எஸ். அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்

பா.ஜ.க.வின் வங்கிக் கணக்கில் ரூ.3,596 கோடி இருப்புத் தொகையாக உள்ளதாமே..?

பா.ஜ. கட்சியின் வங்கிக் கணக்கிலுள்ள தொகை தெரிந்து என்ன பயன்? கட்சியின் பெருந்தலைகள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வைத்திருக்கும் வங்கிக் கணக்கிலுள்ள தொகைகளும், நேரடியாகவும் பினாமியாகவும் சேர்த்திருக்கும் சொத்துக்கள் பற்றிய தொகை தெரியவந்தால் நன்றாக இருக்கும்.

mm

Advertisment

அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை.

ரஷ்யாவுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்த வாக்னர் குழு தலைவர் விமான விபத்தில் உயிரிழந்தது விதியா...… சதியா?

அமெரிக்காவுக்குச் சமமான வல்லரசாகக் கோலோச்சிய ரஷ்யா, தன் புகழின் தேய் பிறைக் காலத்தில் இருந்தாலும்கூட அது இன்னும் வல்லரசுதான். அத்தகைய வல்லரசு வளர்த்துவிட்ட தனியார் படையொன்று, அந்த அரசையே எதிர்த்துக் கலகம் செய்வது தவறான அணுகுமுறை. எவ் கேனி பிரிகோசின், என்ன தான் அதன்பிறகு சமா தானமாகப் போனா லும்கூட, பிரிகோசின் தன் கலகக் குரலை எழுப்பும்போதே அவர் ஆயுள் முடிவுக்கு வந்துவிட்டது. அது தலைப்புச் செய்திகளில் இடம்பெறுவதற்கு கொஞ்சம் அவகாசம் எடுத்திருக்கிறது. அதை இயற்கையான விபத்து என விரல்சூப்பும் சிறுவன் கூட நம்பத் தயங்கவே செய்வான்.

சி.கனகராஜ், கூடுவாஞ்சேரி

இது துரோணாச்சாரியார்கள் காலமில்லை; ஏகலைவன் காலம் என்கிறாரே முதலமைச்சர் ஸ்டாலின்?

நாமும் ஏகலைவர் களின் காலம் வரவேண் டும்தான் எனவே விரும்புகிறோம். ஆனால் நீட் தேர்வு, ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கை உள் ளிட்டவை… இன்னும் துரோணோச்சார்யார்களின் காலமே நீடிக்கிறது என்பதையே தெரிவிக்கின்றன. அர்ஜூனர்களை வைத்து துரோணோச்சார் யார்களை வீழ்த்துவது எப்படி என்பதை முதல் வரும் அவர் தரப்பிலான கூட்டணியும் ஆலோ சித்து செயற்படுத்தினால்தான் காலம் மாறும்.

நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி

கவர்னர்கள் ரப்பர் ஸ்டாம்ப் அல்ல என தமிழிசை கூறியிருக்கிறாரே?

அது சரிதான். அது எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மட்டுமா… இல்லை பா.ஜ.க., அதன் கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களிலுமா என் பதை ஆளுநர் தமிழிசை தெளிவுபடுத்தவேண்டும்.

மல்லிகா அன்பழகன், சென்னை

"ஜெய்பீம்', "கர்ணன்', "சார்பட்டா பரம்பரை' போன்ற படங்களுக்கு எந்த தேசிய விருதும் கிடைக்காததற்கு பி.சி.ஸ்ரீராம் போன்றோர் கண்டனம் தெரிவித்துள்ளது பற்றி?

எப்போதும் தேசிய திரைப்பட விருதுகளுக் கான தேர்வுக் குழுவில் ஆளும்கட்சியின் சார்பான வர்கள் சிலர் இடம்பெறுவார்கள். அவர்கள் ஆளும்கட்சியினருக்கு வேண்டிய சிலருக்கு விருதுகள் கிடைக்குமாறு பார்த்துக்கொள்வார்கள். தற்போதைய தேர்வுக் குழுவில் இடம்பெற்றவர்கள், முழுக்க முழுக்கவே ஆளுங்கட்சி சார்பானவர்களாக இருப்பார்கள் போலிருக்கிறது. ஆளுங்கட்சியின் கொள்கைகளுக்கு எதிரான கொள்கை, கருத்துக்கள் கொண்ட படங்களை கவனமாகச் சல்லடையிட்டி ருக்கிறார்கள். இனி உங்களுக்கு தேசிய விருது வேண்டுமென்றால், இட ஒதுக்கீட்டு எதிர்ப்பைப் பேசுவது, வேதங்களின் பெருமையைப் பேசுவது, ஆங்கிலேய, மொகலாய ஆட்சிக் காலத்தில்தான் இந்தியாவின் மகோன்னதம் சரிந்துபோனது என்ற கருத்தில் படமெடுக்க முயற்சித்துப் பாருங்கள்! இல்லையென்றால் சாவர்க்கார், கோட்சே போன்றோரை சரித்திர புருஷர்கள் என்று காட்டும் படி படமெடுங்கள்... தேசிய விருது நிச்சயம்!

பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர் -தேனி

இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் அங்கீகாரத்தை உலக மல்யுத்தக் கூட்டமைப்பு ரத்து செய்தது பற்றி?

பாலியல் புகாரில் தொடர்புடைய பிரிஜ் பூஷன் மல்யுத்தக் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகியதும் தேர்தல் நடத்தச் சொன்னது உலக மல்யுத்தக் கூட்டமைப்பு. இந்திய மல்யுத்தக் கூட்டமைப்புக்கு எங்கிருந்து அழுத்தமோ, தேர்தலைத் தள்ளிவைத்தபடியே வந்தது. இந்நிலையில்தான் இந்த அங்கீகார ரத்து. மறுபடி இந்திய மல்யுத்தக் கூட்டமைப்புக்கு அங்கீகாரம் வரும்வரை இந்தியா சார்பில் வெற்றிபெறும் வீரர்களுக்கு இந்திய தேசியக் கொடியைப் போர்த்தமுடியாது. நம் தேசிய கீதம் இசைக்கப்படாது. அவர் தனியார் வீரராகவே கருதப்படுவார். தனி ஒரு நபருக்காக இந்தியாவின் கௌரவத்தைக் காவுகொடுத்திருக்கிறார்கள் அரசியல்வாதிகள்!

பிரகாஷ், அரண்மனைப்புதூர்.

மாணவர்கள் தற்கொலைச் சம்பவங்கள் வாடிக்கையாக நடக்கும் ஒன்றுதான், அதை அரசியலாக்கக்கூடாது’என்கிறாரே எல்.முருகன்?

கட்சி அரசியலுக்குள் நுழையும்போது, தாங்கள் சார்ந்த கட்சியை நியாயப் படுத்த, இதுபோன்று மனசாட்சியற்ற, மனிதாபி மானமற்ற தர்க்கங்களை அரசியல்வாதிகள் கையிலெடுப்பது ஒன்றும் புதிதில்லை.