தி.மு.க. அரசு நிறைவேற்றியுள்ள சட்டத் திருத்த மசோதா, பணியாளர் களை நெகிழ வைத்துள்ளது. தமிழகத்தில் ஜவுளிக்கடைகள் மற்றும் வர்த்தக நிறு வனங்களில் பல லட்சக் கணக்கான ஊழியர்கள் நின்றுகொண்டே பணிபுரிந்து வருகின்றனர். கடைகளுக்கு மக்களின் கூட்டம் வராதபோதும், வேலை இல்லாதபோதும் அவர்களால் உட்கார முடியாது; அவர்களுக்கான இருக்கைககள் வர்த்தகக் கடை களில் இருப்பதில்லை.
நாள் முழுவதும் நின்றுகொண்டே பணிபுரியும் ஆண்கள், பெண்கள், முதியவர்கள் என பலரும் பல்வேறு உடல் உபாதைகளுக்கும், மன உளைச்சல்களுக்கும் ஆளாகின்றனர். இதனால் கால் எலும்பு தேய்மானம் உள்ளிட்ட பல நோய்கள் அவர்களை தாக்குகிறது.
இது தொடர்பாக, தமிழக அரசின் தொழி லாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசனின் கவனத்துக்கும் அரசு அதிகாரிகளுக்கும் பல கோரிக்கைகள் சென்ற நிலையில், உடனடி கவனம் செலுத்திய அமைச்சர் சி.வி.கணேசன், தொழிலாளர் நல ஆலோசனைக் குழுவின் கூட்டத்தை கடந்த 4-ந் தேதி கூட்டியிருந்தார்.
அதில், நின்றுகொண்டே பணி புரியும் தொழிலாளர்களின் பிரச்சினை கள் குறித்து ஆராயப்பட்டன. ஒவ் வொரு வர்த்தகக் கடைகளிலும் தொழிலாளர்கள் அமர்வதற்கான இருக்கைகள் ஏற்படுத்தவேண்டும் என்பதை சட்டமாகக் கொண்டுவரலாம் என ஆலோசனைக் கூட்டத்தின் இறுதியில் முடிவெடுக்கப்பட்டது.
இதற்காக, ஏற்கனவே இருக்கும் சட்டத்தில் திருத்தம் செய்து புதிய சட்ட மசோதாவை கொண்டுவருவதில் உறுதியாக இருந்தார் அமைச்சர் கணேசன். ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் அனைவரும் சட்டத்திருத்தத்தை ஏற்றுக்கொண்டதை யடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலினின் கவனத்துக்கு கொண்டுசென்று ஒப்புதலும் பெறப்பட்டது.
இந்த நிலையில், தமிழ்நாடு கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் சட்டத்தில் திருத்தம் செய்யும் சட்ட மசோதாவை சட்டமன்றத்தில் கடந்த 6-ந் தேதி தாக்கல் செய்தார் அமைச்சர் கணேசன். அதில், ஜவுளிக்கடைகள் உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்களில் நின்றுகொண்டே தொழிலாளர்கள் பணிபுரிவதால் ஏற்படும் பிரச்சினைகள், உட்காருவதற்கு இருக்கை வசதிகள் இல்லாத சூழல் ஆகியவை சுட்டிக்காட்டப்பட்டு, தொழிலாளர்கள் அமர்வதற்கான இருக்கைகள் இருக்க வேண்டுமென்பது வலியுறுத்தப்பட்டிருக் கிறது. அந்த சட்டத்திருத்த மசோதாவை ஒருமனதாக நிறைவேற்றியுள்ளது சட்டமன்றம்.
இதன்மூலம், இனி ஜவுளிக் கடைகள் உள்பட அனைத்து வர்த்தக நிறுவனங்களிலும் தொழிலாளர்களுக்கு இருக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும். தொழிலாளர் களிடம் மட்டுமல்ல மனிதாபிமானம் உள்ள அனைவரிடமும் வரவேற்பை பெற்றுள்ளது இந்த சட்டத்திருத்த மசோதா.