தே.மாதவராஜ், கோயமுத்தூர்
இஸ்லாமியப் பெண்களுக்கு தலாக் கொடுத்தாலும் ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியிருப்பது குறித்து?
கணவன் கைவிட்டபின் வேலைக்குச் செல்லும் பெண்களின் நிலையையும், வேலை யில்லாத பெண்களின் நிலையையும் ஒப்பிட்டால், வேலைக்குச் செல்லாத பெண்களின் நிலை பரிதாபமானது. அதிலும் பிறந்த வீட்டில் பெரிய பின்புலமில்லாதபோது அவர்கள் மிச்சமுள்ள வாழ்க்கையை எப்படி நடத்துவார் கள்? மதத்தைக் கேடயமாக வைத்து பொறுப்பைத் தட்டிக்கழிக்க முடியாது. ஆகவே உச்சநீதிமன்றத் தீர்ப்போடு மாவலிக்கு இணக்கம்தான்.
நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி
ஓய்வுபெற்ற மூன்று மாதத்தில் மத்தியபிரதேச நீதிபதி பா.ஜ.க.வில் சேர்ந்திருப்பது குறித்து?
ரோஹித் ஆர்யாவைச் சொல்கிறீர்களா? அபிஜித் கங்கோபாத்யாயா, ரஞ்சன் கோகாய் என நீதிபதி பதவியிலிருந்து விலகியபின் பா.ஜ.க.வில் சேர ஆர்வம் காட்டும் நீதிபதி களுக்கு முன்னுதாரணம் இருக்கிறது. நீதி தேவதையின் கண்ணைத்தானே கட்டியிருக் கிறார்கள். நீதிபதிகளின் கண்களை அல்லவே. அரசுப் பொறுப்பிலிருப்பவர்கள், பதவி ஓய்வுபெற்று ஒரு வருடம் நிறைவடையாமல் எந்தக் கட்சியிலும் சேரக்கூடாது என எதிர்க்கட்சிகள் இணைந்து சட்டம் கொண்டுவர முயற்சிசெய்யலாம்.
வை.பாலசுப்ரமணியன், மன்னார்குடி
90% இந்தியர் கள் வாழ்க்கை நடத்த அல்லாடிக்கொண்டிருக்கும் போது 5,000 கோடி செலவில் அம்பானி வீட்டு திருமணம் நடப்பது முறையா?
அம்பானியின் சம்பாத்தியம், அவ ரது மகன் கல்யாணம், இருக்கிற கோமான் கொண்டாடுகிறான் என்று சொல்லிவிடுவார்கள். வேண்டுமானால், மகன் கல்யாணத்துக்கே 5,000 கோடி செலவிடும் நபருக்கு, அரசாங்கம் ஏன் லட்சக்கணக்கான கடன் தொகையை தள்ளுபடி செய்யவேண்டும் என உங்கள் தொகுதி எம்.பி.யின் மூலம் பாராளுமன்றத்தில் கேள்வியெழுப்ப வலியுறுத்தலாம்.
சி. கார்த்திகேயன், சாத்தூர்
காமராஜர் ஆட்சிக் காலம் பொற்காலம் என்கிறாரே கவர்னர் ஆர்.என். ரவி?
அதுசரி, காமராஜர் முதல்வராக இருந்த அதே காலகட்டத்தில்தான் மேலே ஜவஹர்லால் நேருவும் பிரதமராக இருந்தார். ஜவஹர்லால் நேருவின் ஆட்சிக் காலமும் பொற்காலம்தானா என ஆளுநரிடம் கேட்டுப் பாருங்கள், தனது பாராட்டுரையை அவசரமாக திரும்பப் பெற்றுவிடுவார்.
எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு
"பணத்திற்காகவே இந்தியர்கள் ரஷ்ய ராணுவத்தில் சேர்ந்தனர்' என்று ரஷ்ய துணைத் தூதர் ரோமன் பாபுஷ்கின் கூறியுள்ளாரே?
அதிலென்ன சந்தேகம், ஒருவன் சொந்த நாட்டு ராணுவத்தில் சேரும்போதே, தேசப்பற்று இருந்தாலும் ஊதியத்தையும் எதிர்பார்க்கிறான்தானே. பணம் மீதான விருப்பமில்லாமல், அயல்நாட்டு ராணுவத்தில் வந்து சேர் வானா? ஆனால், போர் உதவியாளர்கள், நல்ல சம்பளம் என்ற ரேஞ்சில் இந்தியர்களை வேலைக்கமர்த்தியிருக்கிறது ரஷ்யா. போர்முனையில் ஆள் பற்றாக்குறை ஏற்படும்போது, துப்பாக்கியை கையில் கொடுத்து போரிடச் சொல்லியிருக்கிறது. நான் உதவியாளன்தானே என்று கேட்டால், நீங்கள் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தில் நெருக்கடியில் துப்பாக்கி ஏந்திப் போரிடவும் வேண்டும் என்றொரு ஷரத்து இருக்கிறது என்று சொல்லி வற்புறுத்தியிருக்கிறது. பணத்துக்கு ஆசைப்பட்டு ரஷ்ய ராணுவத்தில் சேர்ந்தவர்கள் மீதும் தப்பு இருக்கிறது. பணத்திற்காகவே இந்தியர்கள் ராணுவத்தில் சேர்ந்தனர் என்று பூசிமெழுகும் தூதரின் கருத்திலும் தவறு இருக்கிறது.
என். இளங்கோவன், மயிலாடுதுறை.
பதின்மூன்று இடங்களில் நடந்த இடைத் தேர்தலில் பத்து இடங்களில் இந்தியா கூட்டணி வெற்றிபெற்றுள்ளதே?
இடைத்தேர்தலில் மட்டும் பெரும்பான்மை பெற்றால் போதாது. மக்களவைத் தேர்தலிலும் பெரும்பான்மை பெற்றால்தான் பிரதமர் நாற்காலி வசமாகும். ஆனால், இதன்மூலம் மாநிலங்களவையிலும் பா.ஜ.க.வின் பெரும்பான்மை சரிந்திருக்கிறது.