திராவிட முன்னேற்றக் கழகத்தின் உட்கட்சித் தேர்தல் மிக விறுவிறுப்பாக நடந்துமுடிந்த நிலையில், திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளராக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தேர்ந் தெடுக்கப்பட்டார். இதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டத்தில், அவரு டைய தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட மணப்பாறை, திருச்சி கிழக்கு, திருவெறும் பூர் உள்ளிட்ட தொகுதிகளின் கடைநிலை உறுப்பினரிலிருந்து மாநில அளவிலான உறுப்பினர்கள், தொண்டர்கள் என பார பட்சம் இல்லாமல் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

13 வருடத்திற்குப் பின்பு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மாவட்டச் செயலாளர் ஆனதும் நடத்தும் முதல் கூட்டம் என்பதால் மிக பிரம்மாண்டமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. வந்தவர்களுக்கு வயிறார உணவு வழங்கப்பட்டு, எந்தவிதக் குறைவும் இல்லாமல் மிகுந்த கவனத்துடன் அமைச்சர் அன்பில் மகேஷ் ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.

dmk meet

Advertisment

திருச்சி ஈ.பி. சாலையிலுள்ள சந்தான வித்யாலயா பள்ளி மைதானத்தில் நடை பெற்ற இந்தக் கூட்டத்துக்கு திருச்சி தி.மு.க. தெற்கு மாவட்டச் செயலாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை தாங்கினார். திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் இனிகோ இருதயராஜ், திருச்சி லால்குடி சட்டமன்ற உறுப்பினர் சவுந்தரபாண்டியன் மற்றும் தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் இந்தித் திணிப்பு மசோதா எதிர்ப்பு, நீட் தேர்வு விலக்கு மற்றும் 2024 பாராளுமன்ற தேர்தலுக்கு பூத் கமிட்டி அமைத்து 40-க்கு 40 என்ற அடிப்படையில் வெற்றிபெறச் செய்வது, அமைச்சர் கே.என்.நேருவை மீண்டும் முதன்மைச் செயலாளராக நியமித்ததற்கு முதல்வருக்கு நன்றி தெரிவிப்பது, வருகின்ற 27-ஆம் தேதி உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு கழக கொடியினை ஏற்றி நலத்திட்ட உதவிகளை வழங்குவது என பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதனைத் தொடர்ந்து தன்னுடைய இயல்பான பேச்சால் நிர்வாகிகளையும், உறுப்பினர் களையும் கவர்ந்தார் தெற்கு மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி. தன்னுடைய பேச்சைத் துவங்கும் போதே, “"இது வெறும் கட்சி விழா மட்டுமல்ல. இது நமது குடும்ப விழா - அப்படித்தான் இதைப் பார்க்கிறேன். இந்த இயக் கம் எனக்கு என்ன கொடுத் தது என நினைக்காமல் இந்த இயக்கத்திற்காக நாம் என்ன செய்துள்ளோம் என இயங்கும் தொண்டர் களைக் கொண்ட இயக்கம் -இந்த இயக்கம். திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. அனைத்து தேர்தல்களிலும் வெற்றிபெற்றுள்ளது -இனி வரும் தேர்தலிலும் வெற்றிபெறுவோம். வெற்றி நம் கண்ணை மறைத்ததும் இல்லை, தோல்வியடைந்தாலும் துவண்டுபோகாமல் உழைக்கும் கூட்டம் இந்தக் கூட்டம். தொண்டர் களின் எதிர்பார்ப்பை நிறைவேற்று வோம். யாருக்கு என்ன தேவையோ அதை நிச்சயம் நிறைவேற்றித் தருவேன். வரும் 2024-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளையும் வெற்றிபெற தொடர்ந்து உழைக்கவேண்டும்''’என்று கேட்டுக்கொண்டார்.

dd

Advertisment

மேலும் பேசுகை யில், “"பொதுவாகவே அரசியலில் பொறுப்பு வழங்கினாலும், பொறுப்பு வழங்காவிட்டாலும் மனக் கசப்பு ஏற்படுகிறது. கட்சியின் உறுப்பினர் கள் யார் என் மார்பில் உதைத்தாலும் அதை நான் தாய், தந்தை ஸ்தானத்திலிருந்து என்று புரிந்துகொள் வேன். நீங்கள் யாராக இருந்தாலும், தி.மு.க. காரர்கள் என்ற ஒற்றைச் சொல்லுக்குள் அனைத்தும் அடங்கி விடும், எனவே எப்போதும் உங்களுக்கான கதவு திறந்திருக்கும், இதில் யாருக்கும் பாரபட்ச மில்லை. நீங்கள் சொல்வதைச் செய்யவும், நீங்கள் பேசுவதைக் கேட்கவும் நான் இருக்கிறேன்''’ என்று மனதுருக வைத்துவிட்டார்.

உறுப்பினர் பொதுக்கூட்டத்தை, மாநாடு போல நடத்துவது என்பது பிரமாண்டத் திற்கே பெயர்போன அமைச்சர் கே.என்.நேருவின் ஸ்டைல் என்றும் பல கழகத் தொண்டர்களும் பொய்யாமொழியை புகழ்ந்தபடி, கறி விருந்தில் மிக உற்சாகமாக கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்திற்கு அமைச்சர் கே.என்.நேருவுக்கு, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செல்போன் மூலம் அழைப்பு விடுத்திருந்த நிலையில், மழை வெள்ளப் பாதிப்புகளை சீர்செய்வதற்கான பணியில் சென்னையில் அமைச்சர் ஈடுபட்டிருந்தார். எனவே அன்று மாலை தெற்கு மாவட்ட அலுவலகத்திற்கு வருகிறேன் என்று கூறி, அதேபோல் அமைச்சர் கே.என்.நேரு தெற்கு மாவட்ட அலுவலகத்திற்கு நேரில் சென்று அங்குள்ள மினிட் புத்தகத்தில் கையெழுத்திட்டு, “பொதுக் கூட்டத்தை மாநாடுபோல மிகச் சிறப்பாக நடத்திட்ட தம்பி” என்று பாராட்டி யிருக்கிறார்.

பிரமாண்டத்திற்கு பெயர்போனவரிடமிருந்து இந்த வாழ்த்துகளைப் பெறுவது அன்பில் மகேஷுக்கு மட்டுமல்லாமல், தெற்கு மாவட்ட கழகத்துக்கே கொஞ்சம் கூடுதல் மகிழ்ச்சியைத் தந்திருக்கிறது.