விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆண்டுதோறும் சமூகம், அரசியல், பண்பாடு, கலை #இலக்கியம் போன்ற தளங்களில் சீரிய முறையில் தொண்டாற்றும் சிறப்புமிக்க தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு ஆளுமைவாய்ந்த சான்றோருக்கு விருது வழங்கி வருகிறார்கள். அந்த வரிசையில் 2024#ஆம் ஆண்டிற்கான விருதுகள் வழங்கும் விழா சென்னை தேனாம்பேட்டையிலுள்ள காமராஜர் அரங்கத்தில் மே 25#ஆம் தேதி அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் நடைபெற்றது.
இதில் "அம்பேத்கர் சுடர் விருது' திரைப்பட கலைஞர் பிரகாஷ்ராஜுக்கும், "பெரியார் ஒளி விருது' வழக்கறிஞர் அருள்மொழிக்கும், "காமராசர் கதிர் விருது' பேராயர் எஸ்றா சற்குணத்துக்கும், "அயோத்திதாசர் ஆதவன் விருது' பேராசிரியர் ராஜ்கௌதமனுக்கும், "காயிதே மில்லத் பிறை விருது' எஸ்.என். சிக்கந்தருக்கும், "செம்மொழி ஞாயிறு விருது' -சுப்பராயலுவுக்கும், "மார்க்ஸ் மாமணி விருது' தோழர் இரா.முத்தரசனுக்கும் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான சிந்தனைச்செல்வன் வரவேற்புரை வழங்கினார். பொதுச்செயலாளரும் நாடளுமன்ற உறுப்பினருமான துரை.ரவிக்குமார் நன்றியுரை வழங்கினார்.
"அம்பேத்கர் விருது' பெற்றுப் பேசிய பிரகாஷ்ராஜ், ""வி.சி.க. தலைவர் திருமா என்னை அழைத்து உங்களுக்கு எங்கள் கட்சியின் சார்பில் விருது வழங்கவிருக்கிறோம் அதனை நீங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றார். இந்த சமூக அநீதிகளுக்கு எதிரான உங்கள் போராட்டத்தால் நீங்களும் என்னுடைய தோழராகிவிட்டீர்கள். ஆகையால் நிச்சயம் இந்த விருதைப் பெற்றுக்கொள்வேன் என்று சொன்னேன்'' என்றவர்... பின், தன்னை கடவுள் என்று சொல்-க்கொண்ட மோடியை விமர்சிக்கையில், ""மோடி தெய்வக் குழந்தையல்ல... டெஸ்ட் ட்யூப் பேபி. அவருக்கு எதிராக என் குரல் தொடர்ந்து ஒ-க்கும். சர்வதிகாரிகளுக்கு இடையே, நமக்காக அம்பேத்கர் மட்டும் அரசியலமைப்புச் சட்டத்தை எழுதாமல் இருந்திருந்தால், இந்த நாடு எப்படி இருக்கும் என்பதை யோசித்துப் பார்த்தாலே பயமாக இருக்கிறது. என்னுடைய ஆசான் எப்போதும் எங்களிடம் சொல்வது ஒரு குடிமகனும் பத்திரிகையாளரும் நிரந்தரமான எதிர்க்கட்சியாகவே இருக்கவேண்டும். அப்படிப்பட்ட ஆசானுடைய மகள் கௌரி சுட்டுக் கொல்லப்பட்டபோது, அந்த மரணத்தின் மூலமாக என்னை ஒரு கேள்வி கேட்டாள். நீயும் மற்றவர்களைப் போலவே மௌனம் காக்கப் போகிறாயா? என்று. ஆகையால்தான் அவரைப் புதைக்கும்போது நான் சொன்னேன், "புதைக்கவில்லை... விதைத்தோம்!' என்று. அன்றி-ருந்து போராடிக்கொண்டேயிருக்கிறேன். இந்த 10 ஆண்டுகள் பட்ட துன்பம், கஷ்டம் அனைத்தும் மீண்டும் வந்துவிடாமல் பாதுகாப்பது நம்முடைய கடமை. அந்த கடமைக்கு இந்த விருது என்னை ஊக்குவிப்பதாக நான் கருதுகிறேன்''’என்றார்.
"மார்க்ஸ் மாமணி விருது' பெற்ற இரா. முத்தரசன், ""எங்களுக்கும் வி.சி.க.வுக்கும் இடையே உள்ள உறவு எவராலும் பிரிக்க முடியாதது. இந்த விருது எனக்கு வழங்கப்பட்டது அல்ல. நான் சார்ந்திருக்கும் என் கட்சிக்கு வழங்கப்பட்டது. இந்த விருதினைக் கொடுத்த வி.சி.க. தலைவருக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்''’என்றார்.
"பெரியார் ஒளி விருது' பெற்ற அருள்மொழி, “""இங்கு அரசிய-ல் பெண்கள் இருக்கிறார்கள். ஆனால் பெண்களுக்கான அரசியல் இல்லை. ஆகையால், நான் வி.சி.க. தலைவருக்கு ஒரு கோரிக்கையை முன்வைக்கிறேன். அடுத்தாண்டு விருது வழங்கும்போது "மீனாம்பாள் சிவராஜ் மற்றும் மூவலூர் ராமாமிர்தம் ஆகியோர் பெயரிலும் வி.சி.க. விருது வழங்கவேண்டும். அதற்கான தொகையும் நானே கொடுக்கிறேன்'’என தெரிவித்தார்.
இறுதியாகப் பேசிய வி.சி.க. தலைவர் திருமா, “""பெண்கள், தலித்துகள் சிறுபான்மையினர் அரசியல்படுத்தப்படவேண்டும் என பொதுவாக எல்லோரும் பேசுகிறார்கள். ஆனால் அதி-ருந்து வி.சி.க. முற்றிலுமாக மாறுபட்டு, ஓ.பி.சி. மக்கள் அரசியல்படுத்தப்படவேண்டும் என்பதை உயர்த்திப் பிடிக்கிறோம். இந்தியாவில் ஏன் இதுவரை புரட்சி ஏற்படவில்லை என்றால்எல்லா விடுதலை அரசியலும் சேரியில் வந்துதான் பேசப்படுகிறதே தவிர ஊர்த் தெருவில் பேசப்படுவதில்லை. ஆகையால்தான் வேங்கைவயல் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த சனாதனத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள உழைக்கும் மக்கள் அரசியல் படுத்தப்படாமல் இருக்கின்றனர். அதேபோல மண்டல் பரிந்துரையை நடைமுறைப் படுத்தியதற்காக வி.பி.சிங் ஆட்சியை தூக்கியெறிந்த சக்திகளுக்கு எதிராகக் குரல் கொடுத்தவர்கள் த-த் அமைப்புகள்தான். ராம்விலாஸ் பாஸ்வான் என்ற அம்பேத்கர் இயக்க தலைவர்தான். ஆனால் வி.பி.சிங். ஆட்சியைக் கவிழ்த்த பா.ஜ.க.வினரை தோளில் தூக்கிச்சுமப்பவர்கள் யார்? அவர்களோடு கூட்டணி வைத்துள்ளது பாட்டாளி மக்கள் கட்சி என்றால் அரசியல்படுத்தப்பட வேண்டியவர்கள் யார் என்பதை நீங்களே எண்ணிப் பார்க்கவேண்டும். தேர்தல் வரும், போகும். சில கட்சிகள் வெற்றிபெறும், சில கட்சிகள் தோல்விபெறும். ஆனால் சமூகக் கட்டமைப்பு அப்படியே மாற்றமின்றி தொடர்கிறது. பார்ப்பனர்கள் அல்லாத அனைத்து உழைக்கும் மக்களும் ஒன்று சேரவேண்டும் என்பதுதான் மகாத்மா, பூலே, அம்பேத்கர், பெரியார், கன்ஷிராம் ஆகியோர் முன்வைத்த அரசியல். ஆனால் சனாதனவாதிகள் மிகலாவகமாக இதை உடைத்து இந்துத்துவா அஜெண்டா மூலம் "நீயும் இந்து...… நானும் இந்து' என்ற போர்வைக்குள் ஒளிந்துகொண்டார்கள். ஓ.பி.சி.க்கள் அரசியல்படுத்தப்பட வேண்டிய மாற்றமே தேவையுள்ளது. அதை மாற்றினாலே அனைத்து மாற்றங்களும் நிகழும்''’என்றார்.