"விவசாயிகளின் போராட்டத்தில் 500 பேர் வரை உயிரிழந்தனர் என்று பிரதமரிடம் நான் கூறியபோது, மிதமிஞ்சிய ஆணவத்துடன், "அவர்கள் எல்லோரும் என்னாலா இறந்தார்கள்?' என்று பிரதமர் கேட்டார். "ஆமாம், நீங்கள் மன்னர்போல் நடந்துகொண்டதால்தான் அவர்கள் இறந்தார்கள்' என்றேன். அதோடு, "அமித்ஷாவிடம் போய்க் கேளுங்கள்' என்றும் திமிராகக் கூறினார். அவர் சொன்னதுபோலவே அமித்ஷாவைச் சென்று சந்தித்தேன். என்னிடம் பேசிய அமித்ஷா, "பிரதமர் மோடியை சிலர் பைத்தியமாக்கிவிட்டார்கள். நீங்கள் கவலைப்பட வேண்டாம். என்றாவது ஒருநாள் அவர் சுயநினைவுக்கு வருவார்' '' என்று கூறியதாகப் பேசி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் மேகாலயா கவர்னர் சத்யபால் மாலிக். அவர் பேசிய வீடியோ வைரலாக, சமூக வலைத்தளங்களில் பெரிதாக விவாதிக்கப் பட்டது. காங்கிரஸ் கட்சியின் மல்லிகார்ஜூன் கார்கேவும் அதனைக் கடுமையாக விமர்சித்தார்.
சத்யபால் மாலிக் கின் குற்றச்சாட்டு விவகாரம் குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவுத் தலைவர் கோபண்ணா விடம் கேட்டபோது, "மேகாலயா ஆளுநர் சத்யபால் மாலிக், இதேபோல ஏற்கனவே பிரதமர் மோடியைக் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார். ஆனாலும் அவர்மீது கடுமை யான நடவடிக்கை எடுக்க அஞ்சுவது ஏன் என்பதுதான் தெரியவில்லை. காஷ்மீரில் இருந்தபோதும் அவரால் பிரச்சனை, கோவாவில் இருந்த போதும் அவரால் பிரச்சனை, தற்போது மேகாலயாவில் இருக்கும்போதும் பிரச்சனை. மோடியைக் கடுமையாக எதிர்க்கிறார். உத்தரப்பிரதேசத் தைச் சேர்ந்தவரான இவர்மீது ஏதோ ஒரு வகையில் நட வடிக்கை எடுக்க மோடி அரசு தயங்குகிறது. அதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. சத்யபால் மாலிக் தற்போது குற்றச்சாட்டு கூறி இவ்வளவு காலம் ஆனபின்பும் பா.ஜ.க. தரப்பில் பதில் கூறாமல் இருப் பது, என்னவோ பா.ஜ.க.வினர் மடியில் கனம் இருப்பதாக நான் நினைக்கிறேன். ஏதோ ஒரு வகையில் பா.ஜ.க.வை இவர் அச்சுறுத்திவருகிறார். இந்த அச்சுறுத்தலுக்கு பா.ஜ.க. பணிந்துபோகிறது. பொதுவாக, அடக்குமுறை, எதேச்சதிகாரம், கடுமையான அணுகுமுறையைக் கையாளும் பா.ஜ.க. இவரின் விஷயத்தில் மெத்தனப்போக் குடன் நடந்துகொள்வது ஏனென்று தெரியவில்லை. அதனுடைய மர்மம் விரைவில் வெளிவரும்'' என்றார்.
சத்யபால் மாலிக்கின் குற்றச்சாட்டுகள் குறித்து பா.ஜ.க. வின் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதியிடம் கேட்டபோது, "பிரதமரிடமும் நான் எதுவும் சொல்லல, அமித்ஷாவிடமும் நான் எதுவும் சொல்லல என்று சத்யபால் மாலிக் சொல்லியிருக்காரே. காங்கிரஸ் கட்சியினரே, சத்யபால் மாலிக் ஒரு கூட்டத்தில் பேசியதாகக் கூறியிருந்தார்கள். அதற்கான ஆதாரமெல்லாம் இல்லை'' என்று மறுத்தார்.