புலிகளை ஒழிக்க நடந்த சதிகள்!

ந்தியாவின் பாதுகாப்புக்காகத் தமிழ் ஈழத்தை தங்கள் காலடியில் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற முயற்சிக்கு முட்டுக்கட்டையாக விடுதலைப்புலிகள் இருந்தார்கள் என்பதால்தான் அவர்களை அடியோடு ஒழித்துக்கட்டி விடுவது என்ற முடிவுக்கு ராஜீவ் வந்தார்.

அதுவும் தம்பியை ஒழித்துக்கட்டிவிட்டால் தங்கள் சாம்ராஜ்யம் கொடிகட்டிப் பறக்கும் என்றுகூட அவர் நினைத்திருக்கக் கூடும். அதனால் தம்பியை, யாழ்ப்பாணம் மருத்துவக் கல்லூரிக்குப் பேச்சுவார்த்தைக்கு வரும்போது ஒன்று கைது செய்துவிட வேண்டும்; அல்லது சுட்டுக் கொன்றுவிட வேண்டும் என்றுகூட தீட்சித்துக்கு ராஜீவ் உத்தரவிட்டிருக்கிறார்.

pp

Advertisment

On the night of 14/15 September 1987, I received a telephone call from Dixit, directing me to arrest or shoot Prabakaran when he came for the meeting. Telling Dixit that I would get back to him I placed a call to the OFC.LT.Gen.Depinder Singh directed me to tell Dixit that we, as an orthodox Army, did not shoot people in the back when they were coming for a meeting under the white flag. I then spoke to Dixit in Colombo and conveyed the message emphasising that I would not obey his directive. I pointed out that the LTTE supremo had been invited by the IPKF in order to find a solution to the problems in the implementation of the accord. Dixit replied, ‘He (Rajiv Gandhi) has given these instructions to me and the army should not drag its feet, and you as the GOC, IPKF will be responsible for it.’ (The Intervention in Srilanka Page:57)

""நீங்கள் சொல்கிறபடி யெல்லாம் செய்ய முடியாது. பேச்சுவார்த்தைக்கு நம் பிக்கையோடு வருபவர்களின் முதுகில் குத்தும் மோசமான செயலை எந்தக் காரணம் கொண்டும் செய்யமாட்டோம். இந்திய ராணுவத்திற்கென்று இருக்கின்ற தார்மீகக் கோட் பாடுகளுக்கு களங்கம் ஏற் படுத்தமாட்டோம் என்று தீட்சித்துக்கு பதில் சொல் லுங்கள்''’என்று தீபீந்தர் சிங் தன்னிடம் சொன்னதாகவும், அதையே தீட்சித்துக்குப் பதிலாகச் சொல்லியுள்ளார் ஹரிகிரட் சிங்.

பாரதநாடு பழம்பெரும் நாடு என்று பாராட்டப்பட்ட இந்திய துணைக்கண்டத்தின் பிரதமராக வந்தவர் விடுகின்ற உத்தரவா இது?

Advertisment

சமரசப் பேச்சுக்கு வருகின்ற ஒரு மாவீரனை சதி செய்து கைது செய்யவோ அல்லது சுட்டுக்கொல்லவோ உத்தரவிடுவது என்பது எவ்வளவு பெரிய அநாகரிகம்?

இந்திய அமைதிப் படைக்குத் தளபதியாகச் சென்றவர் ஹரிகிரட் சிங்காக இல்லாமல் வேறொரு கயவாளி சென்றிருந்தால் என்னவாகி யிருக்கும்?

தீட்சித் மட்டும் முதுகிலே குத்தச் சொல்லவில்லை… அதற்குப் பின்னாலே முப்படைத் தளபதி யான சுந்தர்ஜீ, பலாலிக்குச் சென்றபோது அவர் என்ன சொன்னார் என்பதையும் ஹரிகிரட் சிங் குறிப்பிடுகிறார்.

I am aware that you are not getting on with the High Commissioner who I know is doing his job and you must take action on his instructions. (The Intervention in Srilanka Page:77)

“தீட்சித் தனக்கு இடப் பட்ட உத்தரவுகளை, கடமை களை மிகச் சரியாகத்தான் செய்து வருகிறார். தீட்சித் உங்களுக்கு என்ன கட்டளையிடுகிறாரோ அதை நீங்கள் செய்துதான் ஆகவேண்டும் என ஹரிகிரட் சிங்கிடம் சுந்தர்ஜீ சொல்லியிருக்கிறார்.

இதிலிருந்து என்ன தெரிய வருகிறது…? தீட்சித் சொன்னபடி தம்பி பிரபாகரனை ஹரிகிரட் சிங் கொன்றிருக்க வேண்டும் என்றுதான் முப்படைத் தளபதி சுந்தர்ஜீயும் எண்ணியிருக்கிறார்.

ராஜீவ்காந்தி அப்படித் தான் உத்தரவிட்டிருக்கிறார் என்பதற்கு இதைக் காட்டிலும் ஆதாரம் வேறென்ன வேண்டும்?

ra

உண்மையில் சுந்தர்ஜீயின் ஆலோசனைப்படிதான் ராஜீவ்காந்தி இந்திய -இலங்கை ஒப்பந்தத்தில் கையெழுத் திட்டார். அமைதிப்படையை அனுப்பியதும் அவர் ஆலோ சனைப்படிதான். இந்தியப் பேரரசின் ஆட்சிப் பொறுப்பில் இருந்த ராஜீவ்காந்தி எல்லா வகையிலும் விடுதலைப் புலி களை ஒழித்துக்கட்டுவதற்கான ஏற்பாடுகளைத்தான் தொடர்ந்து செய்துவந்திருக்கிறார். புனித கங்கை பாயும் புண்ணிய பூமி இந்த இந்திய தேசம். காருண்ய சீலர் காந்தி தேசம். அமெரிக்க வல்லரசாலும் சோவியத் ரஷ்யா வாலும் ஆராதனை செய்யப் பட்ட ஆசியாவின் ஜோதி பண்டித நேருவின் பேரன், ராஜீவ்காந்தி அவர்களின் தகுதிக் கும் இந்தியாவின் பெருமைக்கும் இது ஏற்ற செயல்தானா?

இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சகமும் (ஙஊஆ) தஆர-வும் விடுதலைப்புலிகளுக்கு எதிராக மற்ற பெருவாரியான போராளி இயக்கங்களுக்கு ஆயு தங்களை வழங்கி விடுதலைப் புலிகளுக்கு எதிராகத் தாக்குதல் தொடுக்குமாறு தூண்டிவிட்டி ருக்கிறார்கள்.

இந்திய அமைதிப் படைகளுக்குப் புதிதாக வழங்கப்பட்ட ஏ.கே.47 துப் பாக்கிகளை இ.பி.ஆர். எல்.எஃப், என்ற ஐந்தாம் படைக்கு வழங்கியிருக்கிறார்கள்.

ஐந்தாம்படைக்கு ஆயுதங்களை ராணுவம் வழங்கிய ரகசியத்தை முன்னர் தஆர அமைப்பில் பணிபுரிந்து அதன்பின் மகா ராஷ்டிர மாநில தலைமைக் காவல்துறை அதி காரியாக பணியாற்றியவர் சொல்லியிருக்கிறார்.

யாரிடம்?

ஹரிகிரட் சிங்கிடம் சொல்லியிருக்கிறார்.

இதெல்லாம்… பரந்து விரிந்த பாரத தேசத்திற்குப் பெருமையான காரியங்களா?

ராஜீவ்காந்தி அவர்கள் எந்தவிதமான முன்யோசனையும் இல்லாமல் மேற்கொள்ளும் செயலைப் பற்றிய எந்தத் தெளிவும் இல்லாமல் ஒரு படை, ஓர் இராணுவம் இருக்கிறது என்ற காரணத் திற்காக பழியும் பாவமும் வந்துசேரும் செயலை எப்படிச் செய்ய முன்வந்தார்.

ஜெயவர்த்தனேவின் ராணுவ ஆட்சியில் இருந்து தமிழ் ஈழம் ரத்தம் சிந்திப் போராடி விடுதலையை வென்றெடுக்கும் நேரம் பார்த்து இந்திய அமைதிப்படை என்ற பெயரில் இந்திய ராணுவத்தை அனுப்பி அந்த விடுதலையைக் கெடுத்ததில் இவருக்கு என்ன லாபம்?

அமைதிப்படையை அனுப்பியதற்கு அவருக்கு இரண்டு நோக்கங்கள் இருந்திருக்கின்றன. ஒன்று, இந்தியாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ளும் வகையில் திரிகோணமலையில் அந்நிய சக்திகள் குறிப்பாகவும் சிறப்பாகவும் அமெரிக்கா காலூன்றாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.… தளம் அமைக்காமல் தடுத்து வைக்க வேண்டும்.

இரண்டாவது எந்தக் காரணத்தைக் கொண்டும் தமிழ் ஈழம் விடுதலை பெற்று தனி நாடாகப் போய்விடக் கூடாது.

இந்த இரண்டு காரணங்களைத் தவிர இந்தியப் படையை ராஜீவ் அனுப்பியதற்கு வேறு எந்தக் காரணமும் இல்லை.

ஈழ மண்ணில் அமைதிப்படை

எட்டுக் கட்டளைகள் என்னவானது? என்பதைச்…

(சொல்கிறேன்)

__________________

காதல் கனவு!

ரஜினி -ராதிகா -பாண்டியன் -சித்ரா உள்ளிட்டவர்கள் நடிப்பில், மனோபாலா இயக்கிய படம் ‘ஊர்க்காவலன்.’ சத்யா மூவிஸ் தயாரிப்பில் ஆர்.எம்.வீரப்பன் திரைக்கதை எழுதியிருந்தார்.

சங்கர்-கணேஷ் இசையில் சித்ரா -சசிரேகா -மனோ பாடிய எனது பாடல் இதோ...

uu

பல்லவி

ஆத்துக்குள்ள தீப்பிடிச்சா

யாருவந்து தீயணைப்பா

பூச்செடிக்கு வேரு பகை

பூமியில யாரு துணை

சரணம்-1

காதல் என்ன கெட்ட கனவா

கண்கள் ரெண்டும் செஞ்ச தவறா

வீணை என்ன பட்டமரமா -அது

தீயில்இட வந்த விறகா

துன்பம் என்னும் தூண்டில் மேலே

துள்ளித் துள்ளி ஆடும் மீனே

நீயும் நானும்

ஜாதி ஒன்றுதான்

சரணம்-2

கையில் ஒரு மின்னல் விளக்கு -என்

கண்ணில் எங்கும் துன்பமிருக்கு

பாதையின்றி இங்கு திரியும் -என்

வாழ்க்கை இது எங்கு முடியும்

நெஞ்சம் எங்கும் காயம் ஆச்சு

கண்ணீர்கூட தீயாப் போச்சு

ஏனோ ஏனோ

இன்னும் வாழ்கிறேன்

பல்லவி-2

ஆத்துக்குள்ள தீயுமில்ல

நீ கலங்க தேவையில்ல

முத்து முத்தா நீர் எதற்கு

நீ அழுதா நான் எதற்கு

(பாட்டுக் கச்சேரி தொடரும்)