ப. வசந்தி, இடைகால்

சமீபத்தில் மாவலியை அதிரவைத்த தகவல் எது?

மக்களுக்கு தரமான நீர் வழங்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 120-வது இடத்தில் இருக்கிறது. இந்த பட்டியலில் மொத்தமுள்ள நாடுகளே 122தான். இந்தியாவில் குறிப்பாக உ.பி., பீகார், மேற்குவங் காளம், அஸ்ஸாம் மாநிலங்களில் பெரும்பாலான மாவட்டங்களின் நிலத்தடி நீரில் ஆர்சனிக் கலந்துள்ள தாம். ஆர்சனிக் கலந்த நீரைக் குடிப்பதால் சிறுநீரகச் செயலிழப்பு, புற்றுநோய் அபாயம், சரும நோய்கள், கல்லீரல் பாதிப்பு என பல அபாயகரமான நோய்கள் வருமென்கிறார்கள். சுதந்திரம் பெற்று முக்கால் நூற்றாண்டு கடந்த பிறகும், மனித வாழ்வுக்கு அடிப்படையான நல்ல குடிநீர் தர வக்கில்லாத அர சியல்வாதிகள், இந்தியாவை வல்லரசாக்குவதாகத் தொடர்ந்து மார்தட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி.

Advertisment

நிதிஷுக்கு பா.ஜ.க. உதவினால் காங்கிரஸ் நிலைதான் ஏற்படுமென பிரசாந்த் கிஷோர் கூறியிருக்கிறாரே?

பா.ஜ.க.வோடான உறவை நிதிஷ்குமார் தொடர்ந்தால் பீகாரில் நாளுக்கு நாள் நிதிஷின் கட்சி பலவீனமடை யும். ஏற்கெனவே, பத்து வருடங்களுக்கு முன்பு பீகா ரில் பெரிய தாக்கமில்லாத கட்சியாக இருந்த பா.ஜ.க. இப்போது மூன்றாவது பெரிய கட்சியாக வளர்ந்து விட்டது. எனவே ஜாக்கிரதையாக இருக்கவேண்டி யது பா.ஜ.க. இல்லை, நிதிஷ்தான்.

வாசுதேவன், பெங்களூரு

Advertisment

கொல்கத்தாவில் ட்ராம்கள் சேவை முடிவுக்கு வருகிறதே?

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகருக்கு அடுத்தபடியாக, ட்ராம் வண்டியை இயக்கும் ஒரே நகரம் கொல்கத்தாதான். இந்தியாவில் ஆங்கிலேயர் காலத்தில் நடைமுறைக்கு வந்த ட்ராம் வண்டி, 2023-ல் கிட்டத்தட்ட ஒன்றரை நூற்றாண்டைக் கண்டு விட்டது. 1970-ல் 52 வழித்தடங்களில் இயங்கிய ட்ராம், இப்போது வெகுசில வழித்தடங்களில் மட்டுமே இயங்குகிறது. என்றாலும் சிலர் நீதிமன்றத்தை அணுகி, கொல்கத்தாவின் அடையாளங்களில் ஒன்று ட்ராம். அதனை முடிவுக்குக் கொண்டுவரக்கூடாது என வழக்குத் தொடுத்திருக்கிறார்கள்.

ஆர்.ராஜ்மோகன், முட்டியூர்

தி.மு.க. ஆட்சியில் அதிகாரம் படைத்தவர் களுக்கு மட்டுமே சூரிய ஒளி மிளிர்கின்றது. எங்களைப் போன்ற தமிழக மக்களுக்கு சூரிய கிரகணம்தான் தெரிகின்றது என்கிறாரே பா.ஜ.க. தலைவர்?

வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் இந்தியா ஒளிர்கின்றது என விளம்பரம் செய்யவில்லையா? ஆனால் அடுத்துவந்த தேர்தலில் மக்கள் இந்தியா ஒளிர்வதாக நம்பவில்லை என வாக்குச் சீட்டின் மூலம் தெரிவித்தார்கள். அதுபோல விடியல் ஆட்சியா இல்லையா என்பதை தமிழக மக்கள் 2026 தேர்தல் களத்தில் தீர்ப்பளிப்பார்கள். தி.மு.க. ஆட்சிக் காலத்தில்தான் பா.ஜ.க. தலைவருக்கு, லண்டனில் போய் படிக்கும் அதிர்ஷ்டமெல்லாம் வாய்த்திருக் கிறது. பிறகெதற்கு முணுமுணுக்கிறார்?

எஸ். அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்

இந்தியாவில் வேலைவாய்ப்பு வழங்குவதில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக மத்திய அரசின் புள்ளியியல் அமைச்சகத்தின் ஆண்டு ஆய்வறிக்கை தெரிவித்துள்ளதே?

அதற்காக சந்தோஷப்படவெல்லாம் முடியாது. இந்தியாவில் முன்னெப் போதும் இல்லாத அளவுக்கு வேலையில்லாத் திண்டாட்டம் நிலவுகிறது. மாநிலத் தின் வளர்ச்சி நாட்டின் வளர்ச்சிக்குத் துணைசெய் வதைப் போலவே, ஒன்றிய அரசின் சறுக்கல் மாநில அரசின் பொருளாதாரத்திலும் எதிரொலிக்கும். ஒன்றிய அரசில் வேலையில்லாத் திண்டாட்டம் நெருக்குகிறதென்றால் சற்று முன்பின்னாக தமிழகத்தையும் நெருக்கத்தான் செய்யும். தேசிய அளவிலான வேலையில்லாத் திண்டாட்டத்துக்கு தீர்வுகாண மத்தியில் ஆட்சியிலிருப்பவர்களை எதிர்க்கட்சிகளும், மக்களும் நெருக்கவேண்டும்.

வண்ணை கணேசன், கொளத்தூர்

அரியானா மாநில காங்கிரஸில், தேர்தலில் போட்டியிடும் அனைவருமே முதல்வராக வேண்டு மென ஆசைப்படுவதாக மோடி குற்றம்சாட்டுகிறாரே?

அது வேறொரு கட்சியின் உட்கட்சிப் பிரச் சனை. அதில் மோடிக்கென்ன அக்கறை? தேர்தல் முடிந்து தேர்தலில் பெரும்பான்மை பெற்ற பிறகு யாரை முதல்வராக்குவது என்பதை காங்கிரஸ் பார்த் துக்கொள்ளும். அரியானா மாநில பா.ஜ.க.வில் சீட்டுக் கிடைக்காத பலர் சுயேட்சையாகவும், காங்கிரஸ் கட்சியிலும் சேர்ந்து போட்டியிடுகிறார்களே அதைப் பற்றி கொஞ்சம் மோடி பேசவேண்டி யதுதானே!

MA

திலகர் ஈஸ்வரன், தேவூர்மேட்டுக்கடை

அரசியல் கருத்துக்களைச் சொல்வதில் நடிகர் பிரகாஷ்ராஜ் அதிரடி காட்டுகிறாரே?

நமது அரசியல் சூழலில் பலரும் பிரச்சினைக்குப் பயந்து குரலற்றவர்களாகவே தொடர்கின்றனர். அதிலும் செலிபிரிட்டி என்றால் தங்கள் துறை தவிர்த்து பிறவற்றைப் பற்றி பேசா மடந்தையாகி விடுகின்றனர். பிரகாஷ்ராஜ், துணிச்சலுடன் பேசுகிறா ரென்றால் பேசிவிட்டுப் போகட்டுமே! அவர் பேசு வதில் முரணிருந்தால் சுட்டிக்காட்டுங்கள்... விவாதிப்போம்!