திட்டமிட்டுள்ளது.
"எங்கள் முருகன் எங்களுக்கே! தமிழ்க் கடவுளுக்கு தமிழில் வேதம் ஓது! ஆறுபடை முருகன் கோயில் கருவறையில் தமிழ் ஓதுவார்களை நியமனம் செய்! கருவறையி லிருந்து வேற்றுமொழி யான சமஸ்கிருதத்தை வெளியேற்று!' என்ற எதிர்கோஷத்துடன் தெய்வத் தமிழ் பேரவை யினர், மக்கள் அதிகாரம் அமைப்பு, தமிழ் மடாதிபதிகள், தமிழ் நல்லிணக்க கூட்டமைப்பு, மற்றும் பண்டாரத்தார் சமூகத்தினர் ஆகியோர் ஒன்றுசேர்ந்து திட்ட மிட்டு வருகின்றனர். மாநிலம் தழுவிய அளவில் மதுரையில் ஜூன் 29-ல் ”முருகன் மீட்பு மாநாடு” வேலைகள் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது பா.ஜ. க.வினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
“பா.ஜ.க. நடத்தும் முருக மாநாட்டில் தமிழகம் முழுவதுமிருந்து 5 லட்சத்துக்கும் அதிக மானோர் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகிறது. மாநாட்டில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி, ஆந்திர மாநில துணை முதல்வர் பவன்கல்யாண், மத்திய அமைச்சர்கள், பா.ஜ.க. தேசிய நிர் வாகிகள் பங்கேற்கவுள்ள னர். "இந்த மாநாட்டின் நோக்கம் பா.ஜ.க. உறுப்பினர்களை சட்ட மன்றத்திற்கு யாத்திரை யாகக் கொண்டு செல் வதுதான். இந்த மாநாடு மூலம் இந்துக்கள் தமி ழகத்தில் எழுச்சி பெறு வார்கள்''’என்றார் பா.ஜ.க. மா.த.வான நயினார் நாகேந்திரன். தமிழகத் தின் நகரம் மற்றும் கிரா மங்களில் செயல்பட்டு வரும் பக்தர் குழுக் களைச் சேர்ந்தவர்களை யும் பங்கேற்க வைக்க கட்சியினருக்கு உத்தர விடப்பட்டுள்ளது. முருகன் பாதயாத்திரை குழுக்கள், ஐயப்ப பக்தர்கள் குழுக்கள், ஓம்சக்தி குழுக்கள், சாய்பாபா பக்தர்கள் குழுக்களின் முக வரிகளை சேகரித்து, அப்பகுதியைச் சேர்ந்த பா.ஜ.க. நிர்வாகிகள் மூலம் குழுவினரை மாநாட் டுக்கு அழைப்பு விடுக்கவும், அவர்களின் வருகை யை உறுதிப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பா.ஜ.க.வின் முருக பக்தகள் மாநாட்டிற் குப் போட்டியாக ஆரிய கட்டுப்பாட்டிலுள்ள தமிழ்க் கடவுளை மீட்கும்விதமாக முருகன் மீட்பு மாநாட்டில், தமிழ் ஓதுவார்கள், பண்டா ரத்தார் சமூக பேரவையினர், தெய்வத்தமிழ் பேரவையினர், தமிழ் மடாதிபதிகள், தமிழ் நல்லிணக்க கூட்டமைப்பு, மதநல்லிணக்க கூட் டமைப்பு போன்றவற்றை ஒருங்கிணைத்துவரும் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் நம்மிடம், "பா.ஜ.க., விஷ்வ ஹிந்து பரிசத், இந்து முன்னணி, அதன் பரிவாரங்கள் தமிழகத்தில் பெரும் திட்டத்தோடு தமிழ்க் கடவுள் முருகனை கையிலெடுத்து மதமோதலை ஏற்படுத்தி முஸ்லிம்கள் மீது வெறுப்புணர்வை உண்டாக்கி, பெரும்பான்மை இந்து வாக்குகளை அள்ளத் திட்டமிடு கிறார்கள். தமிழகத்தில் முருகன் குறிஞ்சிநில கடவுள். முருகன் என்ற பெயரை சுப்ரமணியன் என்று சமஸ்கிருதத்தில் மாற்றினாலும் அவர்களே வேறுவழியின்றி ”முருக பக்தர்கள் மாநாடு” என்றுதான் சொல்லவேண்டியுள்ளது.
நாங்கள் கேட்பது ஒன்றே ஒன்றுதான், பா.ஜ.க. நடத்தும் முருக மாநாட்டில் தமிழ்க் கடவுள் முருகனுக்கு தமிழில்தான் வேதம் ஓதவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்று வார்களா? அதேபோன்று நாயக்கர் மன்னர் காலம் வரை ஆறுபடை முருகன் கோயிலில் பூசைசெய்த பண்டாரத்தவர் சமூகத்தினரின் உரிமையை மீட்டு அவர்களே பழனி முருகன் கோயிலில் பூஜை செய்யவேண்டும் என்று மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றுவார்களா? அது அவர்களால் முடியாது. ஜூன் 29-ல் நடத்தும் முருக மீட்பு மாநாட்டில் மேற் சொன்ன தீர்மானங்களைப் போடுகிறோம். எங்கள் கூட்டமைப்புகள் கிராமம் கிராமமாக நகரம் நகரமாக முருக பக்தர்களிடம் செல்கிறோம். தமிழ்க் கடவுள் முருகனுக்கு அர்ச்சனை தமிழில் இருக்கவேண்டுமா? வேற்று பாஷை சமஸ்கிருதத்தில் இருக்க வேண்டுமா? பழனிமுருகன் கோயிலில் ஆண்டாண்டு காலமாக பூஜை செய்த தமிழ் பண்டாரத் தார்களை மீண்டும் அரசு அங்கு பணியமர்த்த வேண்டும் என்று மக்களிடம் எடுத்துக்கூறி, பல லட்சம் தமிழர்களை ஒன்றுதிரட்ட விருக்கிறோம்''’என்றார்.
முருகன் மீட்பு மாநாடு குறித்து தெய்வத் தமிழ் பேரவையின் தலைவரும் சாமியாருமான சத்யபாமா நம்மிடம், "எங்கள் அமைப்பின் சார்பில் அனைத்து கோயில் குடமுழுக்கு நிகழ்ச்சிகளை இனி தமிழில்தான் நடத்தவேண்டும் என்று கடந்த பத்து வருட மாகப் போராடிவருகிறோம். தற்போது சங்பரி வார், ஆரிய அமைப்புகள் ஒன்றுசேர்ந்து முரு கனைக் கையிலெடுத்து மதவாத அரசியலை முன்னெடுக்கிறார்கள். இதை முறியடிக்கவேண் டும். திருமுருகாற்றுப் படை, முருகனுக்கு தினை அரிசியில் ஆட் டை வெட்டிய இரத்தம் கலந்த படையல் வைக்க வேண்டும் என்று சொல்கிறது. தமிழில் ஆகம மந்திரங்கள், திருவாசகம், திருமந்திரம் 2,500 வருடமாக கருவறையில் பாடப்பட்டு வந்த வழக்கத்தை ஆரியர்கள், இங்கிருந்த அரசர்களை வைத்து மாற்றினார்கள். வரும் காலங்களில் தமிழ்க் கடவுள் முருகனுக்கு தமிழ் வேத ஓதுவார்களை நியமிக்க வேண்டி மதுரையில் மாபெரும் மாநாடு நடத்தவிருக்கிறோம்''’என்றார்.
முருகனை வைத்து மதுரையில் பரபரப்பு தொற்றியுள்ளது!