கொரோனா மூன்றாம் அலையின் தாக்கம் குறைந்து ஆசுவாசப் பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்கும் நேரத்தில், கேரளாவில் தக்காளிக் காய்ச்சல் சீசன் ஆரம்பித்திருப்பது கொடுமை.

கடந்த சில நாட்களாக, கேரளாவின் கொல்லம் மாவட் டத்திற்குட்பட்ட அஞ்சல், ஆரியங்காவு, கழுதுருட்டி உள்ளிட்ட பகுதிகளில் குழந்தைகளுக்கு திடீர் காய்ச்சல் ஏற்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து தொண்டைப் புண் எரிச்சல், வாய் மற்றும் நாக்கில் புண் ஏற்பட்டதுடன் தலைவலி, கை கால்கள் மற்றும் முதுகு போன்ற பாகங்களின் தோல்களில் அரிப்பு ஏற்பட்டு பாதங்களில் கொப்புளமாக மாறியதுடன், உடலில் சிகப்பு நிறத்துடன்கூடிய தடிப்புகளும் ஏற்பட்டுள்ளன.

cc

Advertisment

இந்த நோய் கண்ட குழந்தைகள் பசியின்மை காரணமாக சாப்பிட முடியாமல் அவதிப்பட்டுள்ளனர். கோடையின் போது காணப்படும் சிக்கன் பாக்ஸ் தாக்குதலைப் போன்றிருந்தாலும், உடலில் சிகப்பு நிறம் போன்ற தடிப்புகள் காணப்பட்டதால் தக்காளிக் காய்ச்சல் என்று மருத்துவ வட்டாரங்கள் சொல்கின்றன.

இந்த நோய் கண்ட 5 தினங்கள் காய்ச்சல், தொண்டைப் புண் போன்றவைகளோடு பசியின்மையாலும் குழந்தைகள் அவதிப்பட்டுத் துவண்டு போயிருக்கின்றனர். கொல்லம் மாவட்டம் முழுமையும் சுமார் 85-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தக்காளிக் காய்ச்சல் கண்டறியப்பட்டிருக்கிறது. குறிப்பாக 5 முதல் 10 வயது வரையிலான குழந்தைகளை மட்டுமே குறிவைத்துத் தாக்கும் தக்காளிக் காய்ச்சல், காக்ஸ்சாக்கி வைரஸ் ஏ.16 எனப்படுகிற வைரசால் ஏற்படுகின்றது.

அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக சிகிச்சைக்காக அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்குக் கொண்டுசெல்ல வேண்டும். உடலில் எதிர்ப்பு சக்தி குறைபாடுகளிருக்கும் குழந்தை களையே இந்நோய் தாக்குகிறது.

இதுகுறித்து மேலும் அறியும் பொருட்டு தென்காசி மாவட்ட அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் டாக்டர் ஜெஸ்லினிடம் பேசியபோது,

"கடுமையான வெயில், வெப்பமடித்த பின்பு உண்டாகும் மழை, மறுபடியும் வெயிலின் தகிப்பு என வழக்கத்துக்கு மாறான பருவநிலை காரணமாக இந்த நோய் ஏற்படுகிறது. இதுவும் ஒருவகையான ப்ளூ வைரஸ் வகையைச் சேர்ந்தது தான்''’என்கிறார்.

கேரளாவில் கண்டறியப்பட்ட தக்காளிக் காய்ச்சலின் தாக்கம் தமிழகத் திற்குள்ளும் பரவாமல் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில், தென்காசி சுகாதாரப் பணிகளின் துணை இயக்குனர் டாக்டர் அனிதா தலைமையிலான சுகா தார உயரதிகாரிகள் எல்லைப் பகுதியைத் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.