எஸ். இளையவன், சென்னை

விஜயகாந்தால் சாதிக்க முடியாததை விஜயால் சாதிக்க முடியுமா?

mm

விஜயகாந்தா... விஜய்யா என்பது இங்கு விஷயம் இல்லை. ஒவ்வொரு கட்டத் திலும் என்ன வியூகம் வகுக்கிறார்கள். ஒவ்வொரு வாய்ப்பையும் எப்படி பயன்படுத் திக்கொள்கிறார்கள், ரசிகர் களின் ஆதரவு என்பதைத் தாண்டி மக்கள் ஆதரவை நோக்கி எப்படிப் பயணப்படு கிறார்கள் என்பதிலிருக்கிறது சாதனை. அரசியல் பயணத் தின் தொடக்கத்தில் பிரகாசித்த விஜயகாந்த், கடைசிக் கட்டத்தில் சில தவறான அணுகுமுறை களைக் கையாண்டார். விஜய் ஆரம்பத்திலே தடுமாறுகிறார். போகப் போக சுதாரித்துக்கொண்டு பிரகாசிக்கிறாரா பார்க்கலாம்.

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு

Advertisment

நிதிஷ், சிராக் பஸ்வான் விருந்தைப் புறக்கணித்த முஸ்லிம்கள், லாலுவின் அழைப்பை ஏற்றுக்கொண்டிருக்கிறார்களே?

நிதிஷும் பஸ்வானும் கடந்த பத்தாண்டுகளாக பா.ஜ.க.வுடன் இருக்கிறார்கள் என்பதைப் பார்க்கமுடியாத அளவுக்கு பீகார் முஸ்லிம்கள் குருடர்களா? பாராளுமன்றத்தில் வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்துக்கு இந்த இரு கட்சிகளும் எந்தப் பக்கம் வாக்களிக்கும் என அறியாதவர்களா? வெளிப்படையாகவே முஸ்லிம் வெறுப்புடன் இயங்கும் கட்சியுடன் கூட்டணியிலிருக்கும், ஒரு கட்சியின் விருந்தை ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும்?

த.சத்தியநாராயணன், அயன்புரம்

Advertisment

தமிழ்நாட்டில் இந்தியை தைரியமாக எதிர்க் கிறார்கள் என்று ராஜ்தாக்கரே பாராட்டியுள்ளாரே?

அதுமட்டுமா! "மராத்தி பேச மறுத்தால் கன்னத் தில் அறையுங்கள்' என்றும் சொல்லியிருக்கிறார். அங்கேதான் சிவசேனை தவறு செய்கிறது. கட்சிரீதி யாக ஒரு இயக்கத்தைக் கட்டியெடுத்து, மராத்தியை வளர்ப்பதற்கான ஆக்கபூர்வ வழிகளை முன்னெடுக்க வேண்டும். கன்னத்தில் அறையுங்கள், கட்டிவைத்து அடியுங்கள் என்பது வன்முறை வழி. காலகாலமாக வன்முறை வழியில் இயங்கிவிட்டு, திடீரென அதன் தலைவர்களுக்கு பாதையை மாற்றிக்கொள்வது சிரமமான ஒன்றுதான்.

எஸ். மந்திரமூர்த்தி, புதுப்பெருங்களத்தூர்

எழுபத்தைந்து வயதை நெருங்கவிருக்கும் மோடி பிரதமர் பதவியில் இருக்கலாமா?

எழுபத்தைந்து வயதோ, அதற்கு மேலோ இந்திய அரசியலமைப்புச் சட்டம் எந்தத் தடையும் சொல்வதில்லை. ஐந்தாண்டுக்கு ஒருமுறை தேர்தலில் நின்று ஜெயித்து பெரும்பான்மையைப் பெற்றிருந்தால் போதும். நாக்பூர் தலைமை அலுவலகம் வரை மோடி போய்வந்திருப்பதால், ஏதோ பேச்சுவார்த்தையும் சுமுக முடிவும் எட்டப்பட்டிருக் கும். மோடிக்கு ஆர்.எஸ்.எஸ். செக் வைப்பதாக இருந்தால் அது அடுத்த மக்களவைத் தேர்தலில்தான் இருக்கும்.

மா.சந்திரசேகர், மேட்டுமகாதானபுரம்

விவசாயிகளை ஏமாற்றுவது யாருக்கும் நல்ல தில்லை என்கிறாரே நிர்மலா சீதாராமன்?

கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேலாக டெல்லி, பஞ்சாப்பில் போராடிக்கொண்டிருக்கும் விவசாயிகளின் கோரிக்கைக்கு உரிய பதிலளிக்காமல் ஏமாற்றுவது யாரென்று அவர் தன் மனசாட்சியையே கேட்டுக் கொள்ளட்டும்.

எச்.மோகன், மன்னார்குடி

முதலில் எடப்பாடியார், அடுத்து செங்கோட்டையன், அடுத்து பா.ஜ.க. தலைமை அழைக்கப்போவது யாரை?

மத்திய அரசு நம்மைத் தான் மதிக்கிறது என்ற தோற்றத்தை ஆளாளுக்கு ஏற்படுத்தி, கட்சியைப் பிரித்தாளும் யுக்தி இது. யாரை வேண்டுமானாலும் அழைத்துவிட் டுப் போகிறது. இப்போது ஜெ. இருந்திருந்தால் பா.ஜ.க. இப்படி அழைப்புவிடுக்குமா? நேராக மத்திய அமைச்சர் ஒருவர் கிளம்பிவந்து போயஸ்கார்டனில் உரிய மரியாதையுடன் கூட்டணி பற்றி பேசிவிட்டுக் கிளம்புவார் தானே. இப்போது ஒவ்வொருவராக டெல்லிக்கு வந்து பார் என்று அழைக்கிறார்கள் என்றால், கட்சி மீதான மரியாதை தேய்ந் திருக்கிறது. பதவி சுகத் துக்காக அ.தி.மு.க.வின ரின் சுயமரியாதையும் தேய்ந்திருக்கிறது.

எஸ்.கதிரேசன், பேர்ணாம்பட்டு

உத்தரப்பிரதேச மாநிலத்தில் மதுபாட்டில் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என மாநில அரசு அறிவித்திருப்பது எதைக் காட்டுகிறது?

ஒன்றுக்கு ஒன்று கொடுத்தால்கூட மாநில அரசுக்கு மது விற்பனையில் லாபமிருப்பதைக் காட்டுகிறது. தனியார் நிறுவனத்தைப் போன்று இலவச ஆஃபர் கொடுத்து மக்களை அதிகம் குடிக்கவைத்து லாபம் ஈட்டத் துடிக்கும் பேராசை தெரிகிறது. குடி குடியைக் கெடுக்கும் என்பது மது பாட்டில் வாசகம். இப்போது மாநில அரசுகளே குடி கெடுக்கத் தொடங்கிவிட்டன.

க.சந்திரகலா, விழுப்புரம்

பென்குயினுக்கும் டேரிஃப் போட்டிருக் கிறாராமே ட்ரம்ப்?

உலகமெங்கும் அமெரிக்கா வுக்கு ஏற்றுமதி செய்யும் நாடுகளின் மீது, நாடு களைப் பொறுத்து வகை வகையாய் வரிவிதித்திருக் கிறார் ட்ரம்ப். அதுதான் டேரிஃப். அதில் மெக்டொ னால்ட் தீவும் அடக்கம். இது ஆஸ்திரேலியலி அன்டார்டிகா கண்டங்களுக்கு இடையில் அமைந்துள்ளது. இங்கே மனிதர்களே வெகு குறைவு. அதிகம் தட்டுப் படுவது பென்குயின்கள் தான். இந்தத் தீவுக்கு வரிவிதித்திருப்பதால் தான் உலகமெங்கும் பென்குயினையும் ட்ரம்பையும் இணைத்து மீம்கள் தூள்பறக்கின்றன.