மிழகத்தில் நடைபெற்ற தேர்தலில் காலையிலிருந்தே விறு விறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது. 1 மணி நிலவரப்படியே கள்ளக்குறிச்சியில் 46.06 சதவீத வாக்கு பதிவானது. கள்ளக்குறிச்சி தொகுதி அ.தி.மு.க. வெற்றி பெறும் தொகுதி களில் ஒன்று என அ.தி.மு.க. வட்டாரங்கள் கணித்த தொகுதிகளில் ஒன்று. அதனால் தொகுதி முழு வதும் வாக்காளர்களுக்கு 300 ரூபாய் பணத்தை அ.தி.மு.க. கொடுத்தது. அ.தி.மு.க. 300 கொடுத்தால் நாங்கள் சும்மாயிருப்போமா என தி.மு.க. 500 ரூபாய் கொடுத்தது. வாங்கிய காசுக்கு வேலை செய்ய வேண்டும் என வாக்காளர்கள் காலையி லேயே வாக்குகளை செலுத்த ஆரம்பித்துவிட்டனர்.

cc

மதுரையிலிருந்து குடும்பம் குடும்பமாக ராமநாதபுரம் தொகுதியைச் சேர்ந்த வாக் காளர்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு குழந்தை குட்டிகளோடு பயணமானார் கள். அவர்கள் அரசுப் பேருந்துகளில் செல்லவில்லை. ராமநாதபுரத்தில் ஓ.பி.எஸ். ஓட்டுக்கு 1000 ரூபாய் கொடுத்ததால் சொந்த ஊருக்குப் போனால் ஒரு குடும்பத்துக்கு 5000 ரூபாய் கிடைக்கும் என் பதால் குடும்பம் குடும்ப மாக வேன்களில் ராமநாத புரத்துக்கு சென்றார்கள். ராமநாத புரம் தொகுதியில் ஊர்த் தலைவர்களாக இருப்பவர் களுக்கு 10,000 ரூபாய், நகர்ப்புறங்களுக்கு ஒரு ரேட், கிராமப்புறங்களுக்கு ஒரு ரேட் என பணத்தை வாரியிறைத்தார் ஓ.பி.எஸ். ஒட்டுக்குக் காசு கொடுப் பதில் தமிழகத்திலேயே நம்பர் ஒன் ஓ.பி.எஸ்.தான். அங்கும் தி.மு.க. ஓட்டுக்கு 500 ரூபாய் கொடுத்தது. அ.தி.மு.க.வும் பன்னீர்செல்வத்தை தோற்கடிக்க வேண்டும், அவரைவிட அதிக வாக்குகள் வாங்க வேண்டும் என பணம் கொடுத்தது. கிராமம், நகரம் என தமிழகத்திலேயே அதிகம் காசு புரண்ட தொகு தியாக ராமநாதபுரம் முதல் இடத்தைப் பெற்றுள்ளது.

பண விநியோகத்தில் இரண்டாவது இடத் தைப் பெறுபவர் வேலூர் தொகுதி வேட்பாளர் ஏ.சி.சண்முகம். அவர் பணத்தை அள்ளியிறைக்க, தி.மு.க. வேட்பாளரான கதிர்ஆனந்தை வருமான வரித்துறையும் அமலாக்கத்துறையும் தொடர்ந்து கண்காணிக்கும் அபாயம் இருந்தது. அதையும் மீறி தி.மு.க.வினர் பணத்தை வாரியிறைத்தனர். மணல் மாபியாக்கள் மூலம் கதிர்ஆனந்த் பணத்தை வாக்காளர்களிடம் கொண்டுசேர்த்தார்.

Advertisment

பண விநியோகத்தில் மூன்றாவது இடத்தைப் பெறுவது நெல்லை தொகுதி. நயினார் நாகேந்திரன். சென்னை யில் நான்குகோடி பிடிபட்ட வழக்கையும் மீறி பணத்தை வாரியிறைத்தார். அவர் அள வுக்கு கொடுக்க முடியாவிட் டாலும் தி.மு.க.வினரும் பணத்தை வாரியிறைக்கத்தான் செய்தனர்.

பெரம்பலூர் தொகுதியில் அமைச்சர் நேருவின் மகன் அருண் போட்டியிடுவதால் அங்கு தி.மு.க.வினர் பண விநியோ கத்தில் ஈடுபட்டனர். அவர்களுக் குப் போட்டியாக பா.ஜ.க. வேட்பாளர் பாரிவேந் தரும் பணம் கொடுத்தார். தேனி தொகுதியில் டி.டி.வி.தினகரன் லம்ப்பாக பணம் இறக்கிவிட்டு, உறவினர்கள் மூலம் விநியோகம் செய்தார்.

c

Advertisment

கோவையில் பா.ஜ.க. மா.த. முதலில் மணல் மாபியாக்களான கரிகாலனின் சொந்த ஊரான புதுக்கோட்டை கறம்பக்குடியிலிருந்து 250 பேர்களை வரவழைத்திருந்தார். கோவை மாவட்ட மணல் மாபியா தலைவரான மாரியப்பன் தலைமையில் அணிவகுத்த அவர்கள், ஒரு ஓட்டுக்கு தமிழகத்தில் இல்லாத அளவான 2500 ரூபாயை கொடுத்தனர். அதைக் கண்டுபிடித்த மாநில உளவுத்துறை போலீசார் துப்பாக்கி முனையில் மணல் மாபியாக்களைப் பிடித்து விட்டனர். ‘உங்களை என்கவுன்டர் செய்வோம்’ என்கிற போலீசாரின் மிரட்டலைத் தொடர்ந்து மணல் மாபியா தெறித்து ஓடியது. அதைத் தொடர்ந்து கோவை நகைக்கடை அசோசியேஷன் சார்பில் ஓட்டுக்கு ஒரு கிராம் தங்கம் என வாக்காளர் களுக்கு கொடுக்க ஆரம்பித்தார் பா.ஜ.க. மா.த. அதை தமிழக காவல்துறை துரிதமாக முறியடித்தது. அதன்பிறகு மா.த. தனது மச்சான் சிவ குமார் மூலம் வாக்காளர் களுக்கு ‘கூகுள் பே’ மூலம் ஓட்டுக்கு 2500 ரூபாய் கொடுத் தார். அதை தி.மு.க. வழக்கறி ஞர் அணி முறியடித்தது. மணல் மாபியா கொடுத்த காசை நேரடியாக எடப்பாடியே பேசித் தடுத்து நிறுத்தினார். இப்படி தி.மு.க., அ.தி.மு.க. சேர்ந்து பா.ஜ.க. மா.த.வின் பண விநியோகத்துக்கு அதிரடியாக முற்றுப்புள்ளி வைத்தது.

கொங்கு மண்டலம் முழுக்க அ.தி.மு.க. ஓட்டுக்கு 300 ரூபாய் பணம் கொடுத்தது. தமிழகம் முழுக்க தி.மு.க. ஓட்டுக்கு 500 ரூபாய் பணம் கொடுத் தது. கொங்கு மண்டலம் தவிர கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய தொகுதிகளில் முழுமையாகவும் திருச்சி, சிதம்பரம் ஆகிய தொகுதிகளில் ஒரு பகுதியாகவும் அ.தி.மு.க. காசு கொடுத்தது.

“பா.ஜ.க. இந்தத் தேர்தலுக்கு 1000 கோடியை மத்திய தலைமையிடம் வாங்கியது. அதில் முக்கால் வாசிப் பணத்தை பா.ஜ.க. மா.தலைவரும் பா.ஜ.க. வேட்பாளர்களுமே ‘ஆட்டையைப்’ போட்டுவிட்டனர். இப்படி தமிழகம் முழுவதும் இந்தத் தேர்தலில் விளையாடிய பணம் 4000 கோடி ரூபாயைத் தாண்டும். மொத்தமாக பல ஆயிரம் கோடி ரூபாய் புரண்டு இந்தத் தேர்தல் திருவிழா நடந்து முடிந் துள்ளது. இவ்வளவு பணம் இருந்தால் எத்தனை யோ மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி இருக்கலாம்’என வருத்தப்படுகிறார்கள் சமூகநல ஆர்வலர்கள்.

cc