தமிழ்நாடு சிமெண்ட் கழகமான டான்செம் (TANCEM ) நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருந்து ஓய்வுபெற்ற சபீதா ஐ.ஏ.எஸ்.ஸின் ஊழல் லீலைகளைப் பாடுகிறார்கள், அதன் ஊழியர்கள்.
தமிழக மக்களின் வரிப்பணத்தில் இயங்கிவரும் பொதுத்துறை நிறுவனமான, இந்த டான்செம் நிறுவனத்தை, கடந்த ஆட்சியில் 2017 முதல் 2019 வரை நிர்வாக இயக்குனராக இருந்து நிர்வகித்தவர் சபீதா ஐ.ஏ.எஸ். அவரது நேர்மையற்ற போக்கால்தான் இந்த நிறுவனமே கொஞ்சம் கொஞ்சமாக நலிவடைந்து, மூடும் அளவிற்குத் தள்ளப்பட்டது என்றும், அது தி.மு.க. ஆட்சி வந்தபிறகு அவர் ஓய்வுபெற்ற நிலையில், மீண்டும் லாபத்திசையில் ஓடத்தொடங்கி இருக்கிறது என்றும் கூறுகிறார்கள்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/IAS_4.jpg)
அப்படி என்ன செய்தார் சபீதா?
கடந்த 2018-ல் டாப் லெவல் மேனேஜ்மண்ட் பணிக்குப் புதிய அதிகாரிகளைத் தேர்ந் தெடுப்பதில் முறைகேடுகள் அரங்கே றின. அதை எதிர்த்து டான்செம் அலுவலர்கள் மற்றும் ஊழியர் களின் கூட்டமைப்பு, சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதை விசா ரித்த நீதிமன்றம், டான்செம் மின் டாப்லெவல் பணி களுக்கு வெளியில் இருந்து ஆட்களைத் தேர்வு செய்யக் கூடாது என்றும், ஏற்கனவே உள்ள பணியாளர்களையே தகுதி அடிப்படையில் பதவி உயர்வுமூலம் அப்பணியிடங் களை நிரப்பவேண்டும் என்றும் உத்தரவிட்டது.
ஆனால் சபீதாவோ, நீதி மன்ற உத்தரவை மதிக்காமல், வழக்கு தொடர்ந்த டான் செம் பணியாளர்களைப் பழி வாங்கும் நடவடிக்கையைக் கையில் எடுத்து, பணியிட மாற்ற உத்தரவுகளைப் பிறப் பித்தார். நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக நேரடி பணி நியமனம் நடந்தது. அதில் விற்பனை பிரிவில் மேலாளர், துணை மேலாளர், உதவி மேலாளர் பணிக்கும், தொழில் பிரிவில் துணைப் பொது மேலாளர் மற்றும் துணை மேலாளர் பணிக்கும், நிதிப்பிரிவில் துணை மேலாளர் பணிக்கும் நேரடி நியமனத்திற்கு அழைப்பு விடுத்து, முறைகேடாக பணி நியமனம் செய்தார்.
விற்பனைப் பிரிவில் மேலாளர் வேலைக்கு விண்ணப்பிக்கக்கூட செய்யாத ஜாபர்அலி என் பவர் நியமனம் செய்யப் பட்டுள்ளார். இதேபோல் பல நியமனங்கள் நடந்தன. நிதிப் பிரிவில் துணை மேலாளர் பணிக்கு எஸ்.சி.ஏ., அதாவது பட்டியல் இன உட்பிரிவான அருந்ததியர், அதுவும் விதவைப் பெண்ணுக்கு வழங்க வேண்டிய பணியை, முறைகேடாக நரேஷ்குமார் என்பவருக்கு வழங்கினர். தொழில்நுட்பப் பிரிவில் துணை பொதுமேலாளர் பதவிக்கு, ரவிச்சந்திரன் என்ற ஒரு நபருக்கு மட்டும் அழைப்பு விடுத்து அவருக்கு மட்டுமே பதவி முறைகேடாக வழங்கப்பட்டுள்ளது, இதில் பல லட்ச ரூபாய் லஞ்சமாகக் கைமாறியது என்கிறார்கள். இப்படி பல்வேறு நியமனங்களிலும் முறைகேடு நிகழ்த்தப் பட்டிருக்கிறது.
டான்செம் இயக்குன ராக இருந்த சபீதா ஐ.ஏ.எஸ். பணி ஓய்வடைந்தபோது, ஈட்டிய விடுப்புத் தொகையை கருவூலம் மூலம் எவ்வளவு தொகை வழங்க வேண்டும் என்று தணிக்கைத்துறை பரிந்துரையின் பெயரில் வழங்க வேண்டும். ஆனால் அவரின் ஆதரவாளர்களான சீமாஸ்கேரியா மற்றும் நரேஷ் குமார் ஆகியோர் முறைகேடாக 23 லட்ச ரூபாய்க்கு மேல் ஆன்லைன் மூலம் அரசு நிறுவனத்தின் வங்கி ஓவர் டிராப்ட் கணக்கிலிருந்து, சபீதாவின் வங்கிக் கணக்கிற்கு பணப் பரிமாற்றம் செய்துள்ளனர். ஆனால் கருவூல தணிக்கையின்படி 16 லட்ச ரூபாய்தான் வழங்க வேண்டும். முறைகேடாக இந்த பணப்பரிமாற்றம் ஓவர்டிராப்ட் கணக்கில் இருந்து வழங்கியுள்ளதால் 11.5% இதற்கு வட்டியாக செலுத்தப்பட்டுள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/IAS1_0.jpg)
இப்படிப்பட்ட சபீதா ஐ.ஏ.எஸ்.ஸின் ஊழல் தொடர்பாக, டான்செம் ஊழியர்கள் கூட்டமைப்பு அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி யிடம் புகாரை வழங்கியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அப்போதைய அரியலூர் தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவசங்கர் இந்த ஊழலை வெளியே கொண்டுவந்தார். அப்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின், தனது கண்டனத்தை ஓர் அறிக்கை மூலம் 20-2-2020 அன்று தெரிவித்தார். இப்போது ஆட்சிமாற்றம் ஏற்பட்ட நிலையில்... டான்செம் அலுவலர்கள், ஊழியர்கள் சங்கம் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சபீதா ஐ.ஏ.எஸ். பற்றி புகார் தந்தது. இதைத் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசிடம் அவர் அனுப்பினார். இந்தநிலையில், சபீதாவின் வலதுகரம் போன்ற நிதித்துறைச் செயலாளர் முருகானந்தம் இந்த புகாரைக் கொடுத்த டான்செம் ஊழியர்களைப் பணியிட மாற்றம் செய்து, அகவிலைப் படி வழங்காமலும் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகிறார்.
சபீதா ஐ.ஏ.எஸ். பணி ஓய்வுக்குப் பின் அப்பதவிக்கு முருகானந்தம் ஐ.ஏ.எஸ்., முரளிதரன் ஐ.ஏ.எஸ்., ஆர்த்தி ஐ.ஏ.எஸ்., அனில் மேஷ்ராம் ஆகியோர் பதவிக்கு வந்தபோதும் இந்த ஊழலைக் கண்டுகொள்ளவில்லை. இதனால் அலுவலகக் கூட்டமைப்பினர், தொழில்துறை செய லாளர் மீது வழக்குத் தொடர்ந்தனர். தொழில்துறை செய லாளராக இருக்கும் கிருஷ்ணனும், நிதித் துறைச் செயலாளரான முருகானந்தமும் சபீதாவின் ஆதரவாளர்கள் என்ப தால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை,
டான்செம்மின் இயக்குனராக தற்போதைய முதல்வர் ஸ்டாலினால் நேரடியாக நியமனம் செய் யப்பட்ட காமராஜ் ஐ.ஏ.எஸ்.ஸின் சிறப்பான பணி களால் டான்செம் நிறுவனம் மீண்டும் எழுந்துநிற் கத் தொடங்கியிருக்கிறது. நட்டத்தில் இருந்து இது மீண்டதோடு, கடந்த 8 மாதத்தில் மட்டும் சுமார் 120 கோடி லாபத்தில் இயங்கிவருகிறது, எனினும் சபீதாவின் ஆதரவு அதிகாரிகளால் தற்போதைய நிர்வாக இயக்குனர் காமராஜ் ஐ.ஏ.எஸ்.ஸுக்கு பல நெருக்கடிகள் கொடுக்கப்பட்டு அவரது வேலை களை முடக்கும் முயற்சிகளும் நடக்கிறதாம். இது தொடர்பாக ஓய்வுபெற்ற டான்செம் நிர்வாக இயக்குனர் சபீதாவை நாம் பலமுறை தொடர்பு கொண்டும் அவர் செல்போனை எடுக்கவில்லை.
முதல்வரின் பார்வை டான்செம்மில் இருக்கும் கருப்பு ஆடுகள் பக்கம் திரும்புமா?
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-01/ias.jpg)