மூகநீதி வரலாற்றில் மிக முக்கிய முன்னேற்றமாக பண்ணையார்கள் மற்றும் சாதிய ஆதிக் கத்தை ஒழித்து கோயில்களை அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவே இந்து சமய அறநிலைய வாரியம் உருவாக்கப் பட்டு பின்னர் அது பல சட்ட திருத்தங்களைக் கண்டு இந்து சமய அறநிலையத்துறை ஆனது.

கடந்த 18-6-2022ல் சென்னை அண்ணா கலையரங்கில் நடந்த தமிழ்நாடு கோயில் மனையில் குடியிருப்போர் சங்க மாநில மாநாட்டில் கலந்து கொண்ட அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, "இது குறித்து, முதல்வருடன் கலந்துபேசி உரிய தீர்வு காண்பதாகவும், அவர்களது கோரிக்கைகளை முதலமைச்சர் நிறைவேற்றுவார்'’என்றும் அறிவித்ததோடு செயல்வேகமும் காட்டினார்.

பிரச்னைகள் இப்போது எப்படி உள்ளது என இ.கம்யூ. கட்சியின் மாநிலச்செயலாளர் இரா.முத்தரசனிடம் கேட்ட போது, “"கோயில்கள் வெறும் கட்டிடங்களல்ல. கலைச் சின்னங் கள். அது மட்டுமின்றி கோயில் களை நம்பி பல லட்சக்கணக்கான குடும்பங்கள் உள்ளன.

Advertisment

ff

கடந்த 2003-ல் அன்றைய முதல்வர் ஜெயலலிதா, இந்து சமய அறநிலைய சட்டத்தில் 34/ஏ.பி.சி.டி. போன்ற பிரிவுகளை புகுத்தினார். அடி மனையின் சந்தை விலை மதிப்பில், சதுரஅடி கணக்கில் வாடகை வசூலிக்கப் பட்டது. ஆட்சி மாற்றத்துக்குப் பின் கலைஞர் நான்கு சட்டப் பிரிவுகளையும், முழுமையாக நீக்கி அரசாணைகள் 450 மற்றும் 29-ன்படி வாடகை, குத்தகையை சீரமைத்தார். ஆனால், 2016-ல் பலமடங்கு அதிகப்படியான வாடகையை ஜெயலலிதா மீண்டும் அறிவித்தார். மேலும், உயர் நீதிமன்ற ஆணையால், “பாக்கித் தொகைகள் முழுவதுமாக கட் டப்பட வேண்டும், வீட்டை காலி செய்திட வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டு வீடுகள், தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங் கள் பூட்டப்பட்டு சீல் வைக்கப்படுகின்றன. தலைமுறை, தலை முறையாக குடியிருப்பவர்களிடம் பதட்டமும் பயமும் அமைதி யின்மையும் ஏற்பட்டுள்ளது''’என்றார்.

கோ.ம.கு.சங்க மாநில நிர்வாகி எஸ்.ஏழுமலை, "முதல்வர், தலைமைச் செயலாளர் இறையன்பு ஐ.ஏ.எஸ். தலைமையில் உயர் மட்டக் குழுவை அமைத்தார். தற்போது நடைபெற்று வரும் தி.மு.க.வின் நல்லாட்சிக்கு களங்கம் ஏற்படுத்திட வேண்டும் என்கிற உள்நோக்கத்துடன் பிற்போக்கு சக்திகளுடன் கூட்டு சேர்ந்து சில அதிகாரிகள் வணிக நோக்கில் செயல்பட்டு வருகின்றனர். முதலமைச்சர் அமைத்த கமிட்டியின் செயல்பாடுகளும் பரிந்துரைகளுமே தமிழகம் முழுக்க உள்ள லட்சக்கணக்கான கோயில்மனைக் குடியிருப்போ ரின் வாழ்வாதாரங்களை சீர் செய்ய முடியும்''’என்கிறார்.

Advertisment

-சுந்தர் சிவலிங்கம்