கிட்டத் தட்ட ஓர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்குரிய பரபரப்புடன் நடந்து முடிந்திருக்கிறது, இங்கிலாந்து நாட்டில் பிரதமர் பதவிக்காக நடைபெற்ற உட்கட்சித் தேர்தல். எப்போதுமில்லாதபடி இங்கிலாந்து பிரதமர் தேர்தலை இந்தியர்கள் தீவிர எதிர்பார்ப்புடன் நோக்கியதற்கு காரணம், இன்ஃபோ சிஸ் நிறுவன தலைவர் நாராயண மூர்த்தியின் மருமகன் ரிஷி சுனக், இங்கிலாந்து பிரதமர் பதவிக்கான ரேஸில் தொடர்ச்சியாக முன்னிலை யில் இருந்ததுதான். இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தியின் மகளான அக்சிதாவின் கணவர் ரிஷி சுனக், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். இங்கி லாந்திலேயே பிறந்து வளர்ந்தவர்.

cc

அதென்ன பிரதமர் பதவிக்கான உட்கட்சித் தேர்தல்?

இங்கிலாந்தில் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த போரிஸ் ஜான்சன் பிரதமராக வெற்றி பெற்றார். கொரோனா காலகட்டத்தில் நடத்திய விருந்து, அவரது பதவிக்கே ஆப்பு வைத்துவிட்டது. கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறி நடைபெற்ற விருந்தில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கலந்துகொண்ட தற்காக 2020ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் அவருக்கு போலீசார் அபராதம் விதித்தனர். இங்கிலாந்து பிரதமர் பதவியை வகிப்பவர், இப்படி சட்டத்தை மீறியதற்காக அபராதம் விதிக்கப்பட்டிருப்பது, இங்கிலாந்து வரலாற்றி லேயே முதன்முறையாகும். எனவே அவரது சொந்த கட்சி யைச் சேர்ந்த எம்.பி.க்களே அவருக்கு எதிராகத் திரும்பினார் கள். அவரது செயல்பாட்டின்மீதான அதிருப்தியால். அந்நாட் டின் சுகாதாரத்துறை அமைச்சர் சாஜித் ஜாவித்தும், நிதி யமைச்சர் ரிஷி சுனக்கும் பதவி விலகினார்கள். அவர்களைத் தொடர்ந்து பல எம்.பி.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். தொடர்ச்சியான எதிர்ப்புகளால் இறுதியில் போரிஸ் ஜான்சன் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.

தற்போது, அந்த பிரதமர் பதவிக்குத்தான் கன்சர்வேட்டிவ் கட்சியினருக்குள் உட்கட்சித் தேர்தல் நடந்துள்ளது. மொத்தமுள்ள 5 சுற்றுப் போட்டிகளில், தொடக்கம் முதலே முன்னாள் நிதியமைச்சரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான ரிஷி சுனக் முன்னிலை வகித்துவந்ததால், இங்கிலாந்தின் அடுத்த பிரதமராக வருவாரென்று பலரும் எதிர்பார்த்தனர்.

cc

Advertisment

அதற்கேற்ப 5 சுற்றுக்களில் வெற்றிபெற்று, இறுதிச்சுற்றுக்கும் ரிஷி சுனக் தேர்வானார். அவருக்கு போட்டியாளராக முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் லிஸ் ட்ரஸ் கடுமையான போட்டியைக் கொடுத்தார். இறுதியில், லிஸ் ட்ரஸ் 57.4 சதவிகித வாக்குகளைப் பெற்று அடுத்த இங்கிலாந்து பிரதமராகத் தேர்வானார். ரிஷி சுனக் 42.6 சதவிகித வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்தார். மிகவும் நம்பிக்கையளித்த ரிஷி சுனக்கின் தோல்விக்கு பல்வேறு காரணங்களை அரசியல் நோக்கர்கள் அடுக்குகிறார்கள்.

ரிஷி சுனக் தோல்வி ஏன்?

முதன்மைக் காரண மாக, கன்சர்வேட்டிவ் கட்சியினரில் பெரும் பாலானவர்கள், வெள்ளை யின ஆதரவு நிலைப்பாடு எடுத்ததன் காரணமாக ரிஷி சுனக்கின் ஆதரவு குறைந்ததாகக் கூறப்படு கிறது. அடுத்ததாக, ரிஷி சுனக்கின் சொத்து மதிப்பு அவருக்கு எதிராகத் திரும்பியிருக்கிறது. ரிஷி சுனக்கின் மனைவியும், இன்ஃபோசிஸ் நாரா யணமூர்த்தியின் மகளு மான அக்சிதாவின் 430 மில்லியன் பவுண்டு சொத் துக்களோடு, ரிஷி சுனக் கின் சொத்து மதிப்பும் சேர்த்து மொத்தம் 730 மில்லியன் பவுண்டு சொத்து மதிப்பைக் கொண்டிருக்கிறார்கள். இந்த சொத்து மதிப்பு, பிரிட்டன் ராணி எலிசபெத்தின் சொத்து மதிப்பைவிட அதிகமாக இருப்பது சர்ச்சையாகியிருக்கிறது.

அடுத்ததாக, ரிஷி சுனக்கிற்கு இங்கிலாந்தில் மட்டுமல்லாது அமெரிக்காவிலும் குடியுரிமை இருக்கிறது. இப்படி இரட்டைக் குடியுரிமை பெற்றவரான ரிஷி சுனக் எப்படி இங்கிலாந்துக்கு மட்டுமே ஆதரவாகச் செயல்படுவார் என்றும், இங்கிலாந்தை வழிநடத்தும் பொறுப்பில் இருக்கும் ஒருவர் இப்படி இரட்டைக் குடியுரிமை வைத்திருப்பது எப்படிச் சரியாகும் என்றும் கேள்வி எழுந்தது. அதேபோல் ரிஷி சுனக்கின் மனைவி அக்சிதா, தற்போதுவரை இங்கிலாந்து குடியுரிமை பெறாதவராக இருப்பதும் கேள்விக்குள்ளாகியுள்ளது. அனைத் துக்கும் மேலாக, ரிஷி சுனக்கின் மனைவி நடத்திய 'கோமாதா பூஜை' வீடியோ வைரலாகி அவருக்கு எதிராகத் திரும்பியது.

இத்தகைய காரணங்களால், தேர்தல் காலங்களில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளில் முதலில் முன்னிலையிலிருந்த ரிஷி சுனக், அதன்பின் படிப்படியாகப் பின்தங்க, லிஸ் ட்ரஸ் முன்னிலைக்கு வரத்தொடங்கினார். தற்போது தோல்வியடைந்துள்ள ரிஷி சுனக் "புதிய பிரதமர் லிஸ் ட்ரஸ்ஸின் பின்னால் நாங்கள் ஒன்றுபட்டுச் செயல்படுவோம்'' என்று அறிவித்துள்ளார்.

-தெ.சு.கவுதமன்

__________

இறுதிச்சுற்று!

Advertisment

cc

தலைமை அலுவலகம் வந்த எடப்பாடி!

ஒற்றைத் தலைமை தொடர்பாக அ.தி.மு.க.வில் எடப்பாடி. ஓ.பி.எஸ். இடையே கடந்த சில மாதங்களாக பிரச்சினை நீடித்துவருகிறது. கடந்த ஜூலை 11-ஆம் தேதி எடப்பாடி தரப்பு பொதுக்குழு கூட்டம் நடத்தியபோது, ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் ராயப்பேட்டையிலுள்ள அ.தி.மு.க. கட்சித் தலைமை அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்தனர். இதில் இரு தரப்புக்கும் மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, தலைமை அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது. இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கில், தலைமை அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிச்சாமி தரப்பிடம் ஒப்படைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதேபோல, அ.தி.மு.க. பொதுக்குழு செல்லாதென்ற தனி நீதிபதி உத்தரவும் ரத்தானதையடுத்து உற்சாகத்தில் திளைத்துவருகிறது எடப்பாடி தரப்பு. இந்நிலையில் செப்டம்பர் 8-ஆம் தேதி (வியாழன்) காலை, எடப்பாடி பழனிசாமி கட்சித் தலைமை அலுவலகத்துக்கு வந்து, அங்குள்ள எம்.ஜி.ஆர்., ஜெ. சிலைகளுக்கு மாலையணித்து மரியாதை செய்தார். நிகழ்வில் தொண்டர்கள், நிர்வாகிகள் பெருமளவில் கலந்துகொண்டனர்.

-க.சுப்பிரமணியன்