"முப்பது வருஷமா சங்கத்துல இருக்கேன். எத்தனையோ கலெக்டர்களை பார்த்திருக்கேன். இப்ப விருதுநகர் மாவட்ட கலெக்டரா இருக்கிற ஜெயசீலன் வேறமாதிரி நடந்துக்கிறாரு. ரொம்ப குசும்பு பிடிச்சவரா இருக்காரு''’என்று பேச்சைத் தொடங்கினார், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாநில துணைத்தலைவரான கண்ணன். 30 செகன்ட் வீடியோ கிளிப் ஒன்றை நம்மிடம் பகிர்ந்தார். விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன், அரசு ஊழியர் ஒருவரிடம், "சப்புன்னு அடிச்சிருவேன்' ’எனச் சொன்னதைப் பதிவு செய்திருந்த அந்த வீடியோ, அதே வார்த்தையை ரிபீட் செய்வதுபோல் எடிட் செய்யப்பட்டிருந்தது.

cc

நம்மிடம் தொடர்ந்து பேசிய கண்ணன் "தன்னோட பி.சி. அய்யனார்கிட்ட அடிச்சிருவேன்னு கோபமா பேசிருக்காரு கலெக்டர். கூட்ட அரங்கில் இந்தமாதிரி கோபப்படறவர், கலெக்டர் ரூமுக்குள்ள இதைவிட மோசமாத்தானே அரசு ஊழியர்களை நடத்துவாரு. இந்த ஒரு வருஷத்துல அரசு ஊழியர்களை கலெக்டர் படுத்துறபாடு சொல்லிமாளாது. கல்வித்துறை பில்டிங்ல கழிப்பறை பயன்படுத்தமுடியாத நிலைல இருந்ததுனால சிரமத்துக்கு ஆளான பெண் ஊழியர்கள் கலெக்டர்கிட்ட முறையிட்டாங்க. அதுக்கு கலெக்டர், ‘உங்களுக்கு வேற வேலை இல்லியா? அதான்.. இங்க வந்திருக்கீங்களா?'’ இந்தமாதிரி பேசி மேலும் நோக டிச்சிருக்காரு. மாநில அளவுல எடுத்த முடிவுப்படி செவிலியர் சங்கப் பிரதிநிதிகள், கலெக்டர் மூலம் முதலமைச்சருக்கு மனு அளிப்பதற்காக, கலெக்டரைப் போய் பார்த்தாங்க. அவங்ககிட்ட கலெக்டர் "அரசாங்கத்தோட நிதி வருவாய்ல 61 சதவீதம் அரசு ஊழியர்களுக்கு ஊதியமா போயிருது. நீங்க ஒழுங்கா வேலை செய்யாம போராடுறீங்க. இங்க வந்திருக்கீங்க'ன்னு குரலை உயர்த்திப் பேசிருக்காரு. செவிலியர்கள் அழுதுகிட்டே வெளிய வந்திருக்காங்க. அரசு ஊழியர்களை கலெக்டர் டீஸ் பண்ணுறது ரெகுலரா நடக்குது.

டி.ஆர்.ஓ/வா இருந்தாலும் கையெழுத்து வாங்க கலெக்டர் ரூமுக்குள்ள போனா நின்னுட்டுத்தான் இருக்கணும். கலெக்டரோட இருக்கைக்கு முன்னால ஆறு சேர் போட்டிருப்பாங்க. ஆனா, கலெக்டர் அவரோட சேர்ல உட்காரமாட்டாரு. பக்கத்துல ஒரு ரவுண்ட் டேபிள் இருக்கும். அங்க உட்காருவாரு. வேற வழியே இல்ல. யாரு போனாலும் நின்னுட்டுத்தான் பேசணும். தனக்கு முன்னால யாரையும் சேர்ல உட்காரவிட மாட்டாரு. அப்படி ஒரு சேடிஸ்ட்டா இருக்காரு.

Advertisment

இவரு கலெக்டரா வர்றதுக்கு முன்னால, கலெக் டர்கிட்ட கையெழுத்து வாங்கணும்னா, ஒரு ஆபிசரோடு கூட ரெண்டுபேர் போவாங்க. கையெழுத்து வாங்கிட்டு வந்திருவாங்க. அதேநேரத்துல கையெழுத்து வாங்க வந்த மற்ற ஆபீசருங்க, அவங்ககூட வந்தவங்க, பி.சி. ரூம்ல உட்கார்ந்திருப்பாங்க. இவரு வந்ததுக்கப்புறம், ஒரே நேரத்துல அஞ்சு ஆபீசர்கள் கலெக்டர் ரூமுக்குள்ள போக ணும். கூட வந்தவங்களும் போவாங்க. ஆக, கலெக்டர் முன்னால 15 பேரு வரிசையா நின்னுட்டு இருக்கணும். ஒரு ஆபீசர் கையெழுத்து வாங்குறதுக்கு குறைஞ்சது அஞ்சு நிமிஷம், கூடுனது பத்து நிமிஷம்வரை ஆயிரும். அப்படின்னா, வரிசைல கடைசிய நிக்கிற ஆபீசர், அவரு எவ்வளவு பெரிய பொறுப்புல இருந்தாலும், கலெக்டர்கிட்ட கையெழுத்து வாங்குறதுக்காக, 25 நிமிஷமோ, ஒரு மணி நேரமோ நின்னுட்டே இருக்கணும்.

பொதுவா மீட்டிங்ல எந்த அதிகாரியையும் பேரைச் சொல்லி கலெக்டர்கள் கூப்பிடமாட்டாங்க. பதவியைச் சொல்லித்தான் கூப்பிடுவாங்க. ஆனா.. இந்த கலெக்டர், இதுக்கு முன்னால இருந்த டி.ஆர்.ஓ.வ பேரைச் சொல்லித் தான் கூப்பிடுவாரு. எவ்வளவு வயசானவரா இருந்தா லும் பேரைச் சொல்லித்தான் கூப்பிடறாரு. ஒரு டிஸ் ட்ரிக்ட் லெவல் ஆபீசரை பேரைச் சொல்லிக் கூப்பிடும் போது.. அந்த மீட்டிங்கை அந்த ஆபீசருக்கு கீழே இருக்கிற செகன்ட் லெவல், தேர்ட் லெவல்ல உள்ளவங்க, டிரைவரும் அட்டென்ட் பண்ணிட்டு இருப்பாங்க. பப்ளிக்கும் இருப்பாங்க. இவரு பேரைச் சொல்லி கூப்பிடும்போது, அந்த உயரதிகாரியோட கவுரவம் போயிரும்ல? ஒரு பேச்சுக்கு சொல்லுறேன். நாங்களும் கலெக்டர் சார்னு சொல்லாம, ஜெயசீலன்னு பேரைச் சொல்லிக் கூப்பிட்டா, அது நல்லாவா இருக்கும்?

cc

Advertisment

15 தலையாரிகளை வீட்டு வேலைக்கு வச்சிருக்காரு. அந்த 15 பேரும் விருதுநகர்ல 15 தாலுகாக்கள்ல வேலை பார்க்க வேண் டியவங்க. வீட்டுக்கு காய்கறி வாங்குறது, வீட்டை சுத்தம் பண்ணுறது, துணி துவைக் கிறதுன்னு எல்லா வேலையவும் பார்த்துட்டு இருக்காங்க.

இதுக்கு முன்னால ரெண்டு அல்லது மூணு பி.சி., டைப்பிஸ்ட், ஓ.ஏ., வாட்ச்மேன், டிரைவர்ன்னு கலெக் டர் சேம்பர்ல இருப் பாங்க. இவரு கலெக்ட ரா வந்தபிறகு, டிபார்ட்மென்டுக்கு ஒருத்தரை பி.சி.யா போட்ருக்காரு. மொத்தம் 20 பி.சி. போட்ருக்காரு. அந்த டிபார்ட்மென்ட் ஃபைல்ன்னா, அந்த பி.சி. மூலமாத்தான் கலெக்டர்கிட்ட போகும். யாரும் கலெக்டர் கிட்ட நேரடியா பேசமுடியாது. அந்த பி.சி. மூலமாத்தான் பேசணும். அந்த 20 பி.சி.க் களுக்கும், அவங்க துறை அலுவலகத்துல பார்க்கவேண்டிய வேலை போச்சுல்ல? இதெல்லாம் கலெக்டருக்கு தெரியல. ஆனா பாருங்க.. பள்ளிக்கல்வித்துறைல நல்லா செயல்பாட்டார்னு சிறந்த மாவட்ட ஆட்சி யருக்கான விருது இவருக்கு கிடைச்சிருக்கு. இவரு கலெக்டரா வர்றதுக்கு முன்னால இருந்தே விருதுநகர் மாவட்டம், கல்வியி லும் சுகாதாரத்திலும் முதன்மையா இருக்கு.

வேற எந்த மாவட்டத்துலயும் இல்லாத நடைமுறையா, விருதுநகர் மாவட்ட அங்கன் வாடி மையங்கள்ல கேமரா பொருத்தணும்னு கலெக்டர் பிடிவாதம் பிடிச்சதும், பெண் ஊழியர்கள் போராடியதும், கழிவறைகளுக்கு பூட்டு போட கலெக்டர் உத்தரவிட்டதும், போராடிய பெண்கள் பரிதவித்ததும், நாலு மாசத்துக்கு முன்னால நக்கீரன்ல செய்தியா வந்துச்சு. ரொம்பவும் நேர்மையான கலெக் டர்னு சொல்லிற முடியாது. தீப்பெட்டி, பட்டாசு லைசன்ஸ் சமாச்சாரம் எல்லாம் கலெக்டர் கையிலதான் இருக்கு. கலெக்ட ரோட ஊழியர் விரோதப்போக்கை கண் டித்து தொடர்ந்து சங்கம் போராடிட்டிருக்கு. அரசாங்கத்துக்கு புகார்களும் போய்க்கிட்டே இருக்கு. இங்கே கலெக்டரா வர்றதுக்கு முன்னால செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநரா இருந்தார் ஜெயசீலன். மேலிடத் தொடர்புகள் இன்றுவரையிலும் நீடிச்சிட்டு வர்றதுனால, பரமசிவன் கழுத்து பாம்பா, விருதுநகர் மாவட்ட அரசு ஊழியர்களை மிரட்டிட்டு வர்றார்''’என்று வேதனையுடன் விவரித்தார்.

நாம் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முனைவர் வீ.ப.ஜெய சீலனைத் தொடர்புகொண்டோம். “"எப்பவும் பொதுவெளில கவனமாத் தான் பேசுவேன். பி.சி.யை சப்புன்னு அடிச்சிருவேன்னு நான் சொன்ன மாதிரி தெரியல. எனக்கு ஞாபகமும் இல்ல. வீடியோவுல எடிட் எது வும் பண்ணுனாங்களான்னு தெரியல. செக் பண்ணனும். பிங்க் கலர் பேனா ஏதோ கேட்கிறேன். ஏஉட பெட்டி ஷன்ல பிங்க் பென்ல எழுதுவேன். மாவட்ட ஆட்சியரோட நேரடிக் கையெழுத்துடன் கூடிய குறிப்புங்கிறதுனால, அடுத்த வாரம் அதுக்கு நேரடியா பதில் சொல்லுவாங்க. அன்னைக்கு அந்த பி.சி. வேற கலர் பேனா கொடுத்தாரு. பிங்க் பென் எடுத்துட்டுவாங்கன்னு சொன்னேன். நான் பி.சி.கிட்டதான சொல்றேன். என்னோட பி.சி. ரொம்ப நல்ல பசங்க. கோபப்படற மாதிரி எதுவும் பண்ணமாட்டாங்க. சொல்லுறத செஞ்சிருவாங்க. இந்த வீடியோ, ஏதோ நோக்கத்தோட பண்ணிருக்க மாதிரி தெரியுது. இந்தமாதிரி ஏதாச்சும் ஒரு பிரச்சனைய கிளப்பிட்டே இருக்காங்க. இங்கே வேற ஒரு விவகாரம் ரொம்ப நாளா ஓடிட்டிருக்கு. அசோசியேசன்காரங்க சொல்லுற மாதிரி நடக்கணும்னு எதிர்பார்க்கிறாங்க. நெறய பிரஷர் கொடுக்கிறாங்க. அரசு ஊழியர்களை நிற்க வைக்கிறேன்னு சொல்லுறது எல்லாம் ஹம்பக். அப்படி எதுவும் கிடையாது. அசோசியேஷன் காரங்கள உட்காரவைக்கவே தேவையில்ல. அவங்களே வந்து உட்கார்ந்திருவாங்க. நான் அப்படி நடந்துக்கிட்டா இந்த மாவட்டத்துல ஒரு வருஷமா வேலை பார்க்கமுடியுமா? கொஞ்சம் ஸ்ட்ரிக்டா வேலை வாங்குறோம். அது உண்மைதான். நான் இங்கே வந்தப்ப கிட்டத்தட்ட எல்லா பேராமீட்டர்ஸும் பின்னாடி இருந்தது. இப்ப மாநில அளவுல மிகச்சிறப்பா செயல்படற மாவட்டங்கள்ல ஒண்ணா விருதுநகர் மாவட்டம் திகழுது. நெறய மீட்டிங் நடத்துறதா சொல்றாங்க. மீட்டிங் நடத்தக்கூடாதுங்கு றாங்க. மீட்டிங் நடத்தலைன்னா எப்படி வேலை செய்வாங்க? இந்த மாவட்டத்துல எல்லா பென்டிங் ஒர்க்கும் முடிச்சுக் கொடுத்திருக்கேன். இன்னைக்கு காலியாச்சுன்னா நாளைக்கு ப்ரமோஷன் கொடுத்திருவோம். இதுவரைக்கும் யாரும் பண்ணாத நிறைய ப்ரமோ ஷன்ஸ் போட்ருக்கோம். 15 தலையாரிகளை வீட்டு வேலைக்கும் சொந்த வேலைக்கும் வச்சிருக்கேனா? கலெக்டர் கேம்ப் ஆபீஸ்ல ரெண்டே பேர்தான் வேலை பார்க்கிறாங்க. என் வீட்ல யாரும் வேலை பார்க்கல. 15 தலையாரிகள் வீட்டு வேலை பார்க்கிறாங்கன்னு சொல்றாங்கள்ல? அது உண்மைன்னா, அந்த தலையாரிகள் எந்தெந்த கிராமங்கள்ல இருந்து வர்றாங்க? அவங்க பெயர் விபரம் எல்லாம் தரச்சொல்லுங்க''’என்று சீரியஸாகக் கேட்டார்.

ஆட்சியரும் அரசு ஊழியர் சங்கத்தினரும் எதிரும் புதிருமாக நடந்துகொண்டால், மாவட்ட நிர்வாகத்தின் திட்டங்கள், நல்லபடியாக மக்களிடம் போய்ச் சேருமா?

cc