மா.சந்திரசேகர், மேட்டுமகாதானபுரம்

ராமர் கோவில் கட்டப்பட்ட பிறகே இந்தியா சுதந்திரமடைந்ததாக மோகன் பகவத் கூறியது தேசத்துரோகம் என்கிறாரே ராகுல்?

mm

ராகுலின் கருத்து அர்த்தமுள்ளதுதான். மோகன் பகவத்தின் தர்க்கப்படி பார்த்தால், 2014-ல் ராமர் கோவில் கட்டப்படாததால் மோடியின் இந்தியா இருந்ததும் காலனி ஆட்சிதான். இன்னும் யாராவதொருவர் இந்தியா உலகப் பொருளா தாரத்தில் முதலிடம் வந்தால்தான் சுதந்திர நாடு. அதுவரை அடிமை நாடு எனலாம். அதற்காக இந்தியா சுதந்திரமில்லாத நாடாகிவிடுமா? உண்மையில் கோமியக் குடி சங்கிகளிடம் தள்ளப்பட்டு, இப்போதுதான் இந்தியா சுதந்திரக் களையிழந்து கிடப்பதுபோல் தோன்றுகிறது.

எஸ். கதிரேசன், பேர்ணாம்பட்டு

Advertisment

மும்பை அருகே சகோதரி மகள் திருமண வரவேற்பில் சாப்பாட்டில் விஷம் கலந்த தாய்மாமன் செயல் எதைக் காட்டுகிறது?

மனிதனின் சின்னத்தனத்தை. எழுத்தாளர் தி.ஜானகிராமனின் "பாயாசம்' என்றொரு சிறுகதையுண்டு. இதேபோன்ற கதைக்களம்தான்... தேடிப் படியுங்கள்.

மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்

Advertisment

உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகிவிட்டதே...?

சீனாவுக்கு ஆதரவாக உலக சுகாதார அமைப்பு செயல்படுகிறது என்று சொல்லி விலகியிருக்கிறார். தவிரவும், கோவிட்டைச் சரியாகக் கையாளவில்லை, உலக சுகாதார அமைப்பு சீனாவிடம் வசூலிக்கும் கட்டணமும், அமெரிக்கா விடம் பெறும் கட்டணமும் நியாயமின்றி இருக்கிறது என சில பல குற்றச்சாட்டுகள். உலக சுகாதார அமைப்புக்கு பெருந்தொகை கட்டும் நிறுவனம் அமெரிக்கா. அதன் வெளியேற்றம், ரஐஞ செயல்பாடுகளை கணிசமாகப் பாதிக்கும் என்பது உண்மைதான்.

நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி

இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர், தங்களின் ஆட்சிக் காலத்தில் 5,500 லட்சம் கோடியை இந்தியாவிலிருந்து எடுத்துச் சென்றுவிட்டனர் என ஆக்ஸ்பேம் அறிக்கை கூறியிருப்பது குறித்து?

ஆங்கிலேயர் வருகை இந்தியாவில் கணிசமான தீமைகளுக்கும் காரணமாக அமைந்தது. கணிசமான நன்மைகளுக்கும் காரணமாக அமைந்தது. ஆக்ஸ்பாம் சொல்வது ஒரு தோராயமான கணக்குதான். இங்கிலாந்துக்கு எடுத்துச்சென்ற பொருட்கள், பருத்தி, அரிசி, விளைபொருட்கள், தங்கம் போன்ற கணக்கில் வந்த பொருட்களை வைத்து கணக்கிடப்பட்டிருக்கும். உண்மையில் இந்தியாவை நிர்வகிக்க வந்த ஆங்கி லேய அதிகாரிகள் அவரவர் பங்குக்கு இந்தியாவிலிருந்து தம் சொந்த வீட்டுக்கு எடுத்துச்சென்ற பணம், விலைமதிப்புள்ள பொருட்கள் இன்னும்கூட அதிகமிருக்கலாம். ஆனால் ஆங்கிலேயர் வருகை நிகழாமல் சிதறிக் கிடந்த இந்தியா, ஒருங்கிணைந்து ஒரே தேசமாக உருப்பெற்றிருக்குமா என்றால் சந்தேகம்தான்.

அன்னூரார் பொன்விழி, அன்னூர்

ராகுல்காந்தியின் அரசியல் வியூகம்தான் என்ன?

பா.ஜ.க. ஆட்சியின் எதிர்மறைத் தாக்கங்களை எடுத்துக்கூறி அதனை ஆட்சியை விட்டு விலக்குவதுதான். அதற்காக இந்தியாவெங்கும் இருக்கும் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து, மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக் கட்டிலில் ஏறுவதுதான். ஆனால், பா.ஜ.க.வின் எதிர் வியூகம், அதன் பண பலம், ஒவ்வொரு முறையும் எதிர்க்கட்சி களின் ஒருங்கிணைவில் முழுமையின்மை என ஏதோவொன்று சறுக்கிவிடுகிறது. மத்தியில் ஆட்சியை விட்டு இறங்கி பத்து வருடங்களுக்கு மேலாகிறது. காங்கிரஸின் கோஷ்டி அரசியல் நாடு முழுமையும் முடிவுக்கு வராமலிருப்பதும் அதற்குப் பின்னடைவுதான்.

mm

அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பதவியேற்பு விழாவுக்கு பிரதமர் மோடி ஏன் செல்லவில்லை?

யாருக்குத் தெரியும்? ட்ரம்ப் அழைக்கவில்லையோ என்னவோ... அல்லது அமெரிக்காவின் கடுங்குளிருக்குப் பயந்து தொலைபேசியில் வாழ்த்துச் சொன்னதோடு நிறுத்திக்கொண்டாரோ! கூடவே, பிரிக்ஸ் நாடுகளுக்கு எல்லாம் 100 சதவிகித டேரிஃப் போடப்போவதாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார் ட்ரம்ப். அந்த ஆதங்கத்தில் ட்ரம்ப் பதவியேற்பு விழாவை மோடி புறக்கணித்து விட்டாரோ!

எஸ். நாகேந்திரன், புதுக்கோட்டை

சமூக வலைத்தளத்தில் படித்ததில் பிடித்தது?

இந்தியாவில் வரியோடு சேர்த்து சாம்சங் கேலக்ஸி எஸ்23 அல்ட்ரா செல்போனின் விலை 1,30,000. அதே போனை துபாயில் வாங்கினால் 81,000. வித்தியாசம் 50,000. (ஆப்பிள் ஐபோனுக்கும் இதே கதைதான்) அதனால் அந்த போனை இந்தியாவில் வாங்குவதைவிட மலிவுக் கட்டண விமானத்தில் ஏறி துபாய் வந்து வாங்கினால், இலவசமாக துபாயை சுற்றிப் பார்த்ததுபோலும் ஆச்சு. சாம்சங் கேலக்ஸியை குறைந்த விலையில் வாங்கியது போலும் ஆச்சு என்று பதிவிட்டிருக்கிறார், நியாயம்தானே!