மது வீட்டின் சாவி தொலைந்துவிட்டால் ஜெகந்நாதரிடம், அது திரும்பக் கிடைக்கவேண்டுமென பிரார்த்தனை செய்வோம். ஆனால் இங்கே ஜெகந்நாதரின் கருவூல அறையின் சாவியே ஆறு ஆண்டுகளாகக் காணவில்லை. ஜெகந்நாதர் ஆலயக் கருவூலம் தொடர்பான நிகழ்வுகளைப் பார்த்து, ஒட்டுமொத்த ஒடிஷா மக்களும் கோபத்தில் உள்ளனர். அந்தக் கருவூல அறையின் சாவி தமிழ்நாட்டுக்குச் சென்றுவிட்டதாகக் கூறுகின்றனர். இதை தமிழ்நாட்டுக்கு அனுப்பியவர்கள் யார்? கொண்டுபோனவர்கள் யார்? இப்படிப்பட்டவர்களை நீங்கள் மன்னிப்பீர்களா?'

2024 மக்களவைத் தேர்தலின் ஐந்தாம் கட்டத் தேர்தலில் ஒடிசா மாநிலம் ஆங்குலில் நடந்த பேரணியின்போதுதான் மோடி இந்தக் கேள்வியை எழுப்பினார்.

mm

பூரி ஜெகந்நாதர் ஆலயத்தின் கருவூல அறை கடைசியாக 1985-ஆம் ஆண்டு திறக்கப் பட்டது. 2018-ல் திறக்கவேண்டி வந்தபோதுதான் அதன் சாவி காணாமல் போனது தெரியவந் தது. இதையடுத்து மாநில அரசு நீதித்துறை விசாரணைக்கு உத்தரவிட்டது. 2024 ஜெகந் நாதர் கோவில் ரத யாத்திரையின்போது அந்த அறையைத் திறக்க கோவில் நிர்வாகக் கமிட்டி பரிந்துரைத்துள்ளது. இந்த விவகாரம் சென்சிடிவான விஷயமென்பதால் பா.ஜ.க.வும், மோடியும் இதற்கு முந்தைய பிரச்சாரக்கூட்டங்களிலும் பேசியுள்ளனர். ஆனால், ஆங்குலில் பேசியபோது மோடி அந்த சாவி தமிழகத்துக்குச் சென்றுள்ளதாகக் குற்றம்சாட்டிப் பேசினார்.

Advertisment

அந்தச் சாவி தமிழகத்துக்குச் சென்றுவிட்டதாக ஏன் மோடி குறிப்பிடவேண்டும்?

ஒடிஸா மாநில மாவட்ட ஆட்சியராக வந்த வி.கார்த்திகேய பாண்டியன், ஒரு கட்டத்தில் ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக்கின் நம்பிக்கைக்குரியவராக வளர்ந்து, பிஜு ஜனதா தள கட்சியில் பட்நாயக்குக்கு அடுத்தபடியாக வளர்ச்சியடைந்திருக்கிறார். கட்சியின் அடுத்த வாரிசாக பார்க்கப்படும் கார்த்திகைப் பாண்டியனை, "பிற மாநிலத்தைச் சேர்ந்தவர், ஒரிய மக்களை ஆளவேண்டுமா...?' என பிரிவினைப் போக்கை இந்தத் தேர்தல் முழுவதும் பிரச்சாரம் செய்துவருகிறது பா.ஜ.க.

இதன் அடுத்தகட்டமாகவே, பூரி ஜெகந்நாதர் கோவிலின் கருவூலச் செல்வங்களை, தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் கொள்ளையடித்துச் செல்வதாக மக்கள் மனதில் எண்ணத்தை விதைக்கும் நோக்கத்தில் இந்த நச்சுப் பேச்சை மோடி பேசியுள்ளார்.

Advertisment

மோடியைத் தொடர்ந்து உள்துறை அமைச்சரான அமித்ஷாவும், தனது பிரச்சார உரையில் எந்த ஆதாரமுமின்றி, "ஒடிஷாவை ஒரு தமிழர் ஆள அனுமதிக்கலாமா?'’என கேள்வியெழுப்பியுள்ளார்.

ஆனால் இந்த விஷயம் தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் போன்ற உயர்பதவி வகிக்கும் ஒருவரே பொறுப்பில்லாமல் இப்படிப் பேசலாமா என்ற ஆதங்கம் வெளிப் பட்டுள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் மோடியின் உரைக்கு கடும் கண்டனத்தைக் காட்டும் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அதில், “"தேர்தல் பிரச்சாரத்தில் நாகரிக வரம்பை மீறாமல், கொள்கை, கோட்பாடுகள், செயல்திட்டங்கள் மீது ஆக்கபூர்வமான விமர்சனங்களை வைத்து தங்கள் ஆட்சியின் செயல்திட்டங்கள், சாதனைகளை முன்வைத்து வாக்கு சேகரிக்கவேண்டும்.

இதில் முன்னுதாரணமாகத் திகழவேண்டிய மோடி, தனது வெறுப்புப்பேச்சுகள் மூலம் மக்களிடேயே பகையுணர்வையும், மாநிலங்களுக்கு இடையே குரோதத்தையும் தூண்டிவருவது நாட்டுக்கு நல்லதல்ல. ஏற்கெனவே தென்னிந்தியர்கள், உத்தரப்பிரேதச மக்களை இழித்தும் பழித்தும் பேசுவதாக தமிழக மக்கள் மீது அபாண்ட பழி சுமத்தியிருந்தார். தற்போது ஒடிசா மாநில தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பிரதமர், புகழ்பெற்ற ஜெகந்நாதர் ஆலயத்தின் தொலைந்துபோன சாவிகள் தமிழகத்தில் இருப்பதாகப் பேசியுள்ளார். இது கோடிக்கணக்கான மக்களால் வணங்கப்படும் பூரி ஜெகந்நாதரை அவமதிப்பதுடன், ஒடிசா மாநிலத்தோடு நல்லுறவும் நேசமும் கொண்ட தமிழக மக்களை அவமதிப்பதும் புண்படுத்துவதுமாகும்.

mm

ஆலயத்தின் பொக்கிஷத்தைக் களவாடும் திருடர்கள் என்ற பழியை தமிழக மக்கள் மீது பிரதமர் சுமத்தலாமா? தமிழர்கள் மீது பிரதமர் மோடிக்கு இத்தனை காழ்ப்பும் வெறுப்பும் ஏன்?'’என கேள்வியெழுப்பியுள்ளார்.

இது ஒருபுறமிருக்க, ஒடிஷாவின் பூரி தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா, "லட்சக்கணக்கான மக்கள் மோடியைப் பார்க்க வருகிறார்கள். ஜெகந்நாதரே மோடியின் பக்தர்தான்''’என்று பிரச்சாரத்தில் பேச... இவ்விவகாரம் சர்ச்சையாகியிருக்கிறது.

உடனடியாக ஒடிசா முதல்வர் பட்னாயக், "ஸ்ரீஜெகந்நாதரை, மனிதரின் பக்தராக குறிப்பிடுகிறார்கள். இது கடவுளையே அவமானப்படுத்துவதுபோல. ஒடிய மக்களையும் ஜெகந்நாதரையும் பா.ஜ.க.வினர் அவமானப்படுத்தி விட்டார்கள்'’என எக்ஸ் தளத்தில் பதிவிட்டது வைரலாகிவருகிறது.

இப்போது சம்பித் பத்ரா, "மோடி, ஜெகந்நாதரின் பக்தர் எனச் சொல்லவந்தேன். தவறுதலாகி விட்டது. இந்த தவறுக்குப் பிராயச்சித்தமாக மூன்று நாட்கள் விரதம் இருக்கப்போகிறேன்' என்றிருக்கிறார்.

ஆனால் இதுவரை மோடி, தமிழர்களைப் பற்றி தவறுதலாகப் பேசினேன் என எங்கும் கூற வில்லை. இதற்கு பிராயச்சித்தம் செய்யப்போவதாகவும் சொல்ல வில்லை. எனவே தமிழர்களைக் குறித்து தெரிந்தே இழிவாகப் பேசியிருக்கிறார் என எடுத்துக் கொள்ளலாமா?