ள்ளக்குறிச்சி மாவட்டம் அசகளத்தூர் கிரா மத்தை சேர்ந்த மணிவண்ணன் தனியார் மருந்தகம் நடத்தி வருகிறார். இவர் நடத்தி வந்த மருந்தகத்தில் அசகளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சிவகுரு என்பரது மனைவி கௌதமி வேலை பார்த்து வந்துள்ளார். இந்த மருந்தகத்தில் சட்ட விரோதமான முறையில் கருவுற்ற தாய்மார்களுக்கு கருக்கலைப்பு நடைபெற்றுவருவதாக வேப்பூர் தாலுகா அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் அகிலனுக்கு தகவல் கிடைத்துள்ளது.

அவர் வேப்பூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் அங்கே சென்றபோது, மருந்தகத் தின் வெளியே சொகுசு கார் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது காரின் உள்ளே, பெண்கள் வயிற் றில் வளரும் குழந்தை ஆணா பெண்ணா என்பதைக் கண்டறி யும் கருவி மற்றும் மருந்தகத்தில் கருக்கலைப்பு செய்ய தேவையான மருந்துகள் மாத்திரைகள் அனைத் தும் இருந்துள்ளன. அவைகளைக் கைப்பற்றிய போலீசார், நடத்திய விசாரணையில் அசகளத்தூரை சேர்ந்த புரோக்கர்கள் ராமலிங்கம் மகன் தினேஷ், அதே ஊரைச் சேர்ந்த குமாரசாமி மகன் கண்ணதாசன் ஆகியோர் மருந்தகத்தில் இருந்துள்ளனர்.

ass

இவர்கள் நான்கு பேரிடமும் வேப்பூர் போலீசார் விசாரணை நடத்தியதில் பெரம்பலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலிருந்து சட்டவிரோதமான முறையில் கருக்கலைப்பு செய்ய விரும்பும் பெண்களை புரோக்கர்கள் மூலம் அழைத்துவந்து நடமாடும் கருக் கலைப்பு மையமாக வைத்து செயல்பட்டு வந்தது தெரியவந்துள்ளது. இவர்கள் 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்தனர். இவர்கள் கருக்கலைப்பு செய்ய பயன்படுத்திய சொகுசு கார், ஸ்கேனர் இயந்திரம் உட்பட அனைத்தையும் பறிமுதல் செய்தனர்.

கருவுறும் பெண்கள் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்பதைக் கண்டறி வதற்காக நிரந்தரமான கட்டடங்களில் அனைத்து மருத்துவ வசதிகளையும் ஏற்படுத்தி கருக்கலைப்பு செய்தால் அது சட்டவிரோதம். மருத்துவத் துறையினர் மற்றும் போலீசார் கண்டுபிடித்துவிடு வார்கள் என்பதற்காக சொகுசுக் காரில் அனைத்து வசதிகளையும் தயார் செய்து நடமாடும் கருக்கலைப்பு மையத்தை நடத்திவந்தி ருக்கிறார்கள். கருக்கலைப்பு செய்யும் பெண்களை ஒரே இடத்திற்கு வரவழைக்காமல் அவர்கள் இடத்திற்கே சென்று காரிலேயே வைத்து கருக் கலைப்பை நூதன முறையில் செய்துவந்துள்ளனர்.

இத்தகைய சட்டவிரோத கருக்கலைப்பால் முன்பு அனிதா, செல்வி, பெரியநாய கம் போன்ற பெண்கள் இந்தப் பகுதிகளில் உயிரிழந்துள்ளனர். இந்த சட்டவிரோத கருக்கலைப்பில் ஈடுபடும் அனைவரும் எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு வரை படித்த போலி மருத்துவர்கள். இவர்கள் மீண்டும்… மீண்டும்… மிகத் துணிச்சலோடு கருக்கொலைகளை செய்து வருகிறார்கள் இப்படிப்பட்டவர்களுக்கு நீதிமன்றம் மிகக் கடுமையான தண்டனை வழங்கவேண்டும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்

Advertisment