நாடாளுமன்ற பொதுத்தேர்தல் முடிவு கள் குறித்து நாடாளு மன்றத் தொகுதிவாரி யாக நிர்வாகிகளுட னான கலந்தாய்வுக் கூட்டம் அ.தி.மு.க. ஜூலை 10-ஆம் தேதி தொடங்கி, 38 நாடா ளுமன்றத் தொகுதி களுக்கான ஆலோ சனைக் கூட்டங்கள் நடந்துமுடிந்துள்ளன. இந்நிலையில், ஆகஸ்ட்-5 ஆம் தேதி நடைபெறவிருந்த புதுச்சேரி, கரூர் நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்ட தாகவும், அந்தக் கூட்டத்திற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படுவ தாகவும் தெரிவித்திருந்தனர்.

நிலமோசடி வழக்கில் கைதுசெய்யப்பட்டு நிபந்தனை ஜாமீனில் வெளிந்துள்ள விஜய பாஸ்கரின் மனநிலை மாற்றத்திற் குப் பிறகு கரூர் தொகுதிக்கான கலந்தாய்வுக் கூட்டத்தை வைக்கலாம் என்பதற்காகவே கூட்டம் தள்ளிவைக்கப்பட்ட தாகச் சொல்லப்படுகிறது.

eps

இதற்கிடையில் சி.வி. சண்முகம், தங்கமணி, எம்.ஆர். விஜயபாஸ்கர், நத்தம் விஸ்வ நாதன், செல்லூர் ராஜூ ஆகி யோர் எடப்பாடியைச் சந்தித்து மீண்டும் சசிகலா, ஓ.பி.எஸ். இணைப்பைப் பற்றி பேசத் தொடங்க, அதற்கு எடப்பாடி, "இதுபற்றி பேசவா இங்கு வந்தீங்க, உங்களுக்கு தெரியாம நான் ஒருபோதும் அவங்களை சேர்க்கமாட்டேன்''’எனச் சொல்லியிருக்கிறார். அதற்கு "எதுக்கு அண்ணா நீங்க பயப்படுறீங்க? ஓ.பி.எஸ்.ஸை நான் பாத்துக்கிறேன். அவரால் எந்த பிரச்சினையும் வராது. கட்சியை ஒருங்கிணைத்தால் தான், வருகின்ற சட்டமன்றத் தேர்தலுக்கு கூட்டணியைப் பற்றி பேசமுடியும். எப்ப, யார் மீது என்ன வழக்குகள் போடப் போறாங்கன்னு தெரியலை. இப்படியே போனால் கட்சி இருக்காது''’என அனைவரும் சேர்ந்து பேசியிருக்கிறார்கள். அவர்களுக்கு எந்தப் பதிலும் தராமல் எடப்பாடி மௌன மாகவே இருந்திருக்கிறார்.

Advertisment

இதையடுத்து எடப்பாடி எம்.ஆர்.விஜயபாஸ்கரைத் தொடர்புகொண்டு, "5-ஆம் தேதி நடக்கவிருந்த கூட்டத்தை 10-ஆம் தேதி வைத்துக்கொள்ளலாமா?'' என்று கேட்டுள்ளார். அதற்கு விஜயபாஸ்கர், “"நாங்க சொன் னது என்னாச்சு?''’என்று கேட் டுள்ளார். அப்போதும் எடப்பாடி பேசாமல் அமைதி காத்துள்ளார். உடனே விஜயபாஸ்கர், “"நீங்க கட்சியிலுள்ள எல்லோரையும் தி.மு.க.வுடன் தொடர் பிலிருக்கிறார்கள் என குற்றம் சுமத்துறீங்க, கட்சியில் இருக்கின்ற ஒவ்வொருவரும் ஒரு தொழிலை முன் வைத்து பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். அதனாலதான் அவர் கள் அதிகாரத்தில் இருக்கும் தி.மு.க. வுடன் நட்புறவில் இருக்கிறார்கள். இப் படியே போனால் நிச்சயம் வரும் தேர்த லிலும் நாம் ஆட்சி யைக் கைப்பற்ற முடியாது''’என்று பேசியிருக்கிறார்.

"அந்தக் கவலையை விடு. அதற்குத்தானே காங்கிரஸ், வி.சி.க., நாம் தமிழர் என பேச்சுவார்த்தை போயிட்டி ருக்கு. வலுவான கூட்டணியை அமைத்து நாம் களம் காண்போம்'' என எடப்பாடி பேசியுள்ளார்.

அதற்கு அவர், "அனைவரும் வரவேண்டுமென் றால் நாம் பலமாக இருக்க வேண்டும். அவர்களுக்கு நம்ம லட்சணம் தெரியாதா? நாம் ஒருங்கிணைந்தால்தான் நம்மீது மற்றவர்களுக்கு நம்பிக்கை வரும். என்னை விட்டுவிடுங்கள், நான் இப்படியே கூட இருந்து விடுகிறேன்''’என காட்டமாகப் பேசி தொடர்பைத் துண்டித்துள் ளாராம்.

Advertisment

இந்த நிலையில் "கூட்டத் திற்கான தேதி விரைவில் அறிக்கப்படும். அதில் கலந்து கொள்வதும் தட்டிக் கழிப்பதும் அவர்களது விருப்பம்' என எடப்பாடி முக்கிய நிர்வாகி களை அழைத்துப் பேசியுள்ளா ராம்.