தி.மு.க.வின் தெற்கு மாவட்ட செயலாளரும், தமிழக சுகாதாரத்துறை அமைச்சருமான மாரத்தான் வீரர் மா.சுப்பிரமணியன், இளைஞர்களிடையே உடற்பயிற்சி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கடந்த 3 ஆண்டுகாலமாக கலைஞர் நினைவு மாரத்தான் போட்டிகளை சிறப்பாக நடத்தி வருகிறார்.

அந்த வரிசையில் கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு கடந்த 6-ந் தேதி சென்னையில் கலைஞர் நூற்றாண்டு நினைவு சர்வதேச மாரத்தான் போட்டியை நடத்தியிருக்கிறார் மா.சுப்பிரமணியன். இந்த போட்டி கின்ன ஸில் இடம் பெற்று உலக சாதனையைப் படைத்திருக்கிறது.

dd

இந்த மாரத்தான் போட்டி 5 கி.மீ., 10 கி.மீ., 21.1 கி.மீ., 42.2 கி.மீ. தூரம் என 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நடத்தப் பட்டது. இதில் 73,206 பேர் கலந்துகொண்டு ஓடினார்கள். கலைஞர் நினைவு மாரத்தான் போட்டியில் முதன்முதலாக 1,063 திருநங்கைகள், திருநம்பிகள் கலந்துகொண்டு ஓடியது உலக சிறப்பு.

இதுவரை சர்வதேச அளவில் மாரத்தான் போட்டிகள் பலமுறை நடந்திருக்கின்றன. ஆனால், அதில் திருநங்கைகள் கலந்து கொண்டது கிடையாது. முதல்முறையாக சென்னையில் கலந்து கொண்டனர். விடியற்காலை 4 மணிக்கு சென்னை மெரினா கடற்கரை அண்ணா-கலைஞர் நினைவிடத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். 73 ஆயிரம் பேரும் ஒரே இடத்தில் குவிந்ததால் மெரினா கடற் கரையே ஜெகஜோதியாக இருந்தது.

நினைவிடத்திலிருந்து துவங்கி காமராஜர் சாலை, கலங்கரை விளக்கம், பட்டினப்பாக்கம், முத்துலெட்சுமி பூங்கா, பெசன்ட் நகர், இந்திரா நகர், வாலாஜா சாலை, சிவானந்தா சாலை களில் நடந்து தங்களின் இலக்கை தீவுத்திடலில் நிறைவு செய்தனர் மாரத்தான் வீரர்கள்.

அமெரிக்கா, மலேசியா, பிரான்ஸ், இலங்கை, ஜப்பான், ஆஸ்திரேலியா, கனடா நாட்டு தூதர்கள் இந்த விழா வில் கலந்துகொண்டனர். ஆஸ்திரேலியா மற்றும் மலேசியா நாட்டு தூதர்கள் இருவரும் கலைஞரின் உருவம் பொறித்த டீ-சட்டை அணிந்து 21.1 கி.மீ. தூரம் கொண்ட மாரத்தானில் ஓடினார்கள்.

மாரத்தான் போட்டிகளில் கலந்து கொண்ட வீரர்களை உற்சாகப்படுத்த, அவர்கள் ஓடும் சாலைகளில் 7 இடங் களில் தமிழர்களின் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் பாரம்பரிய கலை நிகழ்ச்சி களும், செண்டை மேளங்களும் ஏற்பாடுகள் செய்திருந்தார் மா.சுப்பிர மணியன். அந்த இசை நிகழ்ச்சிகள் வீரர்களை உற்சாகப்படுத்தியது.

அதிகாலை 4 மணியளவில் தொடங்கிய இந்த போட்டிகள் காலை 9 மணிக்கு நிறைவு பெற்றது. இதில், கலந்துகொண்டு முதல் 3 இடங் களில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார் முதல்வர் ஸ்டாலின். அதன்படி, 42.2 மற்றும் 21.1 கி.மீ. பிரிவில் கலந்து கொண்டு ஓடிய வீரர்களுக்கு முதல்பரிசாக 1 லட்சம், இரண்டாம் பரிசாக 50,000, மூன்றாம் பரிசாக 25,000மும், 10 கி.மீ. பிரிவிற்கு 50,000, 25,000, 15,000 ரூபாயும், 5 கி.மீ. பிரிவில் பங்கேற்று முதல் மூன்று இடத்தை பிடித்தவர்களுக்கு 25,000, 15,000, 5,000 ரூபாயும் வழங்கப்பட்டது.

Advertisment

dd

விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ‘’கட்சி நிகழ்ச்சியாக இருந்தாலும், அரசு நிகழ்ச்சியாக இருந்தாலும், பொது நிகழ்ச்சியாக இருந்தாலும் அதில் தனக்கென்று தனி முத்திரை பதிப்பவர் மா.சுப்பிரமணியன். இவரைப் போல இங்கு இருப்பவர்கள் யாரும் ஓடமுடியாது. ஓட்டம் என்றாலே எங்களுக்கு வியர்த்துவிடும். ஓட்ட நாயகன் மா.சுப்பிரமணியனை, இனி மாரத்தான் சுப்பிரமணியன் எனச் சொல்லலாம். கலைஞரின் நினைவு மாரத்தானை உலக சாதனையாக நிகழ்த்தியிருக்கிறார்’என்று சொல்லி, மா.சு.வின் பல்வேறு சாதனை செயல்பாடுகளைச் சுட்டிக்காட்டினார்.

கடந்த 2020 மற்றும் 2021 ஆகிய இரண்டு ஆண்டுகளும் கொரோனா பரவல் காரணமாக மெய்நிகர் மாரத்தானாக நடத்தப்பட்டது. இதில் பங்கேற்று ஓடிய வீரர்களின் பதிவு கட்டணம் மூலம் கிடைத்த 23.42 லட்சம் மற்றும் 56.03 லட்சம் ரூபாய் முறையே அரசின் பேரிடர் நிவாரண நிதிக்காக தமிழக முதல்வரிடம் கொடுக்கப்பட்டது.

Advertisment

கடந்த 2022-ல் மா.சுப்பிரமணியன் நடத்திய மாரத்தான் போட்டி ஆசியா ரெக்கார்டினைப் பெற்றது. இந்த போட்டியின் மூலம் கிடைத்த 1 கோடியே 22 லட்சத்தை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் புதிய கட்டடம் கட்டுவதற்காக முதல்வர் ஸ்டாலினிடம் ஒப்ப டைத்தார் மா.சுப்பிரமணியன். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் வெளி மாநிலங்களிலிருந்தும் மருத்துவச் சிகிச்சைகளுக்கு வருபவர்கள் தங்குவதற்காக கட்டப்படும் இந்த கட்டிடப் பணி நடந்துவருகிறது.

தற்போது நடந்துள்ள கலைஞர் நூற்றாண்டு உலக சாதனை மாரத்தான் போட்டியில் கிடைத்த 3 கோடியே 42 லட்ச ரூபாயை முதல்வரிடம் ஒப்படைத்துள்ளார் மா.சுப்பிரமணியன். இந்தத் தொகையுடன் சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன கட்டடம் கட்டப்படவிருக்கிறது.

இதுபற்றி மா.சுப்பிரமணியனிடம் பேசியபோது, ‘’"பொது வாழ்க்கையில் தலைவர் கலைஞர் நிறைவேற்றிய ஒவ் வொரு திட்டமும் உலக சாதனைதான். நாங்கள் கலைஞர் பெயரில் ஒரு உலக சாதனையை நிகழ்த்தியிருக்கிறோம். கலைஞர் நூற்றாண்டு சர்வதேச மாரத் தான் போட்டியில் 73 ஆயிரம் பேர் கலந்துகொண்டு ஓடி கின்னஸ் சாதனை பெற்றது மிகப்பெரிய அங்கீகாரம். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை வைக்கும் ஒவ்வொருவருக்கும் கிடைத்த அங்கீ காரமாகத்தான் பார்க்கிறேன். இந்த சாதனையை இனி முறியடிப்பது கடினம். மாரத்தான் மா.சு. என முதல் வர் பாராட்டியது எனக்குப் பெருமை'' என்றார் மிகப்பெருமிதமாக!