ரக உள்ளாட்சித் தேர்தலை பொறுத்தவரை, நெல்லை மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக தேர்தல் நடைபெற்ற களக்காடு, திசையன்விளை, வள்ளியூர், ராதாபுரம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு உள்பட்ட பகுதிகளுக்கான தேர்தலின் இறுதிக்கட்ட பிரச்சாரம் 7-ம் தேதி மாலை முடிவுற்றது. தி.மு.க. சார்பில் நெல்லை மாவட்டத்தின் ஊரக உள்ளாட்சித் தேர்தலின் பொறுப்பாளராக அம்பாசமுத்திரம், நெல்லை தொகுதிக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி, ராதாபுரம் தொகுதிக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை கீதாஜீவனும், நாங்குநேரி தொகுதிக்கு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோதங்கராஜும் நியமிக்கப்பட்ட நிலையில், அ.தி.மு.க. சார்பில் தொகுதியின் பொறுப்பாளராக முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. இன்பதுரையும் நியமிக்கப் பட்டிருந்தனர்.

minister

"இறுதிக்கட்ட பிரச்சாரமான வியாழனன்று மாலை திசையன்விளை அருகிலுள்ள அப்புவிளையில் பிரச்சாரம் செய்தது அ.தி.மு.க. தரப்பு, அன்று திசையன்விளையை முடித்துவிட்டு கரைச்சுத்து புதூர் வழியாக, தலைவர்கள் தங்கியிருந்த வி.எஸ்.ஆர். மாலுக்கு முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், அமைச்சர்கள் பெரியசாமி, கீதாஜீவன் ஆகியோர் உட்பட நாங்கள் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக திரும்பிக் கொண்டிருந்தோம். அப்பொழுது அமைச்சர் பெரியசாமியின் காரை வழிமறித்து காரின் முகப்பில் - பேனட்டில் தட்டி அமைச்சரை தாக்க முற்பட்டனர் உள்ளூர் அ.தி.மு.க.வினர். போலீஸாரும் கண்டு கொள்ளவில்லை. முழுக்க முழுக்க போலீஸார் அ.தி.மு.க.விற்கே சப்போர்ட் செய்தனர்'' என்றார் சம்பவம் குறித்து தி.மு.க. சார்பில் புகார் கொடுத்த மாணவரணியை சேர்ந்த நல்லகண்ணு.

dd

Advertisment

இது அமைச்சர் பெரியசாமிக்கு எரிச்சலை ஏற்படுத்திய நிலையில்... அங்கிருந்தபடியே நெல்லை புறநகர் மாவட்ட எஸ்.பி. மணிவண்ணனை தொடர்பு கொண்டு அதிருப்தியை தெரிவித்த வேளையில்... அவரும் இது குறித்து விளக்கமளித்துள்ளார். அமைச்சர் பெரியசாமி அங்கிருந்து புறப்பட்ட வேளையில், " 12-ம் தேதியன்று எஸ்.பி. மணிவண்ணன் மாற்றலாகிறார். எங்களை பகைச்சுக்கிட்டா இருக்க முடியுமா..?'' என வாட்ஸ் அப்களில் மெஸேஜ்களை அனுப்பினர், நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க.வினர்.

எஸ்.பி.யின் இடமாற்றம் ஏன் கொண்டாடப் படுகின்றது..? எனக் கேள்வியெழுப்பினால், "இந்த எஸ்.பி.யை மாற்ற முதல்வர்வரை மனு கொடுத்து போராடிவருகின்றார்கள் இங்குள்ள அரசியல்வாதிகள். இப்பொழுது மட்டுமல்ல ஆரம்பத்திலிருந்தே அவரை மாற்ற போர்க்கொடி உயர்த்தி வருகின்றது அரசியல்வாதி கள் டீம். இது தான் தருணமென்று அமைச்சர் கார் மறிக்கப்பட்ட சம்பவம் ஊதிப் பெரிதாக்கப்படுகின்றது. மாவட்டத்தை பொறுத்தவரை எவ்வளவு பெரிய வி.ஐ.பி.யாக இருந்தாலும், அவருடைய ஜம்பம் எஸ்.பி.யிடம் செல்லாது. கடந்த ஒன்றரை வருடத்தில் அவர் போட்ட குண்டர் தடுப்பு வழக்குகள் மட்டும் ஏறக்குறைய 240. எஸ்.பி.யின் மாற்றம் குறித்து சந்தோஷப்படும் சிலர் மணற்கொள்ளையில் எஸ்.பி.யால் வழக்கில் கொண்டு வரப்பட்டவர்கள். இதற்கு முன்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பணியாற்றிய போது மணல் விவகாரத்தில் தளவாய் சுந்தரம், பச்சைமால் ஆதரவாளர்களை உள்ளே தூக்கி வைத்ததால் அங்கிருந்து பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

Advertisment

minister

தி.மு.க அரசின் மீது வைக்கப்பட்ட எவ்வித குற்றச்சாட்டுகளுக்கும் இப்போது இடம் கொடுத்துவிடக் கூடாது என்பதற்காக, ஆட்சி பதவியேற்ற நாளிலிருந்து ஒவ்வொரு விடயத்தையும் கவனமாகவே கையாண்டு வருகின்றது ஸ்டாலின் தலைமையிலான அரசு. இதில் காவல்துறை செயல்பாட்டில் எந்த காரணத்தைக் கொண் டும் அமைச்சர்களோ, தி.மு.க. பிரதிநிதிகளோ நேரடியாகத் தலையிடக்கூடாது என்பதுதான் முதன்மையே. ஆனால், அதற்கு நேர்மாறாக இருக்கின்றது இந்த மாவட்டம்'' என்கிறார் வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான பிரம்மா.

இதுகுறித்து பேசிய காவல்துறை வட்டாரமோ, "அன்றைய தினத்தில் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் அனுமதி பெறாமலேயே பிரச்சாரத்தை நடத்தியது. அதுவும் குறுக லான சந்து. அதில் எதற்காக அமைச்சர்களை அழைத்து வரவேண்டும்..? இந்த பிரச்சனையை ஊதிப் பெரிதாக்க வேண்டும்.? அனைத்திற்கும் காரணம் இங்கு நடக்கும் சட்டவிரோத மணல் கடத்தலே. கடந்த ஜூன் மாதத்தில் ராதாபுரம் பகுதியில் சட்டவிரோத மணல் கடத்தலுக்காக செல்வன் என்கின்ற சிவலிங்கம் வளைக்கப் பட்டார். இதற்காக, குற்றவாளிக்காக பரிந்து பேசியது இங்குள்ள தி.மு.க. முக்கிய புள்ளியே. அதுபோல் பழவூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோத மணல் கடத்தலுக்காக முக்கிய புள்ளியின் உறவினரான பிரபு என்பவர் மீது வழக்கு பதியப் பட்டுள்ளது. குறிப்பிட்ட இரு வி.ஐ.பி.க்கள் இருவரும் இரண்டு சட்டவிரோத மணல் கிரஷர்களை இயக்கிவருவதை கண்டித்தது தவறா? மணல் கடத்தலைத் தடுத்த இரண்டு எஸ்.ஐ.க்களான ஆண்டோ பிரதீப் மற்றும் பிரபு பாஸ்கரன் ஆகியோர் சிலருடைய அழுத்தத் தால் இடமாற்றம் செய்யப்பட்டனர். அதுபோல், எஸ்.பி.யும் இடமாற்ற மானால்தான் தாங்கள் தங்களுடைய மணல் கடத்தலை தொடரலாம் என்று வதந்தியை பரப்புகின்றார்கள் அவர்கள்'' என்கின்றது.

படங்கள்: விவேக்