திருவண்ணா மலை வேலூர் சாலையில் மாவட்ட ஆட்சியர் அலுவல கம் அருகே அமைந் துள்ளது திருச்செந்தூர் பெட்ரோல் பங்க். இந்த பெட்ரோல் பங்கில் டிசம்பர் 24ஆம் தேதி மாலை, இரண்டு இரு சக்கர வாகனங்களில் வந்த நான்கு இளை ஞர்கள் பெட்ரோல் போட்டுவிட்டு, பணத்தை இவர் கொடுப்பார், அவர் கொடுப்பாரென மாறி மாறிக் கூறி யிருக்கிறார்கள். இதனால் பெட்ரோல் பங்க் ஊழியருக்கும், அந்த இளைஞர்களுக்கு மிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதைப்பார்த்து மேலாளர் ரகுராமன், ""என்னடா பிரச்சனை செய்யறிங்க? பணம் தந்துட்டு போங்கடா!'' எனச் சத்தம் போட்டுள்ளார். அப்போது சிலர் இதனை வீடியோ எடுத்துள்ள னர். அவர்களை மிரட்டிவிட்டுச் சென்றவர்கள், அடுத்த அரை மணி நேரத்தில், கையில் பட்டாக்கத்தியுடன் மேலும் சிலரோடு பெட்ரோல் பங்க்கினுள் நுழைந்து, அலுவலக வாயிலில் நின்றிருந்த மேலாளர் ரகுராமனை உள்ளே தள்ளி அடித்ததோடு, பட்டாக்கத்தியால் வெட்டியதில், தலை மற்றும் கழுத்துப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் சுதாரித்துக் கொண்டு அந்த ரவுடிகளை விரட்டியடித்தபின், காயம்பட்ட ரகுராமனை திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத் துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தனர்.

ff

இச்சம்பவம் குறித்து திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, சி.சி.டி.வி. காட்சிகளின் உதவியோடு, தகராறு செய்தவர்களைத் தேடத் துவங்கினர். இதற் கிடையே, 'எங்களுக்கு பாதுகாப் பில்லை' எனக்கூறி, காலை 8 மணி முதல் 10 மணி வரை நகரத்திலுள்ள அனைத்து பெட்ரோல் பங்க்கு களும் ஸ்ட்ரைக்கில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட கீழ்நாத்தூர் விக்னேஷ், வேங்கிக் கால் மணிவாசன், ஜெகன்நாதன், பார்த்திபனை கைது செய்துள்ள போலீசார், மேலும் நால்வரைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

Advertisment

ரவுடி கேங்குகள் குறித்து அறிந்தவர்களான ஓ.சி.ஐ.யூ. டீமில் இருப்பவர்களிடம் பேசியபோது, ""இது பெட்ரோல் போட்டுவிட்டு பணம் தராததால் உருவான பிரச்சனை இல்லை, திட்டமிட்டு உருவாக்கப்பட்ட பிரச்சனை. இந்த பங்க், அமைச்சர் எ.வ.வேலுவின் மகனும், தி.மு.க. மருத்துவரணி மாநில துணைத்தலைவரு மான கம்பனுக்கு மிகமிக நெருக்கமான கென்னடி என்பருக்கு சொந்தமானது. இங்கு பிரச்சனை செய்தால் என்ன மாதிரியான விளைவு வரும் என்பது பிரச்சனை செய்தவர்களுக்கு தெரியும். தெரிந்தே செய்தார்களென்றால், பிரச்சனை வரவேண்டுமென்றே வம்பிழுத்திருக்கிறார்கள். பின்னர் அங்கிருந்து போவதுபோல் போய்விட்டு, மீண்டும் பட்டாக்கத்தியுடன் வந்து வெட்டி யுள்ளார்கள். அந்த வீடியோவை பார்த்தபோது, அவனுங்க நினைத்திருந்தால் அந்த மேலாளரை வெட்டிக் கொலை செய்திருக்க முடியுமென்று தெரிகிறது. ஆனால் அவனுங்க நோக்கம் அதுவல்ல, வேறு எதற்கோ திட்டமிட்டு பிரச்சனை செய்துள்ளனர்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு திருவண்ணா மலை நகர தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளர் உதயமுத்துவை கொலை செய்த வழக்கில், 7 பேர் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் முக்கியமானவர்கள் பிரவீன், அஷ்ரப், அவர்களை வழிநடத்தும் சோனாச்சலம் என்கிற பாலாஜி. இவர்கள், நாங்களும் ரவுடி தான் எனக் காட்டிக்கொண்டவர்கள். சிறையில் இவர்களைவிட பெரும் டான்களெல்லாம் உண்டு. இவர்களைப் போன்ற பசங்களை "எல்லாவிதமான ‘வேலை'க்கும் கட்டாயப்படுத்தி பயன் படுத்துவார்கள். அதுபோல் வேறு யாருக்காவது ஸ்கெட்ச் போடுவதற்காக தங்கள் கேங்க் பசங்களை சிறைக்குள் கொண்டுவர விரும்பியிருக்கலாம். அதற்காகவே பிரச்சனையை உருவாக்கியிருக்கலாமென்று சந்தேகிக்கிறோம். இதை சாதாரண அடிதடி வழக்காக போலீசார் பார்க்கிறார்கள். ஆனால் கொலைவழக்கில் சிக்கியவர்களின் நெட்வொர்க்கை ஆராய்ந்து, அந்த கேங்கில் இருந்தவர்களை காவல் நிலையத்தில் வைத்து போலீஸ் மொழியில் விசாரித்து அனுப்ப வேண்டும். அப்போதுதான் இதுபோல் கத்தியெடுத்துக்கொண்டு சுற்றமாட்டார்கள்."" என்றனர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வேலூரின் பிரபல ரவுடிகளான வசூர் ராஜா, ஜானி குரூப் திருவண்ணாமலை மாவட்டத்தில் கேங்கை உருவாக்கியது. இவர்கள், நகரத்தின் மாஸ் ரவுடிகளாக வேண்டுமென நினைக்கிறார்கள். அதுவே ஆன்மீக நகரில் நடைபெறும் க்ரைம்களுக்கு முக்கிய காரணம். எனவே ரவுடிகளை தேடிப்பிடித்து கடுமையாக ஒடுக்கினால் தான் ஆன்மீக நகரம் சாந்தமாகும்!

Advertisment

dd