"ஹலோ தலைவரே, எடப்பாடி கட்சிரீதியாக ஒரு சிக்கலில் மாட்டியிருக்கிறார்''”
"ஆமாம்பா, அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளர் என்கிற எடப்பாடியின் பதவி கேள்விக்குறியா ஆகி இருக்கே?''”
"ஆமாங்க தலைவரே, அ.தி.மு.க.வின் பொதுக்குழு கடந்த ஜூலை 11-ல் கூடி, எடப்பாடியை இடைக்கால பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுத்தது. அது 4 மாதத் திற்கு நீடிக்கும் என்றும், அதற்குள் மறுபடியும் பொதுக்குழு கூடி, முறைப்படி அவரைத் தேர்ந்தெடுக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே மற்றொரு வழக்கில், உச்சநீதிமன்றம், அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் பதவிக்குத் தேர்தல் நடத்தத் தடை விதித்திருக்கிறது. இந்த சூழலில் எடப்பாடியின் 4 மாதப் பதவிக் காலம் முடிந்துவிட்டது. அதனால் அடுத்து என்ன செய்வது என்ற பதைப்போடு தன் வழக்கறி ஞர்களுடன் அவர் ஆலோசனை நடத்திவருகிறார். அதேபோல் ஓ.பி.எஸ்.ஸின் அ,தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் பதவியும் செப்டம்பர் 22 ஆம் தேதியோடு முடிவடைந்துவிட்டது. அதனால் அ.தி.மு.க.வின் அதிகார நாற்காலி அந்தரங்கத்தில் தொங்குகிறது.''”
"மதுரை வந்த பிரதமர் மோடியும் எடப்பாடிக்கு ஷாக் கொடுத்திருக்காரே?''”
"ஆமாங்க தலைவரே, காந்தி கிராம பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவை முடித்துக் கொண்டு டெல்லிக்குச் செல்ல, மதுரை ஏர்போர்ட்டுக்கு வந்த மோடியை, வழியனுப்பி வைக்க எடப்பாடியும் ஓ.பி.எஸ்.ஸும் வந்தனர். இருந்தும் ஒருவரை ஒருவர் பார்க்காத மாதிரியே நடந்துகொண்டனர். அதேபோல் மோடியுடன் 10 நிமிடமாவது தனியாகப் பேச வேண்டும் என்று இருவருமே காத்திருந் தனர். ஆனால் மோடியோ அதற்கு இடம் வைக்கவே இல்லை. போதாக்குறைக்கு, எதிரிகளாகிவிட்ட அவர்கள் இருவரின் கைகளை யும் பிடித்து அவர் ஒன்றிணைக்க, எடப்பாடி அதிர்ந்து போய்விட்டார். இதன்மூலம் இருவரும் இணைந்திருக்க வேண்டும் என்ற தன் விருப்பத்தை மோடி உணர்த்தினார். மோடியின் இந்தத் திடீர் செயலை ஓ.பி.எஸ்.ஸும் எதிர்பார்க்கவில்லையாம்.''
"மோடியின் இந்தச் செயல் குறித்து எடப்பாடி என்ன நினைக்கிறார்?''”
"சென்னை திரும்பிய எடப்பாடியை, அவர் அணியில் இருக்கும் மூத்த நிர்வாகிகளும், மா.செ.க் களும் சந்தித்தனர். அப்போது எடப்பாடி, மோடி என்ன செஞ்சார் தெரியுமான்னு கேட்க, ஆமாம் கேள்விப்பட்டோம். கட்சியின் 90 சத நிர்வாகிகள் உங்கள் பக்கத்தில்தான் இருக்கிறோம்னு நீங்க பல முறை நிரூபித்திருக்கிறீர்கள். அதோடு ஓ.பி.எஸ்.ஸை இனி அ.தி.மு.க.வில் சேர்த்துக்கொள்ள முடியாதுன் னும் நீங்கள் வெளிப்படையாகவே சொல்லிவிட் டீர்கள். அப்படியிருந்தும் அவரை சேர்த்துக் கொள்ளணும்னு மோடி ஏன் துடிக்கிறார்? இனி அவரை நீங்களாகப் போய் எங்கேயும் சந்திக்கக் கூடாது. தனிப்பட்ட சந்திப்புக்கு நேரம் ஒதுக்கி னால் மட்டும் பாருங்கள்னு ஆலோசனை சொல்லியிருக்காங்க. இதை ஏற்றுக்கொண்ட எடப்பாடி, அடுத்ததா சென்னை வந்த அமித்ஷா வைச் சந்திப்பதைத் தவிர்த்துவிட்டார்.''
"சரிப்பா, மோடி எதுக்காக ஓ.பி.எஸ். மீது இவ்வளவு அக்கறை காட்டணும்?''”
"மக்களின் அனுதாபம் ஓ.பி.எஸ்.ஸுக்கு இருப்பதாகவும், எடப்பாடியும் அவருடன் சேர்ந்தால் அ.தி.மு.க. பல மாக இருக்கும் என்று ஆடிட்டர் குருமூர்த்தியும் அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமியும், பா.ஜ.க. தரப்புக்குத் தொடர்ச்சியாகத் தகவல் கொடுத்து வருகிறார்கள். அதோடு ஓ.பி.எஸ். தனது டெல்லி லாபி மூலம், மோடியிடம் தன்னை நல்ல மாதிரி பதியவைத்திருக்கிறார். இதையெல்லாம் அறிந்து ஓ.பி.எஸ்., ரவீந்திரன் துரைசாமி மீது கடுப்பில் இருக்கும் எடப்பாடி, அவர்களைத் தன் மகன் மிதுன் தலைமையில் இயங்கும் ஐ.டி. விங்க் மூலம் கடுமையாக அட்டாக்பண்ணி வருகிறார். அவரும் ஜல்லிக்கட்டுக் காளையாய்த் துள்ளிக் குதிக்கிறார். குறிப்பாக ரவீந்திரனின் நாடார் சமூ கத்தை குறிவைத்தும் அந்த அட்டாக் திசைமாறிச் செல்ல, அவர்கள் தரப்பு கொதிப்பில் இருக்கிறது.''”
"இந்த வருடம் ஜல்லிக்கட்டு நடக்குமா?''”
"இந்தக் கேள்விதான் இப்ப எல்லோரிடமும் இருக்கிறது. உச்ச நீதிமன்ற உத்தரவால் தடை செய்யப்பட்டிருந்த ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு, அனுமதி அளிக்கும் வகையில் ஒன்றிய அரசின் மிருகவதைத் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்து தமிழக அரசு சட்டம் இயற்றி இருந்தது. தமிழக அரசின் இச்சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் கூபா (Compassion Unlimited Plus Action -CUPA) உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட அமைப்புகள் வழக்கு தொடர்ந்திருக் கின்றன. இந்த வழக்கை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு சங்க மாநில இளைஞ ரணி தலைவர் ஜல்லிக்கட்டு ராஜேஷ், 2017-ல் தன்னையும் வழக்கில் மனுதாரராக இணைத்துக்கொண்டார்.
"ஆமாம்பா’இந்த வழக்கிற்கு வலுச் சேர்க்கும் வகையில், ஜல்லிக்கட்டு பாதுகாப்பு சங்க மாநில தலைவர் ஒண்டிராஜ் மற்றும் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்.பி. ஆகியோரும் இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். உச்ச நீதிமன்றத்தில் வரும் 23-ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ள நிலையில், ஜல்லிக்கட்டு பாதுகாப்பு சங்க மாநில கௌரவ தலைவரும் இலங் கையின் முன்னாள் தமிழ் அமைச்சருமான செந்தில் தொண்டமான், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை மனு அளித்திருக்கிறார். அதற்கு முதல்வர், ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க சட்டரீதியான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனால் கடந்த வருடம் போலவே இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு நடைபெறும்னு நம்பிக்கை தெரிவிச்சிருக்கிறார்.
"ஒரு மூதாட்டி கொடுத்த புகார், தலைமைச் செயலாளரின் நேரடி கவனிப்பால், அவருக்கு நீதியைப் பெற்றுக் கொடுத்திருக்கே?''””
"உண்மைதாங்க தலைவரே, "மாவட்ட ஆட்சியர் உத்தரவை மதிக்காத வட்டாட்சியர்' என்ற தலைப்பில், நம் நக்கீரன் இதழில் வந்த ஒரு செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அது என் னன்னா, நாகரத்தினம் என்கிற மூதாட்டி, தனது சொந்த சம்பாத்தியத்தில் வாங்கிய நிலத்தை, தனது மகன் நிர்பந்தமாக எழுதி வாங்கிக்கிட்டு, தன்னை நிர்க்கதியில் விட்டுவிட்டதாக, செங்கல்பட்டு கலெக்டரிடம் புகார் கொடுத்திருந்தார். இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய தாம்பரம் வட் டாட்சியர் கவிதாவோ, அதில் கவனம் செலுத்தா மல் அசட்டையாவே இருந்தார். இந்தத் தகவல்தான் நம்ம நக்கீரன்ல வந்திருந்தது. இந்த செய்தியை கவனித்த தலைமைச் செயலாளர் இறையன்பு, உடனடி நடவடிக்கையில் இறங்கும்படி கலெக்டர் ராகுல்நாத்துக்கு உத்தரவிட, அவரும் அதிரடி ஆக்ஷன்ல இறங்கிவிட்டார்.''”
"பிறகு?''”
"வருவாய்த்துறை அதிகாரிகள் பரபரப்பாகக் களமிறங்கினாங்க. மூதாட்டி நாகரத்தினத்தின் மகன் பெயரில் பதிவு செய்யப் பட்டிருந்த அவருடைய நிலத்தை மீண்டும், நாகரத்தினம் பெயருக்கே மாற்றிக் கொடுத்தாங்க. இதனால் நிர்க்கதியில் நிறுத்தப்பட்டி ருந்த அந்தத் தாயின் கண் ணீர் துடைக்கப்பட்டிருக்கு. இப்படி தன் கவனத்திற்கு வரும், ஒவ்வொருவரின் பிரச்சினையிலும் தலை மைச்செயலாளர் காட்டி வருகிற அக்கறை, கோட்டை வட்டாரத்திலேயே பாராட்டுக்களைக் குவிச்சிக்கிட்டு இருக்குது. தனி நபர்கள் விவகாரத்தில் கூட அநீதி இழைக்கப்பட்டால், அதன்மீது உடனுக்குடன் உரிய நடவடிக்கைகளை இந்த அரசு எடுத்துவருவதற்கு இதுஒரு உதாரணம் என்றும் அவர்கள் சொல்றாங்க.''
"நானும் ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்துக்கறேன். பா.ஜ.க. இப்போது எடப்பாடிக்கு கூட்டணி தொடர்பாகவும் தீவிரமாக நெருக்கடி கொடுக்க ஆரம்பித்திருக்கிறது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தே.மு.தி.க., புதிய தமிழகம், அ.ம.மு.க. உள்ளிட்ட கட்சிகளை இணைத்துக்கொண்டு கூட்டணியை உருவாக்க வேண்டும் என்றும், அ.தி. மு.க.வில் சசிகலாவை சேர்த்துக்கொள்ளாவிட்டாலும் அ.ம.மு.க.வில் அவர் செயல்படுவார் என்றும் அவ ரோடும் சேர்ந்துதான் பயணிக்கவேண்டும் என்றும் நிர்பந்திக்கிறதாம். மேலும், வரும் எம்.பி. தேர்தலின்போது அ.தி.மு.க. கூட்டணியில் தினகரனும் தேர்தலில் நிற்பார். இதற்கெல் லாம் உடன்படவில்லை என்றால் இரட்டை இலை சின்னம் கூட உங்களுக்குக் கிடைக்காது. ரெய்டு சிக்கல்களும் இருக்கும் என்றெல்லாம் மிரட்டல் தொனியி லேயே எடப்பாடியின் கழுத்தை டெல்லி நெருக்கு கிறதாம்.''’
____________
ஒற்றுமையுடன்
கடந்த இதழ் இறுதிச் சுற்று பகுதியில் அரசு கேபிள் டி.வி. வாரியத் தலைவராக இருந்த ஈரோடு குறிஞ்சி சிவகுமார் மாற்றப்பட்டதன் பின்னணியில், அந்த வாரியத்தின் இயக்குநர் ஜெயசீலன் ஐ.ஏ. எஸ்.ஸூக்கும் சிவகுமாருக்கும் ஒற்றுமையில்லாத நிலை நீடித்துவந்தது என்பதும் காரணமாக சுட்டிக்காட்டப் பட்டிருந்தது. வாரியத் தலைவராக இருந்தவருடன் நல்ல முறையில் இணைந்து பணியாற்றியதாகவும், செய்தியில் குறிப்பிட்டிருப்பது போல ஏதுமில்லை என்றும் ஜெயசீலன் ஐ.ஏ.எஸ். தெரிவிக்கிறார்.
(-ஆர்)