ஜெ. மணிகண்டன், பேரணாம்பட்டு
பள்ளிகளில் உடற்கல்வி பாடவேளைகளை மற்ற பாட ஆசிரியர்கள் கடன் வாங்கா தீர்கள். மாணவ- மாணவி கள் விளையாட வாய்ப்புக் கொடுங்கள் என உதயநிதி வேண்டுகோள் விடுத்துள்ளாரே...?
நல்ல விஷயம்தான். "ஓடி விளையாடு பாப்பா' என்றான் பாரதி. குழந்தை மண்டியிட்டு நடந்து எழுந்து நிற்கும்போதே பாலர் பள்ளியில் சேர்க்குமளவுக்கு வந்துவிட்டோம். மாணவப் பருவத்தில் விளையாட வில்லை என்றால் நாம் எப்போது விளை யாடப் போகிறோம்? ஆசிரியர்கள் மட்டு மில்லை, பெற்றோரே கூட விடுமுறை நாட்களில் குழந்தைகளை விளையாட ஊக்கப்படுத்தலாம்.
நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி
"மோடி யார் உதவியும் இல்லாமல் தேர்தல் விண்ணப் பத்தை பூர்த்தி செய்தால், நான் அரசியலைவிட்டே விலகு கிறேன்' என சுப்ரமணியசாமி கூறியிருக்கிறாரே?
சமயங்களில் எதிர்க் கட்சிக்காரர்களைவிட மோடியை கூர்மையாகக் காயப்படுத்திவிடுகிறார் சுப்பிரமணியசாமி. அவர் வகிக்கும் பிரதமர் பதவியை மனதில் நினைத் தாவது கொஞ்சம் பார்த்து விமர்சனம் செய்திருக்கலாம் சாமி.
பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர்
எது குட்மார்னிங்? எது குட்நைட் சார்?
எத்தனை கஷ்டநஷ்டங்கள் இருந்தாலும் நாம் எழுந்துகொள்ள வாய்ப்பு கிடைக்கும் அத்தனை காலைகளுமே குட்மார்னிங்தான். எத்தனை துன்ப துயரங்கள் துரத்தினாலும், தூக்கம் வராமல் புரண்டு தவிக்காத அத்தனை இரவுகளுமே குட்நைட்தான்.
வாசுதேவன், பெங்களூரு
உத்தரகாண்ட் சுரங்க விபத்து..?
தொழிலாளிகளின் மீது கவிந்த துரதிர்ஷ் டம். கிட்டத்தட்ட 10-வது நாளாக மீட்புப் பணிகள் நடக்கின்றன. 200 மணி நேரம் சுரங்கத்தில் மாட்டிக்கொண்ட தொழிலாளியின் மனநிலை எப்படி இருக்கும்? உலக வல்லரசுகளான அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு அடுத்தபடியாக பெரிய நாடாக காட்டிக்கொள்வதில் ஆர்வம் காட்டும் இந்திய அரசியல்வாதிகள், செயல்பாட்டிலும் அவர்களைப் போல வேகம் காட்டவேண்டும். அதை விடுத்து மீட்புப் பணியைப் பார்வையிட வந்த நிதின்கட்கரி, புஷ்கர்சிங் தமி ஆகியோருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுப்பதில் அக்கறை காட்டியுள்ளனர்.
அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை
"பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் மூடப்பட்டு கள்ளுக்கடைகள் திறக்கப்படும்' என்று அண்ணாமலை கூறியிருப்பது பற்றி?
ஏன் அண்ணாமலை கஷ்டப்படுகிறார். பக்கத்தில் இருக்கும் பாண்டிச்சேரியில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி ஆட்சிதானே நடைபெறுகிறது. உடனே மதுக்கடைகளை மூடிக் காட்டட்டும்!
மு.முஹம்மதுரபீக் ரஷாதீ, விழுப்புரம்
ஆடு நனைகிறது என்று ஓநாய் அழும் கதையைக் கூற முடியுமா...?
தான் ருசித்து ஏப்பம் விடவேண்டிய ஆட்டின் மீதான ஓநாயின் பரிவு உண்மையானதாக இருக்குமா என்பதுதான் அந்தப் பழமொழியின் பொருள். அப்படிப் பார்த்தால் மக்கள் நலம் மீது அக்கறை காட்டும் அரசியல்வாதிகள் பலரின் அக்கறை இத்தகையதுதான். யாருடையது ஓநாயின் பரிவு... யாருடையது உண்மையான பரிவு என முடிவெடுக்கும் பொறுப்பை உங்களிடமே விட்டுவிடுகிறேன்.
அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை.
கட்சியை உடைத்து தேர்தல் ஆணையத்திலும், நீதிமன்றத்திலும் மோதும் சரத்பவாரும், அஜித்பவாரும் ஒன்றாக தீபாவளி கொண்டாடியிருக் கிறார்களே... இது என்ன நாடகம்?
மாமன் -மருமகனிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும். ஆனால் இத்தகைய அணுகுமுறைகள் மக்களிடம் சந்தேகத்தை ஏற்படுத்தும். இரு தரப்புக்கும் பின்னடைவை ஏற்படுத்தும் என்பதை உள்ளுக்குள் உணர்ந்தால் சரி.
ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்
திராவிட அரசியல், திராவிட மாடல் ஆட்சி என ஸ்டாலின் அடிக்கடி பேசிவருவது மக்களைச் சலிப்படையச் செய்கிறது என்கிறாரே அண்ணாமலை?
தி.மு.க.வினரைக் கேட்டால் அகண்ட பாரதம், இந்துத்துவம் என்று அண்ணாமலை பேசுவது மக்களைச் சலிப்படையச் செய்கிறது என்பார்கள். மக்கள் சலிப்படைந்தார்களா இல் லையா என்பதைக் கண்டறிய தேர்தல் இருக்கிறது.
த.சத்தியநாராயணன், அயன்புரம்
அகில இந்திய காங்கிரஸின் செல்வாக்கு வளர்ந்து வருகிறதா?
சமீபகாலமாக, பா.ஜ.க. அதிருப்தியாளர்கள் பெருவாரியாக காங்கிரஸுக்கு தாவும் கட்சிகள் வளர்ந்து வருவதாகத்தான் காட்டுகின்றன. கொஞ்சம் பொறுங்கள், ஐந்து மாநில ரிசல்ட்டைப் பார்த்து விட்டுச் சொல்லிவிடுகிறேன்.