ச்சத்திலும் திகிலிலுமாய். உறைந்துபோய் கிடக்கிறது நெல்லை மாவட்டத்தின் கிழக்கு கட லோரப் பகுதி யான திசையன் விளை உவரி வட்டங்கள்.

திசையன் விளை நகரின் தங்கத்துரை-சுமதி தம்பதி கூலித் தொழிலாளிகள். இவர்களது மகன் ராஜேந் திரன் தனி யார் பாலி டெக்னிக்கில் முதலாம் ஆண்டு பயின்று வரும் மாணவன். கடந்த அக் 9-ஆம் தேதியன்று குலசேகரப் பட்டினம் கோவிலுக்குச் சென்றுவிட்டுத் திரும்பிய ராஜேந்திரன், அக் 10-ஆம் தேதி முதல் காணவில்லை. பதறிப்போன பெற்றோர் அக்கம்பக்கம் தேடியும் கிடைக்காமல் போகவே, அவனது தாய் சுமதி திசையன்விளை காவல்நிலையத்தில் புகார் செய்திருக்கிறார்.

ff

Advertisment

இந்த நிலையில் ஜன 20-அன்று அருகிலுள்ள உவரி போலீசார், பைக் திருட்டுச் சம்பவம் காரணமாக திசையன்விளையைச் சேர்ந்த சிறுவன் ஒருவனைப் பிடித்து விசாரித்திருக்கிறார்கள். விசாரணையில் தகவல்கள் கிடைக்காமல் போகவே போலீசார் அவனை விடுவித்திருக்கிறார்கள்.

வெளியே வந்த அந்தச் சிறுவன், தன்னையொத்த தனது நண்பர்களான இரண்டு சிறுவர்களிடமும் செல்பேசியில் பேசியவன்...

"என்னய போலீசு புடிக்கும்போது நாம பண்ண கொலையப் பத்தித்தான் விசாரிக்கப் போறாங்களோன்னு பயந்திட்டேன். நல்லவேள. அத கேக்கல்ல. பைக் பத்தி வெசாரிச்சிட்டு வுட்டுட்டாங்க'’என்று லூஸ்டாக் விட்டிருக்கிறான். இந்தத் தகவல் மெல்ல காவல்துறையின் காதுவரை போக... சுதாரித்த திசையன்விளை போலீசார் மூன்று சிறுவர்களையும் அலேக்காகத் தூக்கி விசாரித்திருக்கிறார்கள். (மூன்று பேரும் மைனர்கள் என்பதால் நீதிமன்ற உத்தரவுப்படி பெயர்கள் மற்றும் படங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன).

போலீசாருக்கு வேலையே வைக்காத அந்த சிறுவர்கள் விவரித்தது கடுங்குளிரிலும் காக்கிகளை வியர்க்க வைத்துவிட்டதாம்.

அந்த மூன்று சிறுவர்களும் 16 வயதிற்கும் குறைந்தவர்கள். 8, 9, 11-ஆம் வகுப்பு படிப்பவர்கள். “"ராஜேந்திரனும், அந்த சிறுவர்களும் அடுத்தடுத்த தெருவைச் சேர்ந்தவுங்க. ராஜேந்திரனும், மற்றொரு 16 வயது சிறுவனும் ஒரே பெண்ணைக் காதலித்திருக்கிறர்கள். இந்தக் காதலில் இவர்களுக்குள் போட்டியும், விவகாரமும் ஏற்பட்டிருக்கிறது. இதனால் ஆத்திரத்திலிருந்த அந்தச் சிறுவன், தன் வயதிற்கு கீழுள்ள தனது இரு நண்பர்களுடன் சேர்ந்து அக். 10 அன்று ராஜேந்திரனிடம் நைச்சியமாகப் பேசி, தூத்துக்குடியின் தட்டார்மடம் அருகேயுள்ள சதுப்புக் காடுகளைக் கொண்ட எம்.எல். தேரியின் ஆளரவமற்ற பகுதிக்கு அவனை அழைத்து வந்திருக்கிறார்கள். பிறகு 4 பேரும் சேர்ந்து மது அருந்தியிருக்கிறார்கள். சிறிது நேரத்தில் போதை தலைக்கேறியதும் தகராறு ஏற்பட மூன்று சிறுவர்களும் சேர்ந்து ராஜேந்திரனை வெட்டிக் கொலை செய்தவர்கள், உடலை அங்கேயே புதைத்துவிட்டுத் திரும்பியிருக் கிறார்கள்' என போலீஸ் விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

ff

Advertisment

சிறுவர்களை சம்பவ இடமான எம்.எல். தேரிப்பகுதிக்கு வள்ளியூர் டி.எஸ்.பி. யோகேஸ்குமார், திசையன்விளை இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் ஜோஸ் உள்ளிட்ட போலீசார் அழைத்துவர, அவர்கள் புதைத்த இடத்தை அடையாளம் காட்டியிருக்கிறார்கள். சாத்தான் குளம் தாசில்தார் தங்கையா முன்னிலையில் மாணவன் ராஜேந்திரனின் உடலின் துண்டுகள் தோண்டி எடுக்கப்பட்டபோது, அவனது பெற்றோர் கதறியிருக்கிறார்கள். யாருமே கணிக்கமுடியாத வயதுடைய சிறுவர்கள் நடத்திய படுகொலையும் புதைத்த விதமும் ஏரியாவைத் தகிக்க வைத்திருக்கிறது.

அந்த மூன்று சிறுவர்களும் பள்ளியில் படித்தாலும் கஞ்சா, மது உள்ளிட்ட போதைப் பழக்கத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள். இந்தச் சிறுவர்களின் பெற்றோர் காலை கூலி வேலைக்குச் சென்றால் இரவு பொழுதுசாயும்போது வீடு திரும்புவது இவர்களுக்கு வாய்ப்பாகியிருக்கிறது. போதைக்கு அடிமையான இவர்கள், அதற்காக பணம் தேவைப்படுகிறபோது திருட்டிலும் ஈடுபடுவதுண்டு. இந்தச் சூழலில்தான் ராஜேந்திரன் காதலித்த ஒரு பெண்ணை சிறுவர்களில் ஒருவனும் காதலிக்க பகைமை முற்றி... கொலை, உடலை புதைப்பதுவரை போயிருக்கிறது.

"சம்பவத்திற்குப் பின் பல நாட்கள் மூன்று சிறுவர்களும், பதட்டமில்லாமல் தாங்கள் நடத்திய படுபாதகத்தை மறைப்பதற்காக "ராஜேந்திரன் திருநங்கைகளோடு போயிட்டான்' என்று ஒரு கதையையும் கிளப்பிவிட்டிருக்கிறார்கள்' என்கிறார்கள் இந்தப் பகுதியினர்.

இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் ஜோஸிடம் பேசியபோது, "சிறுவர்கள் சினிமா படம் பார்த்து இப்படி ஆயிருக்காங்க. சாப்புடலாம் வான்னு அவனக் கூட்டிட்டு 4 பேரும் ஒரே பைக்லதாம் போயிருக்காங்க. பொண்ணு படத்தக் காட்டி, சோஸியல் மீடியாவுல போட்டுருவோம்னு மிரட்டியிருக்கானுக. தகராறுல இப்படி பண்ணியிருக்காங்க. இந்த மாதிரி தப்பு பண்ணா ஆயுள் தண்டனை மாதிரி பெரிய தண்டனைல்லாம் எங்களுக்குக் கிடையாது. சிறுவர்கள் என்பதால் மூணு வருஷ தண்டனைதாம் குடுப்பாங்கன்னு அசால்ட்டா சொல்றாங்க. அந்த அளவுக்குப் போயிருக்காங்க. இந்த மாதிரி கொடூரக் கொலை கேசுகளுக்கு சின்ன வயசு சிறுவர்கள்னு பாக்கக்கூடாது. தண்டன கடுமையாயிருக்க, சட்டத்தைத் திருத்தணும்''’என்கிறார்.

மகனை இழந்த சுமதியோ, "நுங்கு வெட்டிச் சாப்படலாம்னு கூட்டிட்டுப் போயி தேரிக் காட்ல கொல பண்ணி, உடல துண்டு துண்டா வெட்டிப் பொதைச்சிருக்காங்க. திருநங்கைகளோட போய்ட்டாம்னு கௌப்பியும் வுட்டுருக்காங்க. ஒரே பையன எழந்து தனியா நிக்கவுட்டுட்டானு களே''’என கதறினார்.

-பி.சிவன்

படங்கள்: ப.இராம்குமார்