தே.மாதவராஜ், கோயமுத்தூர் 45

காலையில் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கிறார், மாலையில் ஸ்டாலின் பா.ஜ.க. வை பொறிந்து தள்ளிவிட்டாரே?

அரசியல் தட்பவெப்பம் என்பது அப்படித்தான். கல்யாண வீடு என்றால் அட்சதை தூவ வேண்டும். கருமாதி வீடு என்றால் ஒப்பாரி வைக்க வேண்டும். காலையில் அட்சதை தூவினோமே, மாலையில் ஒப்பாரி வைக்கலாமா என்று யோசிக்கக்கூடாது. செய்ய வேண்டியதை செய்ய வேண்டிய நேரத்தில் செய்வதுதான் அரசியல் இலக்கணம்.

நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி

Advertisment

பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், உச்சநீதி மன்ற நீதிபதி குழுவினர்தான் தேர்தல் ஆணையரை தேர்வு செய்ய வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து?

seshan

தேர்தல் ஆணையம் என்ற ஒன்றே டி.என். சேஷன் தலைமைத் தேர்தல் ஆணையராக பதவியேற்ற பிறகுதான் வாக்காளர்களுக்குத் தெரியவந்தது. அதுவரை, அது மத்திய அரசின் கட்டளைகளை நிறைவேற்றும் அமைப்பு என்றுதான் பலரும் நினைத்திருந்தார்கள். அது தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பு என்பதை டி.என்.சேஷன் தன் செயல்கள் மூலம் நிரூபித்தார். அதனைத் தொடர்ந்து தேர்தல் விதிமுறைகள் பலவும் உருவாக்கப்பட்டன. சீர்திருத்தப்பட்டன. இது அரசியல் கட்சிகளுக்கு, குறிப்பாக ஆளுந்தரப்புக்கு அச்சுறுத்தலாக இருந்ததால், தங்களுக்குத் தோதான -வாகான அதிகாரிகளைத் தலைமைத் தேர்தல் ஆணைய ராகவும், பிற ஆணையர்கள், அதிகாரிகளாகவும் நியமிப் பது வழக்கமானது. குஜராத் மாநிலத்திற்கு தேதி அறிவிக்க வேண்டிய தேர்தல் ஆணையம், பிரதமர் மோடி வெளி நாட்டு சுற்றுப்பயணத்தில் இருந்ததால், அவர் திரும்பி வரும்வரை, அவரது மாநில சட்டமன்றத்திற்கான தேர்தல் தேதியை அறிவிப்பதில் காலதாமதம் செய்தது. அதன்பின், வசதியான முறையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இதுபோன்ற நிறைய உதாரணங்களை சொல்ல முடியும். பா.ஜ.க. மட்டுமல்ல, காங்கிரஸ், அ.தி.மு.க., தி.மு.க. என ஒன்றிய -மாநில அரசு களுக்கு ஆதரவாக செயல்படும் தேர் தல் ஆணையர் களை மக்களும் பார்த்துக்கொண்டு தான் இருக் கிறார்கள். எனவே தான், தன்னாட்சி மிக்க அமைப்பான தேர்தல் ஆணை யத்தின் தலை மைப் பொறுப் பில் நியமிக்கப்படுபவர் ஒருசார்பாக செயல்படாத வகையில் கடிவாளம் போடப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. வழக்கும் தொடரப்பட்டது. அதில்தான் பிரதமர், எதிர்க் கட்சித் தலைவர், உச்சநீதிமன்ற நீதிபதி அடங்கிய குழுவின ரின் பரிசீலனை -பரிந்துரை அடிப்படையில் தலைமைத் தேர்தல் ஆணையர் தேர்வு செய்யப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது ஒரு மாற்றத்தின் தொடக்கம். இது நடைமுறைக்கு வரவேண்டும். அதன்பிற கும், தேர்தல் ஆணையர் நியமனத்திலும், தேர்தல் நடை முறையிலும் நிறைய மாற்றங்களைச் செய்தாக வேண்டும்.

Advertisment

இரா.அருண்குமார், வாணரப்பேட்டை -புதுச்சேரி

"பதவியை பார்த்து பல் இளிப்பவன் அல்ல நான்' என்று திருமாவளவன் கூறியிருப்பது பற்றி...?

tt

சனாதனம், மதவாதம் ஆகியவற்றை எதிர்ப்பதில் உறுதியாக இருக்கிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன். 2001ல் தி.மு.க. சின்னத்தில் மங்களூர் தொகுதியில் வெற்றி பெற்றார். பின்னர், கூட்டணியிலிருந்து விலகவேண்டிய நிலை வந்தபோது, எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா செய்தார். பதவிக்கு பல் இளிக்கக் கூடாது எனக் கருதும் தலைவர் அவர். 22 ஆண்டுகளுக்கு முந்தைய அரசியல்சூழலும், தொண்டர்களின் மனநிலையும் அப்படியே இருப்பதில்லை. இது அவருக்கு மட்டுமல்ல, அனைத்துக் கட்சிகளுக்குமே!

மு.முஹம்மதுரபீக் ரஷாதீ, விழுப்புரம்

"தேர்தல் ஜனநாயக முறையில் நடைபெறவில்லை. பணநாயக முறையில்தான் நடைபெற்றது' என்கிறாரே வாசன்?

தேர்தலில் ஜனநாயகம் -பண நாயகம் என்பதெல்லாம் இருக்கட் டும். தேர்தல் களத்தில் வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் இருக்கிறதா?

எம்.செந்தில்குமார், சென்னை-78

"மத்தியில் எதிர்க்கட்சி இல்லாத பா.ஜ.க., மாநிலத்தில் எதிர்க்கட்சி இல்லாத தி.மு.க., இருவரும் அதிர்ஷ்டசாலிதானே?"

gg

மத்தியில் வலிமையான எதிர்க்கட்சி இல்லை. நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் அப்படி. ஆனால், மாநிலத்தில் வலிமையான எதிர்க்கட்சியை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். ஆனால், அந்தக் கட்சியோ மக்களின் தீர்ப்புக்கு மதிப்பளிக்காமல், தன் தோளில் ஏறி உட்கார்ந் திருக்கும் கட்சிக்கு கால் பிடித்துவிடும் வேலையை செய்து கொண்டிருக்கிறது. மோடிக்கு வாய்த்தது அதிர்ஷ்டம். ஸ்டாலினுக்கு அமைந்திருப்பது ஜனநாயக விநோதம்.

டி.ஜெயசிங், கோயம்புத்தூர்

சீமானின் பேச்சுக்கு ஈரோடு மக்கள் பாடம் புகட்டி விட்டார்கள்தானே?

seeman

திரிஷா இல்லைன்னா நயன்தாரா என்பதுபோல, ஈரோடு இல்லையென்றால் இன்னொரு தொகுதி. சீமானுக்கு தொகுதியல்ல, பேச்சுதான் இலக்கு.

ஏ.எஸ். நடராஜன், சிதம்பரம்-6

மு.க. ஸ்டாலினின் தனித்தன்மையாக தாங்கள் கருதுவது என்ன?

தனக்குரிய பாதையில், தோழமைக் கட்சிகளை அரவணைத்து உறுதியாகப் பயணிப்பது.