"காதல் திருமணம் செய்த எங்களுக்கு, என்னுடைய பெற்றோர்களால் ஆபத்து இருக்கு. காப்பாற்ற வேண்டுகின்றேன்'' என்றொரு புகாரும், "அவளுக்கு கல்யாணம் ஆச்சு. புருஷனும், குழந்தைகளும் இருக்காங்க.. ஏற்கனவே கல்யாணம் செய்தவளுக்கு மீண்டும் எப்படி கல்யாணம் செய்து வைப்பீங்க? மகளை மீட்டுத் தாருங்கள்'' என மற்றொரு புகாரும் இரு வேறு காவல் நிலையங்களில் ஒரே நேரத்தில் பாய, ஒரு நபர் குறித்த இரு வேறு புகார்களால் கிறுகிறுத்துப் போயிருக் கின்றனர் கோவை மாநகரப் போலீஸாரும், கடலூர் மாவட்டப் போலீஸாரும்!
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/marriage-story.jpg)
திங்கட்கிழமையன்று, கோவை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு வந்தனர் போத்தனூர் பகுதியை சேர்ந்த முகமது ஜக்காரியா, சாரா எனும் விஜய சாமுண்டீஸ்வரி தம்பதியினர். சாரா நம்மிடம், "விஜய சாமுண்டீஸ்வரியான நான் சாராவாக மதம் மாறி கடந்த ஜனவரி 20ஆம் தேதியன்று முகமது ஜக்காரியாவை காதல் திருமணம் செய்துகொண்டேன். அந்த நாளிலிருந்தே எனது பெற்றோர்கள் எங்களை வாழவிடாமல் தொந்தரவு செய்கின்றனர். இரவில் வந்து வீட்டின் வாசல் கதவை அடித்து நொறுக்குவது போன்று ரகளை செய்கின்றனர். விருத்தாசலத்தில் புகார் கொடுத்திருந்தனர். போலீஸாரும் விசாரித்தனர். ஆனால் பதில் கூற வில்லை. எனக்கு வேறொரு கணவர் இருப்பதாகவும், குழந்தைகள் இருப்ப தாகவும் கூறி, புகைப்படங்களைக் காட்டுகின்றனர். ஆனால் அந்த புகைப்படத்தில் இருப்பது நான் அல்ல, எனக்கொரு அக்கா இருக்கிறார். அவரின் குழந்தைகள்தான் அவை. மதம் மாறி திருமணம் செய்ததால் எங்களைப் பற்றி அவதூறு பரப்பி அசிங்கப்படுத்துகி றார்கள். எங்களை காவல்துறை தான் காப்பாற்ற வேண்டும்'' என்றார்.
இதேவேளையில், "கமிஷனரை சந்திக்க முடியாது, நேரமாகிவிட்டது'' என இவர்களின் மனுவை வாங்காம லேயே போத்தனூர் காவல்நிலையத்திற்கு அனுப்பிவைத்தது மாநகர காவல்துறை என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/marriage-story1.jpg)
இது இப்படியிருக்க, "கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் பகுதி கம்மாபுரத்தை சேர்ந்தவன் நான். என்னுடைய பெயர் பாரதிதாசன்'' என சுய அறிமுகம் செய்துகொண்டு, "எனக்கு இரு மகள்கள் உண்டு. மூத்தவள் விஜய சாமுண்டீஸ்வரி, இளையவள் வைத்தீஸ்வரி. மூத்தவள் விஜய சாமுண் டீஸ்வரிக்கு திருமணம் செய்து கொடுத்து 5 ஆண்டுகள் ஆகிவிட்டது. கடந்த 2020ஆம் ஆண்டு வேல்முருகன் என்பவருடன் அவருக்கு திருமணம் நடைபெற்ற நிலையில், அவர் பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றார். அவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
திடுமென கடந்த ஜனவரி மாதத்தில் விஜய சாமுண்டீஸ்வரி காணாமல் போக, கம்மாபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தேன். காவல்துறை விசா ரணையில் அவர் கோவை போத்தனூர் காவல் நிலைய எல்கையில் இருக்கின் றார் என்றனர். அதனடிப்படையில் அங்கு சென்றோம். அங்கு இவருக்கும், இன்னொருவருக்கும் திருமணம் ஆகிவிட்டதாகக் கூறுகிறார்கள். அங்குள்ள ஜமாத்தில் வைத்து பேசிப் பார்த்தோம். சிறிது நேரத்தில் அவளை அனுப்பி வைத்தனர். ஊருக்கு வந்து நல்லபடியாக இருந்த நிலையில், மீண்டும் அந்த பையன் வந்து கூப்பிட, அங்கிருந்து அவருடன் எஸ்கேப்பாகி விட்டாள். மீண்டும் கம்மாபுரம் காவல் நிலையத்தில் இரண்டாவது முறையாக புகார் அளித்தேன். ஏற்கெனவே திருமணமான பெண்ணுக்கு, இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில், கோவையைச் சேர்ந்த வாலிபர் மதம் மாற்றி திருமணம் செய்வது எவ்வகையில் நியாயம்? அந்த குழந்தைகளுக்கும், அவளுடைய கணவனுக்கும் என்ன பதில் இருக்கின்றது? இதில் நான் மிரட்டுகின்றேன் என்கிறார்கள்'' என்கின்றது அப்பா வெளியிட்ட வீடியோ. இதே செய்தியைத்தான் காவல்துறையில் அளித்த புகாரிலும் இவர் தெரிவித்திருக்கிறார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/marriage-story2.jpg)
காவல்துறையோ, "விசாரணை நடை பெற்றுக்கொண்டிருக்கின்றது. சம்பந்தப்பட்ட கணவர் வேல்முருகனின் பதிலுக்காகக் காத்துக்கொண்டி ருக்கின்றோம்'' என்கின்றது. பெற்றோருக்கும் மகளுக்கும் இடையிலான இந்த மர்மக் கதையில், எது நிஜம் என்ற கேள்விக்கான பதில், அப்பெண்ணின் கணவர்களாகச் சொல்லப்படும் இரண்டு ஆண்களிடம்தான் இருக்கிறது! அதுவரை யார் சொல்வது உண்மை என்பது மில்லியன் டாலர் கேள்விதான்!
படங்கள்: விவேக்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2025-03/marriage-story-t.jpg)