மே 6-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு குமரி மாவட்டம் கணபதிபுரம் அருகேயுள்ள லெமூர் கடற்கரையில் கைகோர்த்த நிலையில் கடல் அலையில் கால்நனைத்தபடி உற்சாகத்துடன் நின்றுகொண்டிருந்த பயிற்சி மருத்துவ மாணவர்கள் 12 பேரில் 7 பேரை திடீரென்று ஆக்ரோஷத்துடன் எழுந்த கடல் அலை இழுத்துச்செல்ல... மாணவர் களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் நின்று கடலை ரசித்துக்கொண்டிருந்தவர்கள் ஓடிவந்தனர்.

2 மாணவர்கள் மட்டும் மீட்கப்பட்ட நிலையில் நெய்வேலியைச் சேர்ந்த காயத்ரி, நாகர்கோவில் சர்வதர்சித், ஆந்திரா வெங்க டேஷ், ஒட்டன்சத்திரம் பிரவீன் சேம், தஞ்சாவூர் சாருகவி ஆகிய 5 பேரை கடல் அலை சுருட்டி நடுக்கடலுக்குள் இழுத்துச்சென்றது. அவர்களைக் காப்பாற்ற கட லோர பாது காப்புக் குழும போலீசாரும் தீயணைப்பு வீரர்களும் வரு வதற்குள் கடலுக் குள் அந்த மாண வர்கள் பிணமாக மிதந்தனர்.

ll

திருச்சி எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் 17 பேர் நாகர்கோவிலில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்துவிட்டு 12 பேர் லெமூர் பீச்சுக்குச் சென்றனர். அப்போதுதான் இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது. கடல் அலையில் சிக்கி மீட்கப்பட்டு சிகிச்சையில் இருக்கும் பிரீத்தி பிரியங்காவிடம் நாம் பேசியபோது, "10 நிமிடம் மட்டுமே கடற்கரையில் கடல் அலையில் கால்நனைத்தபடி நின்றுகொண்டிருந்தோம். சாதாரண அலைதான் வந்துபோனது. பிறகு சற்று கொஞ்சம் வேகமாக ஒரு அலை எழுந்தது. அந்த அலையின் வேகம் எங்களுக்கு ஒருவித பதட்டத்தை ஏற்படுத்தியதால் கரைக்குச் செல்ல நாங்கள் ஒருவருக்கொருவர் கோர்த்து நின்றிருந்த கைகளை விட்டுட்டு தூரமாக தள்ளிச்செல்ல திரும்பினோம். அப்போது திடீரென்று வேகமாக எழுந்த ஒரு அலை கண்ணிமைக்கும் நேரத்துக்குள் ஏழு பேரையும் இழுத் துச்சென்றது. இதில் என்னையும் நேசியையும் அங்கு நின்றுகொண்டிருந்த இரண்டு பேர் சக மாணவர்கள் உதவி யுடன் காப்பாற்றி னார்கள். மற்ற 5 பேர் இறந்து விட்டதாகச் சொல்லுகிறார்கள்''’என கதறினார்.

Advertisment

லெமூர் கடற்கரைப் பகுதி குறித்து அந்த பகுதி மக்களிடம் நாம் கேட்டபோது, "இந்த பகுதி ஃபேமஸானதே கொரோனாவுக்குப் பிறகுதான். அந்தக் காலகட்டத்தில் இளசுகள் இங்கு வந்து ரீல்ஸ் எடுத்து அதை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதால் யூடியூப் மூலம் இந்த கடற்கரை வெளியுலகத்திற்குத் தெரியவந்தது. இப்போது கேரளா, தமிழகத்திலிருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகிறார்கள். தினமும் ஏராளமான திருமண பார்ட்டிகளும் இங்கு வந்து வீடியோ எடுக்கிறார்கள்.

இந்த பீச்சுக்கு உண்மையான பெயர் ஆயிரம்கால் பொழிமுகம். அந்தப்பெயரை மாற்றி யூடியூப் இளசுகள் வச்ச பெயர்தான் லெமூர். இங்கு சாதாரண அலையும் வேகமாக எழும் அலையும் பார்ப்பதற்கு ஒன்றுபோல் இருக்கும். ஆபத்தான அலை எதுவென்று கண்டுபிடிக்க முடியாது. அதனால் இங்கு உள்ளூர்வாசிகள்கூட வராமல் இருந்தனர்.

தற்போது கன்னியாகுமரிக்குப் பிறகு கடலை ரசிக்க இங்குதான் சுற்றுலாப் பயணிகள் அதிகம் பேர் வருகிறார்கள். அவர்களுக்கு இங்குள்ள ஆபத்தை உணர்த்தும்விதமாக எந்தவிதமான எச்சரிக்கை பதாகைகளும் இல்லை. அதை கணபதிபுரம் பேரூராட்சி நிர்வாகமும் கண்டுகொள்ளவில்லை. இவ்வளவு மக்கள் வருகிறார்கள் என்பது தெரிந்தும் ஒரு போலீஸ்கூட பாதுகாப்புக்கு நியமிக்கப்படவில்லை.

Advertisment

ll

இந்த பீச் ஃபேமஸான மூன்று ஆண்டுகளில் நான்குமுறை கள்ளக்கடல் அலை இழுத்துச் சென்றதில் முன்பே 10 பேர் இறந்துள்ளனர். கன்னியாகுமரி, முட்டம், தேங்காபட்டணம், குளச்சல், சொத்தவிளை என மக்கள் செல்கிற பீச்சுக்கள் இருந்தாலும் இந்த லெமூர் பீச்சில்தான் கள்ளக்கடல் அலை அடிக்கடி ஏற்படும். இந்த பீச் பார்ப்பதற்கு எவ்வளவு அழகாக இருக்கிறதோ அந்தளவுக்கு ஆபத்தும் இருக்கிறது. இனியாவது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றனர்.

பயிற்சி மருத்துவ மாணவர்கள் இறந்த லெமூர் பீச்சை பார்வையிட்ட மாவட்ட எஸ்.பி. சுந்தரவதனம், “"குமரி கடற்பகுதியில் 45 முதல் 65 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். கடல் அலை 1.5 மீட்டருக்கு எழும். அதனால் கடற்கரை பகுதிக்கு யாரும் செல்லவேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் முன்கூட்டியே எச்சரித்த பிறகும் இந்த மாணவர்கள் ஊர்ப்புறமாக கடற்கரைக்குள் நுழைந்துள்ளனர். அப்போது எழுந்த கள்ளக்கடல் அலைதான் அவர்களை அடித்துச் சென்றிருக்கிறது. மேற்கொண்டு இதைப்போன்ற சம்பவம் நடக்காமல் தடுக்க கடற்கரைப் பகுதிகளில் போலீஸ் ரோந்து தீவிரப்படுத்தப்படும்''’என்றார்.

d

இறந்துபோன மாணவர்களின் உடல்கள் வைக்கப்பட்டிருந்த ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்த அமைச்சர் மனோதங்கராஜ் உறவினர்களுக்கு ஆறுதல் கூறியதோடு இறந்தவர்களின் உடலை தாமதமின்றி உறவினர்களிடம் கொடுக்க நடவடிக்கைகளையும் எடுத்தார். அந்த மாணவர்களின் உடலைப் பார்த்து திருச்சியிலிருந்து வந்த சக மாணவர்களும் பேராசிரியர்களும் கதறியழுதது நெஞ்சை உலுக்கும்விதமாக இருந்தது.