மியான்மரில் நடந்துவரும் ராணுவ ஆட்சியில், தேசிய ஜனநாயக லீக் கூட்டணி யின் தலைவர் ஆங் சான் சூகி, வீட்டுக் காவலில் சிறை வைக்கப்பட்டார். அவர்மீது, ராணுவத்துக்கு எதிராகக் கிளர்ச்சியைத் தூண்டியது, ராணுவத்தின் அலுவல் ரீதியான சட்டங்களை மதிக்காதது உள்பட பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு, மியான்மர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றுவருகிறது. கடந்த டிசம்பர் மாதத்தில், கொரோனா விதிமுறை களை மீறிய குற்றத்திற்காக 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டி ருந்தது. இந்நிலையில், வாக்கி டாக்கி கருவிகளைச் சட்டவிரோதமாக இறக்குமதி செய்த குற்றச் சாட்டில் மேலும் 4 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டு, அதில் 2 ஆண்டு தண்டனைக்காலம் குறைக்கப்பட்டு, மொத்தம் 6 ஆண்டுகள் சிறையிலிருக்க வேண்டுமென்று உத்தரவிடப் பட்டுள்ளது.

bb

தண்டனையில் கூட தள்ளுபடி கொடுக்க ஆரம்பிச்சாச்சா?

Advertisment

bb

செர்பியாவைச் சேர்ந்த டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச், உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரராக உள்ளார். இவர், ஏற்கனவே 9 முறை ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியை வென்றுள்ள நிலையில், ஜனவரி 17-ம் தேதி தொடங்கும் ஆஸ்திரேலிய ஓபனில் கலந்துகொள்வதற்காக ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகருக்கு விமானத்தில் வந்தவரை, கொரோனா தடுப்பூசி போடப் படவில்லை என்ற காரணத்தைக் கூறி விசாவை ரத்து செய்து, ஆஸ்தி ரேலியாவுக்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தியது. உடனே, ஆஸ்திரேலிய அரசாங்கத்துக்கு எதிராக மெல்போர்ன் நீதிமன்றத்தில் ஜோகோவிச் சார்பாக வழக்கு தொடுக்கப்பட்டது. கடந்த டிசம்பரில் ஜோகோவிச் சுக்கு எவ்வித பெரிய நோய்த் தாக்குதலும் இல் லையென்ற பரிசோதனை முடிவுகளை நீதிமன்றத்தில் சமர்ப்பித்ததையடுத்து, அவரது விசா ரத்துக்கு தடை விதித்தது நீதி மன்றம். எனவே அவர் ஆஸ்திரேலிய ஓபனில் கலந்துகொள்வது உறுதியாகியுள்ளது.

Advertisment

தகுதிப்போட்டியில் வென்றுவிட்டார் சாம்பியன்!

nn

த்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில், "தர்ம பாராளு மன்றம்' என்ற பெயரில் இந்து அமைப்புகள் நடத்திய மூன்று நாள் மாநாட்டில், மதத் துவேஷத்தை வெளிப்படுத்தும் தீவிரவாதப் பேச்சுக்களை இந்து சாமியார்கள் பலரும் பேசி னார்கள். அந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க. தலைவர்கள் சிலரும் கலந்துகொண்டனர். அந்நிகழ்ச்சி யில், இஸ்லாமியர்களுக்கு எதிராகவும், முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு எதிராகவும் மிகக்கொடூரமான முறையில் பேசிய பேச்சுக்களுக்கு இந்தியா முழுவதும் எதிர்ப்புக் கள் எழுந்தன. ஆனால், பா.ஜ.க. முன்னணி தலைவர்களோ, உத்தரப்பிரதேச முதல்வரோ எவ்வித கண்டனத்தையும் தெரிவிக்கவில்லை. சமீபத்தில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த உத்தரப் பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா விடம், அதுகுறித்து கேள்வியெழுப்பப் பட்டதும், "இந்து மத தலைவர்களுக்கு அவ்வாறு பேச உரிமை இருக்கிறது'' என்றெல்லாம் வன்முறைப் பேச்சுக்களை ஆதரித்து கருத்து சொன்னவர்... ஒருகட்டத்தில் கடுப்பாகி, மைக்கைக் கழற்றிக் கொடுத்து பாதியிலேயே கிளம்பிவிட்டார்.

இவரு அவங்களவிடப் பெரிய கோவக்காரரா இருப்பாரு போலயே!

bb

ர்நாடக மாநிலம் ரட்டிஹள்ளி நகரைச் சேர்ந்த வாசிம் ஹசரத்சாப் முல்லா என்ற நபர், ஹெடுகொண்டா கிராமத்திலுள்ள கனரா வங்கி கிளையில் வங்கிக்கடனுக்கு விண்ணப்பித்திருக்கிறார். ஆனால் அவருடைய சிபில் ஸ்கோர் மதிப்பு குறைவாக இருந்ததால் அவரது விண் ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட வில்லை. இதனால் கோப மடைந்த முல்லா, கடந்த ஞாயிறன்று இரவில் அந்த வங்கிக்கு சென்று, அதன் ஜன்னலை உடைத்து உள்ளே பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார். கிட்டத்தட்ட 12 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்த நிலையில், சி.சி.டி.வி. கேமராப்பதிவு மூலம் தீ வைத்த முல்லாவை காவல்துறையினர் கண்டுபிடித்து சிறையில் தள்ளியுள்ளனர்.

லோனுக்காக ஒவ்வொருத்தரும் தீ வைக்க இறங்கினால் ஒரு வங்கிகூட தப்பாதே பாஸ்!

நாகர்கோவில் குருசடியைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியரான கே.பரந்தாமன் ஒரு மாற்றுத் திறனாளி. மாற்றுத்திறனாளிகள் கார் வாங்குவதற்கு ஜி.எஸ்.டி, சாலை வரி, டோல் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கவேண்டும் என்று மாற்றுத்திறனாளிகள் ஆணையர் நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளதன் அடிப்படையில் விண்ணப்பித்திருந்தார். ஆனால் அது, எலும்பியல் பிரச்சனை தொடர்பான மாற்றுத் திறனாளி களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், இவருக்கு பொருந்தாது என்றும் நிராகரித்துவிட்டது. இதை எதிர்த்து அவர் அளித்த புகாரை விசாரித்த மதுரை உயர் நீதிமன்றம், மனுதாரருக்கு வரும் 31-ம் தேதிக்குள் உரிய அனுமதி வழங்கவேண்டும் என்று உத்தரவிட்டது!

மாற்றுத் திறனாளியை ஏமாற்றுவதா?

nn

லைஞரால் திறந்து வைக்கப்பட்ட மதுரை மாட்டுத் தாவணி பேருந்து நிலையத்துக்கு கடந்த அ.தி.மு.க. ஆட்சியில், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பெயர் மாற்றம் செய்யப் பட்டு போர்டு வைத்ததோடு அந்த பேருந்து நிலை யத்தைக் கண்டுகொள்ளா மல் விட்டுவிட்டார்கள். ஐ.எஸ்.ஓ. தரச்சான்றெல் லாம் பெற்றிருந்த அந்த பேருந்து நிலையம், அ.தி.மு.க. ஆட்சியில் பராமரிப்பில்லாமல் விடப் பட்டதால், அந்த கட்டடம் முழுவதும் பழுதடைந்து உடைந்து விழக்கூடிய நிலைக்குத் தள்ளப்பட்டது. இந்நிலையில் மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், பேருந்து நிலையத்தைச் சீரமைக்க மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் உத்தரவிட்டு, சீரமைப்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

மாட்டுப்பொங்கலை முன்னிட்டு மாட்டுத்தாவணி பொலிவாகட்டும்!

-நாடோடி