ள்ளக்குறிச்சி மாவட்டம் எடுத்தவாய்நத்தம் பஞ்சாயத்துத் தலைவியான வி.சுதா, சுதந்திர தினத்தன்று பள்ளிக்கூடத்தில் கொடி ஏற்றுவது உள்ளிட்ட தனது கடமைகளை நிறை வேற்றுவதற்கு போலீஸ் பாதுகாப்பு கேட்டுள்ளார். வன்னியர் செல்வாக்குமிக்க இப்பகுதியில் கடந்த வருடம் இவர் கொடியேற்ற அனுமதிக்கப் படவில்லை என புகார் சொல் கிறார். "நான் பட்டியலின ஜாதியைச் சேர்ந்தவள் என்பதால் ஆசிரியர் கூட்டமைப்பைச் சேர்ந்த அருண்குமார், துணைத் தலைவர் டி.கண்ணன் ஆகியோர் என்னைக் கொடியேற்ற அனு மதிக்கவில்லை. எனவே இந்த 75-வது சுதந்திர தினத்தில் எனக்கு பாதுகாப்பு அளிப்ப துடன், கொடியேற்றவும் அனு மதிக்கவேண்டும்'' என புகாரளித் துள்ளார். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியைச் சேர்ந்த செல்லக்கண்ணு, 500-க்கும் அதிகமான கிராமங்களில் ஆய்வுசெய்து கொடியேற்ற அனுமதிக்கப்படாத கிராமங்கள் குறித்து அரசுக்கு அறிக்கை அளிக்க முடிவு செய்துள்ளாராம். சாதிபேத மனப்பான்மையி லிருந்து இந்தியா வுக்கு என்று விடுதலை?

dd

Advertisment

ள்ளாட்சித் தேர்தலில் பல மாநிலங்கள் பெண்களுக்கு 50 சதவிகித இடஒதுக்கீடு வழங்குகின்றன. பெண்கள் அரசியல் வெளிக்கும், பிற துறைகளுக்கும் வருவதற்கு இது ஒரு ஊக்குவிப்பாக அமையும் என்பது எதிர்பார்ப்பு. இந்தத் தேர்தலில் வெற்றிபெற்ற பெண்களுக்குப் பதில், அவர்களது தந்தையோ, கணவரோ அதிகாரம் செய்வது இந்தியாவில் புதிதில்லை. ஆனால் வெற்றிபெற்ற பெண்களுக்குப் பதில் அவர்களது கணவர்களே உறுதிமொழி எடுப்பது நிச்சய மாகப் புதிதுதான். இது மத்தியப் பிரதேசத்தில் நடந்திருக்கிறது. தார், தமோ, சாகர், பன்னா, ரேவா உள்ளிட்ட பஞ்சாயத்துகளில் வெற்றிபெற்ற பெண் உள்ளாட்சி நிர்வாகிகளுக்குப் பதில், அவர்களது கணவர்களே தைரியமாக வந்து உறுதிமொழி எடுத்த கூத்து நடந்திருக்கிறது. இதையடுத்து அடுக்கடுக்காக எழுந்த புகாரால் ஆஸ்ரம் சாகு எனும் கிராமப் பஞ்சாயத்து செயலாளரை இடைநீக்கம் செய்திருக்கிறார்கள். ரொம்பத் துணிச்சல்தான்!

dd

வீட்டிலும் சமூக வலைத்தள டி.பி.யிலும் தேசியக் கொடி பறக்கவிட பிரதமரே சிபாரிசு செய்யும்போது, பா.ஜ.க. வினர் சும்மா இருப்பார்களா? ஹரியானாவின் கர்னல் பகுதியில் ரேஷன் கடைகளில், ஒவ்வொரு வரும் 20 ரூபாய்க்கு தேசியக் கொடி வாங்கவேண்டும், வாங் காதவர்களுக்கு ரேஷன் கிடை யாது எனச் சொல்லிவிட்டார்கள். ரேஷன் வாங்க வந்தவர்கள் முணுமுணுத்தபடியே கொடியை வாங்கிக்கொண்டு போக, உள்ளூர் செய்தி சானல் ஒன்று இதை பதிவு செய்து செய்தியாக்கி விட்டது. வீடியோ வைரலான நிலையில் குறிப்பிட்ட ரேஷன் கடை உரிமையாள ரின் உரிமம் ரத்து செய்யப் பட்டிருக்கிறது. அவரோ, அவர்கள்தான் தேசியக் கொடி வாங்காதவர்களுக்கு ரேஷன் தரவேண்டாமெனச் சொன்னார் கள். வீட்டில் கொண்டுபோய் ஒட்டும்படியும் சொல்லச் சொன்னார்கள். இப்போது என்னை பலிகடா ஆக்கிவிட் டார்கள் என்கிறார். இந்த விவகாரத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பாராளு மன்ற உறுப்பினர் வருண்காந்தி, வெட்ககரமான விஷயம் எனக் குறிப்பிட்டுள்ளார். நேஷனா ரேஷனானு பட்டிமன்றம் நடத்த விட்டுட்டாங்களே!

துவும் தேசியக்கொடி விவகாரம்தான். ஆனால் குஜராத் -கர்நாடக மாநிலம் சம்பந்தப் பட்டது. ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக் கொடி பறக்கவிடச் சொல்லி பிரதமர் மோடி சொன்னதால், அஞ்சல் நிலையங்கள் மூலமாகவும் தேசியக் கொடி விற்பனை நடைபெற்றுவருகிறது. இதுவரை கதர்த் துணியில்தான் தேசியக் கொடி தயாரிக்கவேண்டும் என கட்டுப்பாடு இருந்தது. அதற்கும் மோடி அரசு தளர்வுகொடுத்து பாலியஸ்டர் துணி பயன் படுத்தலாம் எனச் சொல்லி விட்டது. இதனால் கர்நாடகா வில் உள்ள அஞ்சல்துறை, குஜராத் டெக்ஸ்டைல் நிறுவனங் களிடம் 30 ஆயிரத்துக்கும் அதிகமான தேசியக் கொடி களுக்கு ஆர்டர் கொடுத்தது. இந்தக் கொடிகளில் ஏராளமான குறைகள் இருப்பதாக புகார் எழுந்துள்ளது. தேசியக் கொடியில் மூன்று வர்ணங்களும் சமமாக இல்லை. கொடியின் அளவும் 3:2 என்ற விகிதத்தில் இல்லை. அசோகச் சக்கரம் சரியான இடத்தில் அச்சிடப் படவில்லை என புகார்கள் எழுந்துள்ளன. வியாபாரம் முக்கியம்ல!

Advertisment

dd

ந்தப் படத்துக்குப் பின் ஒரு கதையிருக்கிறது. படத்தில் காணப்படும் நாய் வகையின் பெயர் பீகல். ஒரு வகை வேட்டை நாய். முத்தம் வாங்குவதுபோல் முகத்தோடு முகம் சேர்த்து இருப்பவரின் பெயர் சூ பெல். ஆபத்திலிருக்கும் செல்லப் பிராணிகளை தத்தெடுத்து வளர்க்கும் லாப நோக்கமில்லாத அமைப் பொன்றின் பிரதிநிதி இவர். அமெரிக்க ஆராய்ச்சி அமைப்பொன்றில் ஆயிரக் கணக்கான பீகல் நாய்கள் மனிதத் தன்மையற்ற விதத்தில் நடத்தப்படுவதாக வந்த புகாரையடுத்து, அந்த நாய்கள் வர்ஜினியாவின், கம்பர்லேண்ட் பகுதியிலிருந்து மீட்கப்பட்டன. பின் அவை செல்லப் பிராணிகளைப் பேணும் பல்வேறு அமைப்புகளுக்குப் பிரித்துக் கொடுக்கப்பட்டன. அதில் பன்னிரண்டு நாய்களை இந்த அமைப்பு தத்தெடுத் துக்கொண்டது. நாய்க்கும் சூ பெல்லுக்குமான அன்பின் தருணம் இது. ஆராய்ச்சிப் பிடியிலிருந்து அன்புப் பிடிக்கு!

-நாடோடி