தி.மு.க.வின் முகவர் பயிற்சிப் பாசறைக் காக கட்சியின் தலைவராக சென்றவர், மீனவப் பெண்களிடம் "மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பித்து விட்டீர்களா? உங்களுக்கான அரசின் அனைத்து நலத்திட்டங்களும் தெரி யுமா? எப்படியிருக்கிறீகள்?'' என தாயுமானவ னாகி விசாரித்திருக்கின்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/fisherman-meet.jpg)
மண்டல வாரியாக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் ஒரு நாள் பயிற்சிப் பாசறைக் கூட்டம் எனத் தலைமை கழகத்திலிருந்து அறிவித்த நிலையில், திருச்சிக்கு அடுத்து ராமநாதபுரத்தில் நடத்துவது என முடிவானது. இதே வேளையில் பயிற்சிப் பாசறைக் கூட்டத் திற்காக மட்டும் முதல்வர் ஸ்டாலின் வருவதைக் காட்டிலும், மீனவர் நலனில் அக்கறைகாட்டி, மீனவர் நல மாநாடு மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவாகவும் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, பயிற்சி பாசறைக்கூட்டம் ராமநாதபுரம் பேராவூர் பகுதியிலும், மீனவர் நல மாநாடு, மண்டபம் பகுதியிலும் 17, 18 என அடுத்தடுத்த தேதிகளில் நடத்தப்பட்டது.
தலைமை கண்காணிப்புக்குழு, வரவேற்புக் குழு, பூத் லெவல் ஏஜென்டுகள் (இகஆ2) கண்காணிப்புக்குழு, வருகைப்பதிவேடு குழு உள்ளிட்ட குழுக்களின் மேற்பார்வையில், 10 நாடாளுமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட கட்சியின் நிர்வாக ரீதியான மாவட்டங்களான ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் வடக்கு- தெற்கு, தேனி வடக்கு-தெற்கு, திண்டுக்கல் கிழக்கு- மேற்கு, மதுரை மாநகர்-வடக்கு-தெற்கு, தூத்துக்குடி வடக்கு-தெற்கு, திருநெல்வேலி மத்தி-கிழக்கு, தென்காசி வடக்கு- தெற்கு மற்றும் கன்னியாகுமரி கிழக்கு- மேற்கு உள்ளிட்ட 19 மாவட்டங்களுக்கான 16,978 வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான பயிற்சிப் பாசறை (இகஆ2) வியாழக்கிழமை துவங்கியது. கோட்டை கொத்தளம் போன்ற முகப்புடன் சுமார் 25,000 நபர்கள் அமருவது போல் பந்தல் அமைக்கப்பட்டது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/fisherman-meet1.jpg)
இகஆ2-விற்காக மதுரையிலிருந்து ராமநாத புரம் நோக்கிவரும் முதல்வர் ஸ்டாலினை வர வேற்க 40க்கும் மேற்பட்ட இடங்களில் குழுவினர் வரவேற்றனர். குறிப்பாக, பார்த்திபனூர் எல்லை, கமுதக்குடியில் வெண் சீருடை அணிந்த இளைஞர் அணியின் வரவேற்பு, தெளிச்சாத்த நல்லூர், நெம்மேனி எல்லைகள், மஞ்சூர், போக லூர், அச்சுந்தன் வயல் மற்றும் பட்டணம்காத் தான் எல்லையில் அளிக்கப்பட்ட வரவேற்புகள் மாஸ் காட்டின. கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முதல்வர், "வாக்காளர்களின் குடும்ப உறுப்பினராக நீங்கள் மாற வேண்டும். தேர்தல் வெற்றிக்கு நீங்களே பொறுப்பு. நாற்பது தொகுதி யும் நமதே என நான் பேசுவது உங்கள் மேல் நான் வைத்த நம்பிக்கையாலே'' என்றவர் தொடர்ந்து, "பா.ஜ.க. இந்தியாவின் கட்டமைப் பையே சீர்குலைத்துவிட்டது. நம்மை நிரா கரிப்பவர்கள் தமிழகத்தில் இருக்க மாட் டார்கள்'' என்றார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/fisherman-meet2.jpg)
பயிற்சிப் பாசறையை முடித்துவிட்டு, அடுத்த நாள் துவங்கவிருந்த மீனவர் நல மாநாட்டிற்காக ராமேஸ்வரம் நோக்கி பயணத்தைத் துவக்கினார் முதல்வர் ஸ்டாலின். பாம்பன் பாலத்தை கடந்த நிலையில் அக்காள் மடம் சேதுபதி நகர் வழியாக வந்தவர், திடுமென இறங்கி, அங்கிருந்த மீனவப் பெண்களிடம் "மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்துவிட்டீர்களா? உங்களுக்கான அரசின் அனைத்து நலத்திட்டங்களும் தெரியுமா? எப்படியிருக்கிறீகள்?" என உரையாடத் துவங் கினார். அதனையடுத்து உரிமையுடன் மீனவர் மரியஹட்சன் வீட்டிற்குள் நுழைந்து, குடும்ப நண்பர்போல் நலம் விசாரித்தார். இந்நிலையில், மீனவப் பெண்கள் அனைவரும், தங்களுடைய குடியிருப்புப் பகுதிக்கு பட்டா கேட்டு கோரிக்கை விடுக்க, விரைவில் உங்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தவர், அப்படியே தலையைத் திருப்பி மாவட்ட ஆட்சியர் விஷ்ணுசந்திரனை பார்த்தார். மீனவப் பெண்களும் மகிழ்ச்சி பெருக்கெடுக்க அங்கேயே நன்றிகூறியது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/fisherman-meet3.jpg)
முன்னதாக, ராமநாதபுரம் ஆய்வு மாளிகை யில் 1 கோடி மரக்கன்றுகள் நடும் பணியினைத் துவக்கி வைக்கும்விதமாக மரக்கன்றுகளை வழங்கினார். தொடர்ந்து, மாவட்டத்தில் சிறந்த சமூக சேவையாற்றிய அரசுத் துறையைச் சேர்ந்த 10 பணியாளர்கள் மற்றும் 5 தொண்டு நிறுவனங் களின் நிர்வாகிகளுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தார். இதே வேளை யில், அமைச்சர் ராஜகண்ணப்பனின் தொகுதி யான முதுகுளத்தூர் தொகுதியிலிருந்த வந்த மாற்றுத்திறனாளியான நாககுமரன், பணி வேண்டி முதல்வரிடம் கோரிக்கை வைக்க, உட னடியாக தற்காலிகப் பணியினை வழங்கினார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/fisherman-meet4.jpg)
வெள்ளிக்கிழமையன்று மண்டபத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநிலத் தலைமை மீன்வள கூட்டுறவு இணையம் மற்றும் மீனவ சங்கங்கள் இணைந்து நடத்தும் மீனவர் நல மாநாட்டிற்கு செல்லுமுன் சரியாக காலை 10.05க்கு பேக்கரும்பு பகுதிக்கு வந்தவர், மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாமின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். பின் அங்கிருந்து மாநாட்டிற்கு சென்றவர், 14,000 பயனாளிகளுக்கு ரூ.88.90 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிடும் பொருட்டு, மேடையில் 60 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மீனவர்கள் முன், "1076 கி.மீ. நீளமான கடற்கரையைக் கொண்ட தமிழ்நாடு தான் மீன்பிடி தொழிலில் 5வது மாநிலமாக உள்ளது. மீனவர்கள் நல வாரியம், மீன்பிடி தடைக்கால நிவாரணம், மீனவர்களுக்கு மானிய விலையில் மண்ணெண்ணெய் வழங்கும் திட்டம் போன்றவை கலைஞர் ஆட்சியில் தான் அறிமுகப்படுத்தப்பட்டது. மீன்பிடி தடைக்கால நிவாரணம், கல்வியில் மாணவர்களுக்கான 20% இட ஒதுக்கீடு, தி.மு.க. ஆட்சியில்தான் உயர்த்தப்பட்டது. பா.ஜ.க. ஆட்சியில்தான் மீனவர்கள் மீதான அடக்குமுறை அதிகரித்தது. பாம்பனில் கடல் தாமரைப் போராட்டத்தை நடத்தினார் பா.ஜ.க.வின் சுஷ்மா. என்ன ஆனது? மீனவர்களின் இந்த நிலைக்கு காரணம் காங்கிரஸ் என்றார் மோடி. 2017ல் தங்கச்சிமடம் மீனவர் பிரிட்டோ சாவிற்கு யார் காரணம்? பா.ஜ.க. ஆட்சிக்குப் பிறகுதான் 48 முறை மீனவர்கள் மீதான தாக்குதலும், 619 மீனவர்கள் கைது செய்யப்பட்டதும் நடந்திருக்கின்றது. அத்தனைக்கும் பா.ஜ.க. அரசின் அலட்சியமே காரணம்'' என்றவர் தொடர்ந்து, "இதற்கெல்லாம் ஒரே தீர்வு கச்சத்தீவை மீட்பது தான். எப்பொழுதும் அதற்கு தி.மு.க. துணை நிற்கும். மீனவர்களின் பாதுகாப்பிற்கு என்றும் நாங்கள் இருப்போம்'' என நெகிழ்ச்சியுடன் கூறினார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/fisherman-meet5.jpg)
தொடர்ந்து, "வீடு கட்டும் திட்டத்தின் கீழ், 5035 பேருக்கு பட்டா, 45 ஆயிரம் பேருக்கு மீன்பிடி தொழிலுக்கான கூட்டுறவு கடன், மீன்பிடி தடைக்கால நிவாரணத்தொகையை 8,000 ரூபாயாக உயர்த்துதல், 1000 நாட்டுப் படகு மீனவர்களுக்கு 40% மானியத்தில் இயந்திரங்கள், தூத்துக்குடி, நெல்லை மற்றும் குமரி மாவட்ட மீனவர்களுக்கு பதிவு செய்யப்பட்ட நாட்டுப் படகு உரிமையாளர்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் மண்ணெண்ணெய் அளவை 3700 லிட்டராக உயர்த்துதல், விசைப்படகுகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் டீசலை 18,000 லிட்டரிலிருந்து 19,000 லிட்டராகவும், இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப் படகுகளுக்கு வழங்கப்படும் டீசலை 4000 முதல் 4400 லிட்டராகவும் உயர்த்துதல், தங்கச்சி மடத்தில் மீன்பிடி துறைமுகம், பாம்பன் வடக்கு மீனவர் கிராமத்தில் தூண்டில் வலை, மீனவர்கள் விபத்து காப்பீடு திட்டத்தின் கீழ் 205 குடும்பங்களுக்கு நிவாரணம், காணாமல் போகும் மீனவர்களுக்கான சுழல் நிதி, மீனவர்களுக்கான வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் அலகு நிதி 1,70,000 ரூபாயிலிருந்து 2,40,000 ரூபாயாக உயர்த்துதல் உள்ளிட்ட முத்தான 10 அறிவிப்புக்களை வெளியிட்டு மீனவர்களின் தாயுமானவனாக மாறினார் முதல்வர் ஸ்டாலின்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-08/fisherman-meet-t.jpg)