தமிழகம், கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர்களின் வேட்டைக் காடாக மாறி வருகிறது என பரபரப்பான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
முதல்வர் அலுவலகத்தில் முதல்வரின் செயலாளர்களில் 4-வது இடத்தை பிடித்திருப்பவர் அனுஜார்ஜ் ஐ.ஏ.எஸ். கேரளாவைச் சேர்ந்தவரான இவர், ஒரு பெரிய லாபி செய்கிறார். மலையாளிகளான ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தமிழகத்தில் சர்வீசுக்கு வந்தால் அனுஜார்ஜை சந்திக்கிறார்கள். அவர்களுக்கு நல்ல போஸ்டிங்கை அனுஜார்ஜ் வாங்கிக் கொடுக்கிறார். இந்த மலையாளிகள் வடநாட்டவர்களை விட எளிதில் கையாளத் தகுந்தவர்கள். அவர்கள் சொந்த ஊரான கேரளாவுக்கு செல்வதென்றால் கூட சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சென்றுவிட்டு வந்துவிடுவார்கள். இப்படி மொத்தம் தமிழகத்தில் 16 கலெக்டர்கள் மலையாளிகள் என்கிறது ஐ.ஏ.எஸ். வட்டாரம்.
திருப்பூர் வினித், நாமக்கல் ஸ்ரேயாஸ், திருவள்ளூர் ஆல்பர்ட் ஜான் வர்கீஸ், ஈரோடு கிருஷ்ணன் உன்னி, செங்கல்பட்டு ராகுல், தென்காசி ஜான் தாமஸ் வர்கீஸ், கிருஷ்ணகிரி ஜேக்கப் ஆகியோர் இதற்கு உதாரணங்கள். சமீபத்தில் மாற்றப்பட்ட தென்காசி ஆகாஷ், திருநெல்வேலி விஷ்ணு, கோயமுத்தூர் சமீரன் ஆகியோர் மலையாளிகள். இவர்கள் அனைவரும் அனுஜார்ஜின் பார்வையில்தான் இருக்கிறார்கள். இதில் பலர் கேரளாவின் எல்லை மாவட்டங்களில் பணியிலிருக்கிறார்கள். அவர்கள் கேரளாவுக்கு உதவியாக தங்களது அதிகாரத்தைப் பயன்படுத்துகிறார்கள் என மாற்றப் பட்ட தென்காசி கலெக்டர் ஆகாசுக்கு எதிராக பெரிய குற்றச்சாட்டை முன்வைக்கிறார் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன்.
"மலையாளியான ஆகாஷ், தென்காசி கலெக் டராக இருக்கும்போது மலையாளி ஒருவர் சொந்தமாக வைத்திருந்த ஒரு ரிசார்ட்டுக்கு ஆதர வாக மற்ற ரிசார்ட்டுகளை மூடினார். ஒரு அணையி லிருந்து தண்ணீர் எடுத்து செயற்கை அருவிகளை உருவாக்குகிறார்கள் என பல தமிழர்களுக்கு சொந்தமான ரிசார்ட்டு களை ஆகாஷ் மூடினார்.
அதேநேரத்தில், குற்றாலத்திலிருந்து சில கிலோமீட்டர் தொலைவி லுள்ள கேரளாவின் செங்கோட்டை பகுதியில் மலையாளிகள் நடத்தும் பல ரிசார்ட்டுகளில், மேற்குத்தொடர்ச்சி மலையில் விழும் தண்ணீரைத் தேக்கிவைக்கும் செக்டேம்களி லிருந்து தண்ணீர் எடுத்து செயற்கை அருவிகளை உருவாக்கி, சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுத்து அறை ஒன்றுக்கு 10,000 ரூபாய் வாங்கக்கூடிய அளவில் மசாஜ், நீர்வீழ்ச்சி என கொள்ளையடிக்க ஆகாஷ் உதவி செய்தார். இதை நாங்கள் பொதுக்கணக்கு குழுவின் சார்பாக காங்கிரஸ் எம்எல்.ஏ. செல்வப் பெருந்தகையுடன் சென்று பார்த்துவிட்டு முதல்வரிடம் புகார் செய்தோம்.
முதல்வர் 2 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை அனுப்பி அதை ஆய்வு செய்தார். அதன் பிறகுதான் ஆகாஷ் மாற்றப்பட்டார்'' என மலையாளி ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் செய்யும் தகிடுதத்தங்களை அம்பலப் படுத்துகிறார் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலை வர் வேல் முருகன்.
காவல்துறையில் சட்டம் ஒழுங்கு பிரிவு கூடுதல் டி.ஜி.பி.யாக இருக்கும் சங்கர் ஒரு மலையாளி. அவர் பொய்யான தகவல் களைத் தருகிறார். பெரிய குற்றங்களை எல்லாம் சிறிய குற்றங்களாக மாற்ற முயற்சிக்கிறார் என பரபரப்பான குற்றச்சாட்டு நக்கீரனில் செய்தியாக வந்தது.
அதைத் தொடர்ந்து சங்கர் ஒரு சர்க்குலரை ஐ.ஜி.க்களுக்கும், டி.ஐ.ஜி.க்களுக்கும், எஸ்.பி.க்களுக்கும் அனுப்பியிருக்கிறார். நீங்கள் நடத்தும் கூட் டங்களில் உளவுப் பிரிவைச் சார்ந்த காவ லர்களை சேர்க்காதீர்கள் என அவர் அனுப்பிய சர்க்குலர் பரபரப்பாக பேசப்படுகிறது.
இவர் பொய்யான தகவல்களைத் தருகிறார் என சமீபத்தில் நடந்த சூளகிரி எருது விடும் திருவிழா தொடர்பாக நடந்த கலவரத்தை ஒட்டி மாநில உளவுத்துறை தலைவர் டேவிட்சன் தேவாசிர்வாதம் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமைகளைக் கண்காணிக்கத் துவங்கினார்.
அவருக்கு எந்த ரிப்போர்ட்டும் சென்றுவிடக்கூடாது என சங்கர், உளவுத்துறையினரை மீட்டிங்குகளில் சேர்க்காதீர்கள் என சர்க்குலர் அனுப்பியுள்ளார்.
இப்படி ஒட்டுமொத்த தமிழகமே கேரள அதிகாரிகளின் கைகளில் சிக்கிச் சீரழிகிறது என்கிற குரல்கள் பலமாக எழுந்து வருகிறது.
-ஆகாஷ்
படங்கள் : ஸ்டாலின்
___________
இறுதிச் சுற்று!
தமிழ்நாட்டில் முத்திரை பதிக்கும் திட்டங்கள் குறித்த கூட்டம் தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமை யில் 9-ந்தேதி வியாழக்கிழமை தலைமைச் செயலகத்தில் நடந்தது. திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு கருத்துக்களை இந்த கூட்டத்தில் பகிர்ந்து கொண்டார் ஸ்டாலின். குறிப்பாக, " அரசு என்பது முதலமைச்சர் மட்டுமல்ல. அமைச்சர்கள், அதிகாரிகள், அலுவலர்கள் ஆகிய மூன்றும் இணைந்தே நல்லாட்சியை தந்து வருகிறோம். கடந்த 20 மாதங்களில் பல நல்ல திட்டங்களை அறிவித்து அதனை செயல்படுத்தி வருகிறோம். மகளிர்களுக்கு கட்டண மில்லா பேருந்து, தினமும் காலை சிற்றுண்டி, மக்களைத் தேடி மருத்துவம், இலவச மின் இணைப்பு, மாணவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் என பல்வேறு திட்டங்களால் மக்கள் நம்மை பாராட்டுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. அதேபோல, அறிவிக்கப்பட்ட திட்டங்கள் செயல்பாட்டுக்கு வராமல் இருந்தால், அதற்கு என்ன காரணம் என்பதை துறையின் செய லாளர்கள் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
-கீரன்